Health Tip #29 - தனிமையினால் உடல் எடை கூடும்! எச்சரிக்கை!!!!!!

தனியாக வசிக்கிறீர்களா??? இல்லை பெரும்பாலான நேரத்தை தனிமையில் கழிக்கிறீர்களா?
அப்படி எனில் உங்களின் உணவு பழக்க வழக்கத்தை பற்றி சிறிது யோசியுங்கள்...!
என் சமையல் அவ்வளவு நன்றாக இருக்காது...
சமைக்க போர் அடிக்கிறது..
நான் சமைத்து யார் சாப்பிடுவது?
நான் சமைத்து நானே தானே சாப்பிட வேண்டும்...
இப்படி எல்லாம் சொல்பவர் என்றால் இது உங்களுக்கான சின்ன எச்சரிக்கை...!
ஆஸ்த்ரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, இது போல் தனிமையில் வசிப்பவர்கள் ஆரோக்கியமில்லாத உணவு பழக்க வழக்கங்களை அதிகமாக கொண்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
மேலே சொன்னது போல சமையல் மீது இருக்கும் அலுப்பினாலும், கூடவே எனக்கு மட்டும் ஏன் சமைக்க வேண்டும்.... என்ற தனிமை விரக்தியிலுமாக, இப்படி தனித்திருப்பவர்கள் ரெடி-டு-ஈட் மற்றும் ஆரோக்கியமில்லாத உணவுகளை உண்கின்றனர்.
இது போன்ற உணவுகளில் நம் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்ட சத்துக்கள் இல்லை.
ஆனால் ஆரோக்கியமில்லாத கொழுப்பு மற்றும் உப்பு நிறைந்திருக்கிறது.
எனவே இது போன்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களின் எடை வெகு வேகமாக அதிகமாகிறது.
உடல் எடை அதிகமாவதால் ஏற்படும் இன்னல்கள் ஏராளம் ஏராளம்...!
எனவே இப்பொழுதே விழித்துக் கொள்ளுங்கள்.
உங்களின் தோழி / நண்பர் அல்லது குடும்பத்தினர் யாரேனும் இப்படி வெகு நேரம் தனிமையில் இருப்பவர் என்றால், அவர்களுடன் பேசுங்கள்.... சமையல் மற்றும் அவர்கள் உண்ணும் உணவு பற்றி விசாரியுங்கள்...
உங்களின் ஆதரவும், ஊக்கமும் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு உண்ண ஆர்வத்தை கொடுக்கும். அவர்களின் உடல் ஆரோக்கியம் கெட்டு போகாமல் இருக்கவும் உதவும்...!
எனக்கு அப்படி யாரும் இல்லையே என்று யோசிக்கிறீர்களா??? கவலை படாதீர்கள், உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள், புத்தகம் படியுங்கள், chillzee போன்ற நல்ல இணையத்தளத்தை சுற்றி வாருங்கள்....!
நம் உடல் ஆரோகியதிற்காக நமக்கு நாமே நல்லதை சிந்தித்து வாழ வேண்டியது தான்
. முயற்சி செய்து பாருங்கள்.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.