Health Tip #23 - காலை உணவை தவிர்க்காதீர்கள்
இன்றைய காலத்தில் எங்கும் எதிலும் அவசரம். எப்போதும் ஓட்டம், தொடர்ந்த ஓட்டம் மட்டுமே. நம்மில் பலருக்கும் காலையில் உணவு உண்ணவும் நேரமில்லை...
ஆனால் இது மிக மிக தவறான பழக்கமாகும்.
இரவு உணவிற்கும் காலை உணவிற்கும் இடையே பல மணி நேர இடைவெளி இருக்கிறது. உணவை எதிர்பார்த்து அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலையில் உணவு கிடைக்காமல் போனால் அமிலத்தில் சிதைய தொடங்கும்.
அதே போல், இரவில் நம் உடலில் பித்தம் ஏறுவது இயல்பு. காலை உணவை உண்ணாமல் விட்டு விட்டால் பித்தம் தலைக்கு ஏறி விடும்.
இதனால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்புண், பசியின்மை, அதிக ரத்த கொதிப்பு போன்ற நோய்கள் மட்டுமில்லாமல் ஸ்ட்ரெஸ் எனும் மன அழுத்தமும் ஏற்படக் கூடும்.
காலை உணவை தவிர்த்து பத்து, பதினோரு மணி அளவில் பசியை அடக்க ஆரோக்கியமில்லாத ஸ்நாக்ஸ் உண்டால் கொழுப்பும் கலோரியும் அதிகமாகி பல நோய்கள் நம் உடம்பில் வந்து விடும்.
எடையை குறைக்க காலை உணவை தவிர்க்கலாமா?
எடையை குறைக்க காலை உணவை தவிர்ப்பது சரியான யோசனை இல்லை. காலையில் சாப்பிடாமல் இருந்தால், விரைவிலேயே அகோர பசி எடுத்து நம்மை ஆரோக்கியமில்லாத உணவுகளை உண்ண தூண்டும்.
மாறாக காலையில் ஆரோக்கியமான உணவு உண்டால், அன்றைய நாள் அதிக பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அதிக உணவு உண்ணாமல் தவிர்க்க முடியும்.
எடையை குறைக்க நல்ல உணவுகளை தேர்வு செய்து உண்பது அவசியம். முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும். கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
காலை உணவு உடலுக்கு வேண்டிய சக்தியை கொடுத்து நம் உடல் செயல்பாடுகளை அதிகரிக்கும்.
எனவே இனிமேல் எந்த காரணத்திற்க்காகவும் காலை உணவை தவிர்க்காதீர்கள்!!
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.