(Reading time: 3 - 5 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - பெண்களும் தொப்பையும் – அவசியம் கவனிக்க வேண்டிய விஷயம்

கொழுப்பு காரணமாக உருவாகும் வயிற்றுத் தொப்பை உயர் இரத்த அழுத்தம் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற பல நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், தொப்பை வைத்திருக்கும் பெண்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகம் என்று கண்டறிந்துள்ளனர்.

 

Waist-to-hip ratio

Waist-to-hip ratio (WHR) என்பது உங்கள் உடல்நலம் குறித்த நுண்ணறிவைத் தரக்கூடிய ஈஸியான அளவீடாகும்.

உங்கள் Waist-to-hip ratioவை அளவிட, உங்கள் waist மற்றும் hip அளவை அளவிடுங்கள். பின் waist சுற்றளவை உங்கள் hip சுற்றளவு மூலம் வகுக்கவும்.

அந்த அளவு 0.85 க்கு மேல் இருந்தால் உங்களுக்கு இதய நோய், வகை 2 நீரிழிவு மற்றும் கருவுறுதல் பிரச்சினைகள் அதிக ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அர்த்தம். எனவே தொப்பையை கரைப்பது அவசியம்.

 

தொப்பையில் இருக்கும் கொழுப்பு

தொப்பை என்பது தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பு மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு (subcutaneous and visceral fat) என இரண்டு வகையான கொழுப்பால் ஆனது.

தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பு பெரும்பாலும் தொடைகள் மற்றும் பின் பக்கங்களில் காணப்படுகிறது. இதனால் பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லை.

நாம் கவலைப்பட வேண்டியது உள்ளுறுப்பு கொழுப்பு பற்றி தான்.

உள்ளுறுப்பு கொழுப்பு வயிற்று பகுதியைச் சுற்றி குவிந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது.

இந்த கொழுப்பு உடலின் முக்கிய உறுப்புகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பாதிக்கிறது. அதனால் இது செரிமான பிரச்சினைகள், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

 

தொப்பை கொழுப்பை இழப்பது எளிதானது இல்லை. எந்த மாத்திரையும் இந்த தொப்பை கொழுப்பை ஈசியாக கரைக்காது.

இந்த தொப்பையை குறைக்க ஒரே வழி நல்ல கடின உழைப்பு தான்.

அதற்காக ஜிம்மில் ஒரு மணிநேரம் செலவிட வேண்டும், எப்போதும் சாலட் மட்டும் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் இல்லை.

அதற்கு பதிலாக, உங்கள் வாழ்க்கை முறையில் எளிமையான சிறிய மாற்றங்களைச் செய்வது பெரிய அளவு வித்தியாசங்களை ஏற்படுத்தும்.

வாரத்தில் ஒரு நாளாவது 30  நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். நல்ல உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். வித்தியாசத்தை கண்கூடாக பார்ப்பீர்கள்.

    

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.