(Reading time: 3 - 5 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - கண் பிரச்சனை - கணினி வேலைக்கான உதவிக்குறிப்புகள்

ண் பார்வை தொடர்பான பிரச்சனைகளுக்கு கணினி பயன்பாடு ஒரு பொதுவான காரணம்.

கணினி பயன்பாட்டினால் உங்கள் கண்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க உதவும் சில குறிப்புகள் இதோ:

 

கண்களுக்குப் புத்துணர்ச்சி கொடுக்க,  அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்.

கணினியில் பணிபுரியும் போது பலர் வழக்கத்தை விட மிகவும் குறைவாக கண் சிமிட்டுகிறார்கள். இது கண்களை உலர வைக்கும்.

கண் சிமிட்டுவதால் கண்ணீர் உருவாகும். இது உங்கள் கண்களை ஈரமாக்கும் மற்றும் கண்களுக்கு புத்துணர்சி கொடுக்கும்.

உங்கள் மானிட்டரைப் பார்க்கும்போது அடிக்கடி கண்களை சிமிட்டுவதை ஒரு பழக்கமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.

 

கண்களுக்கு ஒய்வு கொடுக்க ப்ரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மானிட்டரில் இருந்து கண்களை விலக்கி உங்கள் கண்களுக்கு ப்ரேக் கொடுங்கள்.

இதற்கு பிரசித்திப் பெற்ற 20-20-20 விதியை முயற்சிக்கவும்:

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், குறைந்தது 20 வினாடிகளுக்கு 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒன்றைப் பாருங்கள்.

 

விளக்குகளை சரிபார்க்கவும் & க்ளேரை குறைக்கவும்.

பிரகாசமான விளக்குகள் மற்றும் அதிகப்படியான க்ளேர் (கண் கூசுவது) உங்கள் கண்களைக் கஷ்டப்படுத்தும். மேலும் உங்கள் மானிட்டரில் உள்ள பொருட்களைப் பார்ப்பதை கடினமாக்கும்.

ஃப்ளோரசன்ட் லைட்டிங் மற்றும் சூரிய ஒளி உள்ளிட்டவை உங்கள் மானிட்டருக்கு பின்னாலோ, முன்னாலோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவைப்படும் ஒளி கிடைக்க மேசை விளக்கைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் மானிட்டரை நேரடியாக ஜன்னல் அல்லது வெள்ளை சுவரின் முன் வைப்பதைத் தவிர்க்கவும்.

உங்கள் மானிட்டர் திரையில் ஒரு அன்டி க்ளேர் கவர் வைக்கவும்.

 

உங்கள் மானிட்டரை சரிசெய்யவும்.

ஒரு கையின் நீளம் அளவிற்கான தூரத்தில் உங்கள் மானிட்டரை நேரடியாக உங்கள் முன் வைக்கவும். இதனால் மானிட்டரின் மேற்பகுதி கண் மட்டத்தில் அல்லது அதற்குக் கீழே இருக்கும்.

ஹைட் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய நாற்காலியை பயன்படுத்துவதும் நல்லது.

 

உங்கள் மானிட்டர் செட்டிங்குகளை சரி செய்யவும்.

எளிதாகப் படிக்க கூடிய விதத்தில் பெரிய ஃபான்ட் பயன்படுத்துங்கள்.

கான்ட்ராஸ்ட் மற்றும் ப்ரைட்னஸை உங்களுக்கு வசதியான அளவுக்கு சரி செய்யவும்.

    

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.