(Reading time: 2 - 4 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - படிக்கட்டுகளில் ஏறுவதால் ஏற்படும் நன்மைகள்

டிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இதயத்திற்கு உதவுவது முதல் மூட்டு வலிகளை மேம்படுத்துவது வரை, படிக்கட்டுகளில் ஏறுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

 

டிக்கட்டுகளில் ஏறுவது அதிக கலோரிகளை எரிக்க உங்களுக்கு உதவுகிறது. இந்த கலோரிகளின் எண்ணிக்கை ஜாகிங் செய்வதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேப்போல நடைபயிற்சி செய்வதை விட இது இரண்டு மடங்கு கலோரிகளை எரிக்கிறது.

 
டிக்கட்டுகளில் ஏறுவது நம் உடலில் எண்டோர்பின்களை உருவாக்க உதவுகிறது – இது நம் மனதில் மகிழ்ச்சியின் உணர்வை உருவாக்க கூடிய ஹார்மோன்கள்.

 
டை இழப்பு என்பது படிக்கட்டுகளில் ஏறுவதனால் கிடைக்கும் மற்றொரு நன்மை.

 
டிக்கட்டுகளில் ஏறுவது கார்டியோ உடற்பயிற்சியின் ஒரு வடிவம். படிக்கட்டுகளில் ஏறும் போது, ​​உங்கள் முழு உடலையும் புவி ஈர்ப்புக்கு எதிராக நீங்கள் செயல்பட வைக்கிறீர்கள். இந்த செயல்பாடு உங்கள் கால் தசைகளை பலப்படுத்துகிறது.

 
டிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் இதய துடிப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் கால்களின் சீரான இயக்கம் ஆழமான சுவாசத்தை ஏற்படுத்தி இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இது உங்கள் உடல் முழுவதிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.

 
டிக்கட்டுகளில் ஏறுவதன் மற்றொரு நன்மை என்னவென்றால், இது வலுவான மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு வழிவகுக்கிறது.

 
ல்வேறு ஆராய்ச்சிகளின்படி, இது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும் ஒன்று. படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் ஆற்றலை மேம்படுத்தவும், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்கவும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கவும் ஒரு சிறந்த வழியாகும்.

 
டிக்கட்டுகளிள் ஏறுவது நிச்சயமாக மிகவும் சிறந்த வசதியான உடற்பயிற்சியாகும். இதில் உபகரணங்கள் செலவு மற்றும் இட சிக்கல்கள் என்று எதுவும் இல்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.