(Reading time: 2 - 4 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - குழந்தைகள் - உடல் பருமன்

குழந்தை பருவ உடல் பருமன் என்பது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பாதிக்கும் ஒரு தீவிர மருத்துவ நிலை.

பருமனான குழந்தைகள் தங்களுடைய வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையை விட அதிகமான எடையைக் கொண்டுள்ளனர்.

 

குழந்தை பருவ உடல் பருமன் மேலோட்டமாக  எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் இல்லை. ஏனெனில் இந்த அதிக எடை என்பது பெரும்பாலும் பெரியவர்களின் பிரச்சினைகளாக கருதப்பட்ட ஆரோக்கிய கேடுகள் (நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு) குழந்தைகளுக்கும் வரக் காரணமாக இருக்கின்றது .

பல பருமனான குழந்தைகள் பருமனான பெரியவர்களாகவே வளர்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் குழந்தை பருவ உடல் பருமன் தாழ்வு மனப்பான்மை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.

 

குழந்தை பருவ உடல் பருமனைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உங்கள் முழு குடும்பத்தின் உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கத்தை மேம்படுத்துவதாகும்.

குழந்தை பருவ உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதும் தடுப்பதும் இப்போதும் எதிர்காலத்திலும் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

 

உடல் பருமனை  தடுப்பது எப்படி?

ங்கள் குழந்தைகள் சர்க்கரை கலந்த இனிப்பு பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள் அல்லது அவற்றை முற்றிலுமாக தவிர்த்து  விடுங்கள்.

 

நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர்களுக்கு வழங்குங்கள்

  

முடிந்தவரை அடிக்கடி ஒரு குடும்பமாக ஒன்றாக உணவை உண்ணுங்கள்

 

துரித உணவு (fast food ) சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துங்கள். நீங்கள் வெளியே சாப்பிடும் போது ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்று உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்

  

ங்கள் குழந்தைகளின் தேவைக்கு ஏற்ப மட்டும் உணவை கொடுங்கள்.

 

2 வயதுக்கு அதிகமான குழந்தைகளுக்கு ஒரு நாளுக்கு டி.வி, மொபைல், டேப்  நேரம்  என்பதை 2 மணி நேரத்திற்கும் குறைவாக இருப்பதாக கட்டுப்படுத்துங்கள்.

2 வயதுக்கு குறைவான குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை அனுமதிக்க வேண்டாம்

 

ங்கள் குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.