(Reading time: 2 - 3 minutes)

Health Tip #21 - நெல்லிக்கனி

Gooseberry

வ்வொரு நாளும் நெல்லிக்கனியை உண்டால் நோய் நம்மை அணுகாது.

நல்ல நெல்லி எது?

நெல்லிக்கனிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று அரை நெல்லி மற்றொன்று பெரிய நெல்லி. இவை இரண்டில் பெரிய நெல்லி நம் உடலுக்கு மிகவும் நன்மை தரக் கூடியதாகும்.

நெல்லிக்கனியின் பலன்கள்:

  1. நெல்லிக்கனியில் நிறைய தாதுக்கள் (minerals), உயிர்ச்சத்துக்கள் (vitamins) உள்ளன.
    1. நெல்லிக்கனி வைட்டமின் சி (அப்ஸ்கார்பிக் அமிலம்) நிறைந்தது
    2. நெல்லிக்கனியில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.
    3. நெல்லிக்கனியில் கால்சியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன
  2. Gooseberryநெல்லிக்கனியில் கொழுப்பு சத்து மற்றும் சோடியம் முதலியவை மிக குறைவாக உள்ளது.
  3. கண்பார்வை, தோல் வளர்ச்சி மற்று தலை முடி வளர்ச்சிக்கும் நெல்லிக்கனி உதவக் கூடியது.
  4. புதிய ஆராய்ச்சிகள் நெல்லிக்கனியினால் புற்றுநோயை தடுக்க முடியும் என்றும் சொல்கின்றன.
  5. உயிர்ச்சத்து குறைவால் (vitamin deficiency) பல்லில் ரத்தம் வந்தால், நெல்லிக்கனி சாப்பிட நல்ல பலன்களை காணலாம்.

தவறான எண்ணங்கள்:

நெல்லிக்கனி சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்ற தவறான கருத்து மக்களிடையே பரவி இருக்கிறது.

ரை நெல்லயில் உள்ள டர்டரிக் அமிலத்தினால் சளித் தொல்லை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெரிய நெல்லி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

நெல்லிக்கனியை தவறாமல் உண்டு உடல் நலம் பேணுவோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.