(Reading time: 2 - 3 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்

முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும்.

முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்:

  1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)

 

  1. தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

 

  1. அமரும்போது வளையாதீர்கள்.

 

  1. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

 

  1. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.

 

  1. சுருண்டு படுக்காதீர்கள்.

 

  1. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.

 

  1. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.

 

  1. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.

 

  1. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்.  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.