(Reading time: 3 - 5 minutes)

உடல் பருமனை தவிர்ப்பது எப்படி?

ங்களுக்கு உடல் பருமன் (obesity) பிரச்சனை இப்போது இல்லை என்றாலும், ஆரோக்கியமற்ற எடைக் அதிகரிப்பு ஏற்படாமல் தடுப்பது முக்கியம்.

தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதன் மேல் கவனம் வைப்பது போன்றவை உங்களுக்கு உதவும்.

 

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

எடை அதிகரிப்பதைத் தடுக்க நீங்கள் வாரத்திற்கு 150 முதல் 300 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

வேகமான நடைப் பயிற்சி, நீச்சல் போன்றவை சுலபமான ஆனால் சிறந்த பலனைக் கொடுக்கும் பயிற்சிகள்.

 

ஆரோக்கியமான உணவு திட்டத்தை பின்பற்றவும்.

பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற குறைந்த கலோரி, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்க்கவும். இனிப்புகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தவும்.

ஸ்நாக்ஸ் உண்ணும் பழக்கத்தை குறைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வழக்கமான உணவு நேரம் என்று வைத்து உண்ணுங்கள்.

நல்ல ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் உணவுகளை மட்டும் தேர்ந்தெடுங்கள்.

  

உங்கள் உணவு பழக்கத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.

கட்டுப்பாடில்லாமல் உணவைத் உண்ண தூண்டும் சூழ்நிலைகளை அடையாளம் கண்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், சாப்பிடும்போது, எப்படி உணர்கிறீர்கள், எவ்வளவு பசியாக இருக்கிறீர்கள் என்று ஒரு டைரியில் தொடர்ந்து எழுத முயற்சி செய்யுங்கள்.

இந்த டைரியை வைத்து, சில நாட்களில் உங்கள் உணவு உண்ணும் பழக்கத்தின் patternஐ நீங்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.

அதை தெரிந்துக் கொண்டால், உங்களுக்கு பிடித்த விதத்தில் முன் கூட்டியே திட்டமிட்டு உங்கள் உணவு பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் கொண்டு வரலாம். தவறான பழக்கங்களைக் கட்டுப்படுத்தலாம்.

 

உங்கள் எடையை கண்காணித்துக் கொண்டே இருங்கள்.

வாரத்திற்கு ஒரு முறையாவது தங்களின் எடையை பார்ப்பவர்கள் மற்றவர்களை விட சீக்கிரமே எடை குறைப்பதில் வெற்றிப் பெறுகிறார்கள். எனவே உங்கள் உடல் எடையை அவ்வப்போது கண்காணியுங்கள்.

நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கிறதா என்று அது உங்களுக்கு சொல்லும்.

 

தொடர்ந்து செய்யுங்கள்.

வார நாட்கள், வார இறுதி நாட்களில், விடுமுறை நாட்கள் என எப்போதும் உங்களின் உணவு பழக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பது நல்ல பலனை விரைவில் கொடுக்கும்.

எனவே ஆரோக்கிய உணவிற்கு விடுப்பு கொடுக்காமல் அதையே தொடர்ந்து பின்பற்றுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.