ஒரு நாளுக்கு எட்டு கப் தண்ணீர் தேவையா?
சராசரி மனித உடலில் 60% க்கும் அதிகமான நீர் உள்ளது. நம் மூளை மற்றும் இதயத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கும், நுரையீரலில் 83%ம், தோலில் 64%ம், எலும்புகளில் 31%ம் நீர் ஆகும். நம்மை உயிருடன் வைத்திருக்கும் ஒவ்வொரு செயல்முறையிலும் தண்ணீர் ஈடுபட்டுள்ளது.
நீர் நம் உடலின் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது, ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது, கழிவுகளை நீக்குகிறது, மூட்டுகள் மற்றும் திசுக்களை உயவூட்டுகிறது, மேலும் இது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் திரவங்களின் மென்மையான சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுவாசிக்கும் போது, வியர்வை, சிறுநீர் கழித்தல், உணவு மற்றும் பானங்களை எனர்ஜியாக மாற்றும் போது எல்லாம் நம் உடலின் தண்ணீரை இழக்கிறோம். எனவே, தண்ணீரை குடிக்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் கீழ்நோக்கிச் செல்லலாம். உணவு இல்லாமல் கூட உடல் மூன்று வாரங்கள் அல்லது அதற்கும் மேலாக செயல்பாட்டில் இருக்கும். ஆனால் தண்ணீர் இல்லாமல், ஒரு சில நாட்கள் மேல் தாக்குபிடிப்பது வெகு கடினம்.
தண்ணீர் அறிவாற்றல் செயல்பாடு, மனநிலை, உடல் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது, மற்றும், மலச்சிக்கல், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஒரு நாளைக்கு எட்டு அவுன்ஸ் கப் (கிட்டத்தட்ட 2 லிட்டர்) தண்ணீர் குடிக்கவும். ஆனால் ஒவ்வொருவரும் பருக வேண்டிய நீர் அளவு வாழ்க்கை சூழ்நிலைகளின் அடிப்படையிலும் மாறுபடலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் வெப்பமான மற்றும் ஈரப்பதமான இடத்தில் வாழ்ந்தால், அதிக உடல் செயல்பாடுகள் நிறைந்த வேலையில் இருந்தால், கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், உங்களுக்கு சராசரி மக்களை விட தினசரி அதிக தண்ணீர் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் கேட்டால் அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.
அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ், இன்ஜினியரிங் மற்றும் மெடிசின், ஆண்களுக்கு சராசரியாக 125 அவுன்ஸ் மற்றும் பெண்களுக்கு 91 அவுன்ஸ் தண்ணீர் உட்கொள்ள பரிந்துரைக்கிறது.
போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை எப்படி கண்டுப்பிடிப்பது?
பெரும்பான்மையான மக்களுக்கு, போதுமான தண்ணீர் கிடைப்பதே பெரிய பிரச்சினை. உங்கள் உடலுக்கு தேவையான நீர் கிடைக்கிறதா என்ற கேள்விக்கான சிறந்த குறிகாட்டி உங்கள் உடலாகும். உங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காதபோது, உங்கள் உடல் சில அறிகுறிகளைக் காண்பிக்கும்.
சிறுநீரின் நிறம் உங்கள் உடலின் நீர் நிலைக்கு ஒரு சிறந்த குறிகாட்டியாகும். உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாகவோ அல்லது தெளிவாகவோ இருந்தால், நீங்கள் வேண்டிய அளவு நீரை பெற்று இருக்கிறீர்கள். அடர் மஞ்சள் அல்லது அம்பர் நிற சிறுநீர் உங்கள் உடலுக்கு இன்னும் அதிக தண்ணீர் தேவை என்பதை குறிக்கிறது.
தலைவலி, ஒற்றைத் தலைவலி, மோசமான தூக்கம், மலச்சிக்கல், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் போன்ற பிரச்சனைகளும் நீரிழப்பு அறிகுறிகளாக இருக்கலாம்.
தண்ணீர் குடியுங்கள், உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.