(Reading time: 2 - 3 minutes)
Milk and water provide more vitamin-D to our body than juice!
Milk and water provide more vitamin-D to our body than juice!

ஜூஸை விட பாலும் தண்ணீரும் தான் வைட்டமின்-டியை நம் உடலுக்கு அதிகம் கொடுக்கிறதாம்!

ரு புதிய ஆய்வின்படி, பால் மற்றும் நீர் ஆகியவை வைட்டமின் டி நம் உடலுக்கு கிடைக்க அதிகம் உதவுகிறது என கண்டறியப் பட்டுள்ளது.

  

வைட்டமின் டி குறைபாடு கோவிட்-19 நோய் எதிர்ப்பு சக்தி உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  

உலகெங்கும் பலரும் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

  

எனவே வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் இன்றியமையாதது. அப்படி எடுத்துக் கொள்ளும் வைட்டமின் டி சரியாக உடலால் உறிஞ்சப்படுமா என்பதை தெரிந்துக் கொள்ளவதும், அப்படி உறிஞ்சுதலுக்கு எவ்வாறு சிறந்த முறையில் உதவுவது என்பதை அறிவதும் முக்கியம்.

  

இந்த கேள்விக்கு பதிலளிக்க, டென்மார்க்கில் வைட்டமின் டி குறைபாடுள்ள 60-80 வயதுடைய 30 பெண்களிடம் சோதனை நடத்தினர்.

  

அரை லிட்டர் தண்ணீர், பால், ஜூஸ் , வைட்டமின் D உடன் வெய் ப்ரோட்டீன் நிறைந்த ஜூஸ் மற்றும் வைட்டமின் D இல்லாத அரை லிட்டர் தண்ணீர் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்பட்டது.

  

ஒவ்வொரு ஆய்வு நாளிலும் 0h, 2h, 4h, 6h, 8h, 10h, 12h மற்றும் 24h ஆகிய நேரங்களில் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

  

இந்த ஆய்வின் முடிவில் ஜூஸ் வைட்டமின் டி வழங்க அதிகம் உதவில்லை என்பதும், தண்ணீர் மற்றும் பால் தான் நாம் உடல் அதிக வைட்டமின் டி பெற உதவுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளார்கள்.

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.