(Reading time: 4 - 8 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - பெண்கள் தங்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவது எப்படி?

பெண்கள் ஆண்களை விட அதிக பரபரப்பாகவும் அதிக மன அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாக இருக்கிறது.

பெண்கள் அதிக பொறுப்புகளை கையாளுகிறார்கள் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. பல பெண்கள் தங்களுடைய ஆண் துணைவரைப் போலவே பல மணிநேரம் அலுவலகத்தில் வேலை செய்தாலும் கூட, அந்த வேலையை தாண்டி குடும்பத்தில் அதிக பொறுப்புகளை சுமப்பதாக உணர்கிறார்கள்.

ஒருவேளை இதன் காரணமாக தான் பொதுவாக பெண்கள் ஆண்களை விட அதிக மன அழுத்தத்துடன் காணப்படுகிறார்களோ என்ற கேள்வி வருவது இயற்கை.

அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழக குடும்ப மற்றும் நுகர்வோர் வளங்களின் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அவர்கள் 166 திருமணமான தம்பதிகளின் மாதிரியை எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு பங்கேற்பாளரையும் 42 நாட்கள் தொடர்ந்து ஒரு தினசரி நாட்குறிப்பை பராமரிக்க வைத்தனர்.  அதில் அனைவரும் தங்களுடைய தினசரி மன அழுத்தங்களை பற்றி பதிவு செய்தனர். ஆண்களை விட பெண்கள் அதிக அளவு "அதிக மன உளைச்சல்" நாட்களும், குறைவான கஷ்டம் இல்லாத "ஹாப்பி" நாட்களும் இருப்பதாக சொல்லி இருந்தார்கள்.

இது குடும்பத்தில் பெண்களின் மன அழுத்தம் தொடர்பான சில முக்கியமான சிக்கல்களைக் வெளிக் கொண்டு வருகிறது. எனவே இது தொடர்பாக பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்:

 

மன அழுத்தத்தில் பாலின வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுங்கள்

ங்கள் கணவரை விட அதிக மன அழுத்தத்தை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் மன அழுத்தத்தை சரியாக கையாளவில்லை என்று அர்த்தம் இல்லை. அது உண்மையாகவே நீங்கள் அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பதாலாக கூட இருக்கலாம்.

உங்களை நீங்களே குறைவாக நினைக்காமல், இதுவரை மன அழுத்தங்களை நீங்கள் கையாண்ட விதத்திற்கு உங்களுக்கு நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.

 

சில வேலைகளை உங்கள் பட்டியலில் இருந்து நீக்கி விடுங்கள்

ம்மில் பலரும் சில குறிப்பிட்ட வேலைகள் பெண்கள் செய்தால் தன் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம். உதாரணமாக வீட்டில் மட்டுமல்லாமல் அலுவலகத்தில் பிறந்த நாள் பார்ட்டிகள் திட்டம் போடுவது, விழாக்கள் எடுத்து நடத்துவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் அப்படி பொறுப்புகள் ஏற்றுக் கொள்வதற்கு முன் யோசியுங்கள்.

மற்றவர்களை மகிழ்விப்பது முக்கியம் என்றாலும் உங்கள் உடல் & மன ஆரோக்கியத்தை பற்றியும் யோசியுங்கள்.

எனவே சில நேரங்களில் "NO" என்றும் சொல்லிப் பழகுங்கள்.

இது உங்கள் வேலை பளுவை மட்டும் குறைக்காது, மன அழுத்தத்தையும் குறைக்கும்.

 

நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிப் பாருங்கள்

சில சமயங்களில் நமக்கு பரிச்சயமான விஷயங்களை வேறு கோணங்களில் பார்ப்பதே நம் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

உதாரணமாக குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்த விதத்தில் சமைப்பது "கஷ்டம்", "என்னால் முடியாது", "நடக்கவே நடக்காது" என்று உங்களுக்கு நீங்களே "நெருக்கடி" கொடுத்துக் கொள்வதற்கு பதில், அதையே "சவாலாக", உங்கள் திறமையை காட்ட கிடைத்த "வாய்ப்பாக" எடுத்துக் கொண்டு செய்தால் 'மன அழுத்தம்' காணாமல் போய் விடும். மனதிற்கு சந்தொழமும் கிடைக்கும்.

 

மன அழுத்தத்தை குறைக்கும் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

மெடிடேஷன் (தியானம்) தொடர்ந்து செய்பவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் பெரிய நெருக்கடிகளில் கூட அதிக அளவு மன அழுத்தம் இல்லாமல் இருக்க முடியும் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

அதேப்போல உடற்பயிற்சி செய்பவர்களும் மன அழுத்தத்தை நல்ல விதமாக கையாள முடியும் என்று மன நல மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

தியானம், உடற்பயிற்சி இரண்டும் உங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

தொடர்ந்து டைரி எழுதுவது கூட மன அழுத்தத்தில் இருந்து உங்களை வெளியே கொண்டு வர உதவும்.

முயற்சி செய்துப் பாருங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.