உடல் பருமன் எனும் ஆபத்து
உடல் பருமன் என்பது உடல் கொழுப்பு அதிகமாவதால் ஏற்படும் சிக்கல்.
உடல் பருமன் என்பது அழகாக இருக்க மட்டும் யோசிக்க வேண்டிய விஷயம் கிடையாது. இது ஒரு உடல் ரீதியான மருத்துவப் பிரச்சினையாகும்.
இதய பிரச்சினைகள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்றவை ஏற்படக் கூடிய அபாயத்தை உடல் பருமன் அதிகரிக்கும்.
உடல் பருமன் ஏற்பட மரபணு, பழக்க வழக்கங்கள், ஹார்மோன் தாக்கங்கள் காரணமாக இருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் அன்றாட நடவடிக்கைகள் மூலம் நீங்கள் எரிக்கும் கலோரிகளை விட அதிக அளவு கலோரிகளை எடுத்துக் கொள்ளும்போது உடல் பருமன் ஏற்படுகிறது.
உங்கள் உடல் அதிகப்படியான கலோரிகளை தான் கொழுப்பாக சேமிக்கிறது.
உங்களுக்கு உடல் பருமன் இருக்கிறதா என்று கண்டுப்பிடிப்பது எப்படி?
உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 30 அல்லது அதற்கு மேல் இருக்கும் போது உங்கள் உடல் பருமனானது என்று சொல்கிறோம்.
உங்கள் பிஎம்ஐ தீர்மானிக்க, இந்த் கணக்கை செய்யுங்கள்
பிஎம்ஐ = எடை (கிலோக்ராம்) / (உயரம் (மீட்டர்))2
BMI = WEIGHT IN KILOGRAMS / (HEIGHT IN METERS)2
பிஎம்ஐ 18.5 – குறைந்த எடை
பிஎம்ஐ 18.5 - 24.9 – சரியான எடை
பிஎம்ஐ 25.0 - 29.9 - அதிக எடை
பிஎம்ஐ 30.0 - உடல் பருமன்
உடல் பருமன் ஏற்பட காரணங்கள்
உடல் பருமன் ஏற்படுவதற்கு பலக் காரணங்கள் உள்ளன. இதற்கு மரபு ரீதியான காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல், உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமை போன்ற பல காரணங்கள் உண்டு.
குடும்ப பரம்பரை தாக்கங்கள்
உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் பெறும் மரபணுக்கள் உங்கள் உடல் சேமித்து வைக்கும் கொழுப்பின் அளவையும், அந்த கொழுப்பு விநியோகிக்கப்படும் இடத்தையும் பாதிக்கலாம்.
உங்கள் உடல் நீங்கள் உட்கொள்ளும் உணவை எந்த அளவிற்கு எனர்ஜியாக மாற்றுகிறது, உங்கள் உடல் உங்கள் பசியை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது மற்றும் உடற்பயிற்சியின் போது உங்கள் உடல் கலோரிகளை எவ்வாறு எரிக்கிறது என்பதிலும் மரபியல் ஒரு பங்கைக் கொண்டிருக்கிறது.
சில குடும்பங்களில் குடும்பத்தினர் அனைவரும் பருமனாக இருப்பார்கள். இதற்கு அவர்கள் பகிர்ந்துக் கொள்ளும் மரபணுக்கள் மட்டும் காரணமல்ல. குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு மற்றும் செயல்பாட்டு பழக்கங்கள் இருப்பதும் காரணம்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியமற்ற உணவு - அதிக கலோரிகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் இல்லாத உணவு. பாஸ்ட் புட். அதிக கலோரி கொண்ட பானங்கள். இவை அனைத்தும் எடை அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது.
அதேப்போல உணவு பழக்கத்திற்கு ஏற்ற அளவுக்கு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும், எப்போதும் உட்கார்ந்துக் கொண்டே இருப்பதும் உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகும்.
சில நோய்கள், மருந்துகள்
சிலருக்கு அவர்களின் உடலில் இருக்கும் வியாதி அல்லது அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் உடல் எடையை அதிகரிக்கும்
உடல் பருமனால் ஏற்படும் சிக்கல்கள்
உடல் பருமன் பல வியாதிகள் வருவதற்கு காரணமாக இருக்கிறது.
- இதய நோய்
- பக்கவாதம்
- நீரிழிவு நோய்
- புற்றுநோய்
- செரிமான பிரச்சினைகள்
- தூக்கம் தொடர்பான பிரச்சனைகள்
- மூட்டு வலிகள்
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.