(Reading time: 2 - 4 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - மாரடைப்பின் அறிகுறிகள்

மாரடைப்பு என்றால் என்ன?

தய தசையின் ஒரு பகுதிக்கு போதுமான இரத்தம் கிடைக்காத போது  மாரடைப்பு நிகழ்கிறது.

இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க சிகிச்சை கொடுக்காமல் அதிக நேரம் கடந்து செல்லும் போது, ​​இதய தசைக்கு அதற்கு ஏற்ப அதிக சேதம் ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம்.

 

மாரடைப்பின் அறிகுறிகள் யாவை?

மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள்

மார்பு வலி அல்லது அசௌகரியம்:

பெரும்பாலான மாரடைப்புகள், மார்பின் மையத்தில் அல்லது இடது பக்கத்தில் அசௌகரியத்தை உள்ளடக்குகின்றன. இது சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் அல்லது வந்து வந்து போகும்.

இந்த அசௌகரியம் நெஞ்சில் எதோ அழுத்துவது போன்ற உணர்வு அல்லது வலி என எதோ ஒன்றாக இருக்கலாம்.

 

பலவீனமான உணர்வு, தலை சுற்றுவது அல்லது மயக்கம் போன்ற உணர்வு.

  

சில சமயங்களில் குளிருடன் வரும் வியர்வையாக கூட மாரடைப்பின் அறிகுறியை உணரலாம்.

 

தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி அல்லது அசௌகரியம்.

 

ஒன்று அல்லது இரண்டு கைகளிள் அல்லது தோள்களிள் வலி அல்லது அசௌகரியம்.

 

மூச்சு திணறல்

இது பெரும்பாலும் மார்பு அசௌகரியத்துடன் வருகிறது, சில சமயம் மார்பில் அசௌகரியம் உணர்வதற்கு முன்பும் மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

 

பெண்களிடம் பெரும்பாலும் காணப்படும் மாரடைப்பின் பிற அறிகுறிகள்:

வித்தியாசமான அல்லது விவரிக்க முடியாத சோர்வு, குமட்டல், வாந்தி ஆகியவை மாரடைப்பின் மற்ற சில அறிகுறிகள்.

குறிப்பாக பெண்களுக்கு இந்த மாதிரியான அறிகுறிகள் அதிகம் தோன்றுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

 

சில நேரங்களில் இதய நோய் “அமைதியாக” உங்களுக்குள் உருவாகிக் கொண்டு இருக்கலாம்.

 

எனவே மார்பு வலி, மார்பில் அசௌகரியம், மேல் முதுகு அல்லது கழுத்து வலி, அஜீரணம், நெஞ்செரிச்சல், குமட்டல் அல்லது வாந்தி, தீவிர சோர்வு, உடலின் மேல் பகுதியில் அசௌகரியம், தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் என மாரடைப்பின் அறிகுறியை காட்டும் எந்த விதமான உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும் அதை சீரியசாக எடுத்து கவனிப்பது நல்லது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.