(Reading time: 2 - 4 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்

ம் ஆரோக்கியத்திற்காக பிளாஸ்டிக் பாத்திரங்கள், பொருட்கள் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?

  

பல வருடங்களாக பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டு வரும் பிபிஏ (பிஸ்பெனால் ஏ) எனும் ரசாயனம், சில வகையான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் பிற ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் பங்களிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

  

ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் பிளாஸ்டிக் பற்றி குறிப்பிடுகையில், மைக்ரோவேவ் செய்ய பிளாஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டிக்கை அப்படி சூடு செய்வது நல்லதிற்கில்லை என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் இருக்கும் பிபிஏ மற்றும் தாலேட்டுகள் போன்ற ரசாயனப் பொருட்கள் ப்ளாஸ்டிக்கை சூடாக்கும் போது உணவில் கசிய வாய்ப்புகள் இருக்கிறது. இதை தடுக்க பிளாஸ்டிக் பயன்படுத்தி உணவை மைக்ரோவேவில் சூடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக இறைச்சி, சீஸ், மற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு ஒருபோதும் பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை ரசாயன நச்சுக்களை எளிதில் உறிஞ்சிவிடும் என்றும் அதில் சொல்லப் பட்டிருக்கிறது..

  

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் அதிக பாக்டீரியாக்கள் தங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எனவே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை தவிர்த்து ஸ்டீல் வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்துங்கள். ஸ்டீல் வாட்டர் பாட்டில்களையும் நன்றாக கழுவினால் தான் பாக்டீரியாக்கள் இல்லாமல் இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

 

உங்கள் ஆரோக்கியத்தை பேண பிளாஸ்டிக் பயன்பாட்டை நீங்களே குறைத்துக் கொள்வது நல்லது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.