(Reading time: 3 - 5 minutes)

பல் டாக்டரை கேளுங்கள் - பற்களை வெண்ணிற படுத்துதல்

To read this article in English click here!

கேள்வி 1:

வெண்ணிற பற்களை பெறுவது எப்படி? - வித்யா பாரதி

பற்களில் இருந்து மஞ்சள் நிறத்தை அகற்றுவது எப்படி? - வினோத்

Dentist

பற்களில் இருந்து மஞ்சள் நிறத்தை அகற்ற முடியுமா? - ஹேமா K

து நிறைய பேர் கேட்கும் கேள்வி.

பற்கள் நிறம் மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு உள்ளார்ந்த intrinsic கறை இருக்கும். வேறு சிலருக்கு வெளியே இருக்கும் காரணங்களால் ஏற்படும் extrinsic கறை இருக்கும்.

புகை, பான், பாக்கு, காபி, டீ போன்றவற்றால் ஏற்படும் கறைகள் வெளிப்புற கறையின் (extrinsic) உதாரணங்கள்.

பல் உருவாகும் போது அதிகப்படியான ஃவுளூரைடு (ஃப்ளோரோசிஸ்) அல்லது டெட்ராசைக்ளின் உட்கொள்வது,  உள்ளார்ந்த கறை உருவாவதற்கான சில காரணங்கள். சில ஊர் தண்ணீரில் ஃவுளூரைடு அதிக அளவில் இருக்கும். அது போன்ற ஊரில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு இது போன்ற உள்ளார்ந்த intrinsic கறை இருப்பதை பார்க்கலாம்.

உங்கள் பற்கள் நிறம் மாற என்ன காரணம் என்று கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவது நல்லது.

வெளி காரணங்களால் (extrinsic) ஏற்பட்ட மஞ்சள் கறை என்றால் Scaling எனும் செயல்முறை கொண்டோ அல்லது நல்ல வாய் சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றியோ சரி செய்யலாம்.

உள்ளார்ந்த (intrinsic) கறைகள் என்றால் உங்கள் பல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

பொதுவாக வெண்மையான பற்களுக்கு நீங்கள் வணிக ரீதியாக கிடைக்கும் வெண்மை படுத்தும் பற்பசையை (commercially available whitening toothpaste ) பயன்படுத்தலாம். அல்லது தொழில்முறை வெளுக்கும் சிகிச்சை (professional bleaching treatment) மேற்கொள்ளலாம்.

 

கேள்வி 2:

பற்கள் நிறம் மாறாமல் காப்பது எப்படி? - வினோத் & ஹேமா K

ற்களில் கறை வர செய்யும் காபி, தேயிலை, பாக்கு, சிகரட் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ஒவ்வொரு நாளும் காலை இரவு என இரண்டு நேரம் பல் துலக்க வேண்டும்.

 

கேள்வி 3: 

பற்களை வெண்மைபடுத்த உமிக்கரி, செங்கல்தூள் போன்றவற்றை பயன்படுத்தலாமா? - வினோத்

ற்களின் பற்சிப்பி எனும் enamel மனித உடலின் வலிமையான பகுதி என்றாலும், உமிக்கரி மற்றும் செங்கல் தூள் போன்றவை சிராய்ப்பு (abrasive) பொருட்கள் என்பதால் பற்சிப்பியை தேய்த்து விட கூடும். எனவே இது போன்றவற்றை பற்களில் பயன்படுத்தவது நல்லது இல்லை.

உங்களின் கேள்விகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

டாக்டர் அனிதா பற்றி:

ல் டாக்டராக பதினைந்து ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் டாக்டர் அனிதா, கூடுவாஞ்சேரியில் உள்ள ஆதர்ஷ் டென்டல் கேர் கிளினிக்கின் நிறுவனர் ஆவார்.

கிளினிக் முகவரி:
Adarsh Dental Care
No. 100, AGK complex
GST Road
Guduvancheri
Tamilnadu, India 
Facebook - https://www.facebook.com/AdarshDentalCare

 

To read this article in English click here!

 

மற்ற பதிப்புகள்

பல் டாக்டரை கேளுங்கள் - மவுத்வாஷ் மற்றும் கிராம்பு பயன்படுத்தலாமா?

பல் டாக்டரை கேளுங்கள் - பற்கால்வாய் சிகிச்சை முறை மற்றும் பற்களை வெண்மையாக்க கேப் முறை சரியானது தானா?

பல் டாக்டரை கேளுங்கள் - ஈறுகளை பராமரிக்காவிட்டால் புற்று நோய், இதய நோய், அல்சர் ஏற்படுமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.