(Reading time: 3 - 5 minutes)

பல் டாக்டரை கேளுங்கள் - பற்கால்வாய் சிகிச்சை முறை மற்றும் பற்களை வெண்மையாக்க கேப் முறை சரியானது தானா?

To read this article in English click here!

teeth

கேள்வி 6:

ஆர்.சி.டி எனப்படும் பற்கால்வாய் சிகிச்சையின் (Root canal treatment) அவசியம் என்ன? - க்ரிஷ்

யற்கை கொடுத்த பல்லை காத்து அதன் செயல்பாடை தொடர பற்கால்வாய் சிகிச்சை சிகிச்சை செய்யப்படுகிறது.

பல் பாதிக்கப் பட்டு மோசமான நிலையில் இருந்து, மற்றபடி அந்த பாதிக்கப்பட்ட பல்லை காப்பாற்ற முடியாது என்றால் பற்கால்வாய் சிகிச்சை அவசியம். இதை செய்யாமல் இருந்தால் அந்த பல்லை பிடுங்க வேண்டி இருக்கும்.

Root canal treatment

பற்கால்வாய் சிகிச்சை முறை

ற்கால்வாய் சிகிச்சை என்பது சிதைந்த அல்லது பாதிக்கப்பட்ட பல்லின் உள்ளே சுத்தம் செய்து, வடிவமைத்து, மந்தமான பொருள் உள்ளே வைத்து மூடும் செயல்முறை ஆகும்.

இந்த செயல்முறையில், பல்லின் உள்ளே இருக்கும் கூழ் (Tooth Pulp) நீக்கப்பட்டு, பல்லின் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு, மூடப்படும்.

பற்கால்வாய் சிகிச்சைக்கு பின் பல்லில் செயற்கை கிரவுன் பொறுத்துவது பெரும்பாலும் அவசியமான ஒன்றாகும்.

  

கேள்வி 7: 

என்னுடைய பற்கள் மஞ்சளாக இருக்கிறது. இது எனக்கு ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையை தருகிறது. இதனாலேயே முடிந்த அளவு என் பற்கள் மற்றவருக்கு தெரியாத வண்ணம் வாயை மூடி வைத்துக் கொள்கிறேன். நான் ஒரு பல் மருத்துவரிடம் இதை பற்றி கலந்தாலோசித்தேன். அவர் பற்களுக்கு cap அணிந்துக் கொள்ளுமாறு ஆலோசனை தந்தார். இது சரியான அணுகுமுறை தானா? - சங்கர்

முதலில் தொழில்முறை பல் வெளுக்கும் சிகிச்சை (Professional bleaching treatment) செய்து உங்களின் பற்களின் நிறம் முன்னேறுகிறதா என்று பாருங்கள்.

இந்த மஞ்சள் நிறம் வேறு காரணங்களால் ஏற்படவில்லை என்றால், பொதுவாக இது போன்ற வெளுக்கும் சிகிச்சையே உங்களின் பற்களின் நிறத்தை நன்கு சரி செய்யும்.

ஒருவேளை, அது உங்களுக்கு வேலை செய்யாவிட்டால் veneering எனப்படும் மேற்பூச்சுமானம் அல்லது கிரவுன் சிகிச்சை முறைக்கு செல்லுங்கள்.

Crown and Veneers
பீங்கான்-உலோக பல் க்ரவுன், பீங்கான் பல் க்ரவுன் & பீங்கான் veneer இடையேயான ஒப்பீடு

Veneers எனப்படும் மேற்பூச்சு பல்லின் மேற்பரப்பின் மீது பொறுந்தக் கூடிய பீங்கானில் ஆன மெல்லிய அடுக்குகள் ஆகும். இது க்ரவுன் அணிவதை விட சிறந்த வழியாகும்.

க்ரவுன் என்பது பல்லின் முழு மேற்பரப்பிலும் அணிவது என்பதால், உங்களின் இயற்கை பல்லை மிகவும் தேய்த்து பின் அணிவிக்கப்படும்.

 

உங்களின் கேள்விகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

டாக்டர் அனிதா பற்றி:

ல் டாக்டராக பதினைந்து ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் டாக்டர் அனிதா, கூடுவாஞ்சேரியில் உள்ள ஆதர்ஷ் டென்டல் கேர் கிளினிக்கின் நிறுவனர் ஆவார்.

கிளினிக் முகவரி:
Adarsh Dental Care
No. 100, AGK complex
GST Road
Guduvancheri
Tamilnadu, India 
Facebook - https://www.facebook.com/AdarshDentalCare

 

To read this article in English click here!

மற்ற பதிப்புகள்

பல் டாக்டரை கேளுங்கள் - பற்களை வெண்ணிற படுத்துதல்

பல் டாக்டரை கேளுங்கள் - மவுத்வாஷ் மற்றும் கிராம்பு பயன்படுத்தலாமா?

பல் டாக்டரை கேளுங்கள் - ஈறுகளை பராமரிக்காவிட்டால் புற்று நோய், இதய நோய், அல்சர் ஏற்படுமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.