(Reading time: 4 - 7 minutes)

Health Tip #24 - உடல் எடை ஏன் கூடுகிறது?

டல் எடை கூடாமல் தடுப்பது எப்படி என பல பல கட்டுரைகளை பார்த்து விட்டோம். ஆனால் உடல் எடை ஏன் கூடுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள முயல்வோம்.

தேவைக்கு அதிகமாக உணவை உண்டால் எடை போடுவோம் என்பது பொதுவாக நாம் அறிந்ததே. ஆனால் அது மட்டும் உடல் எடை அதிகரிக்க காரணமில்லை!

அன்றாடம் நம்மை அறியாமல் நாம் செய்யும் சில செயல்களும் கூட உடல் எடை அதிகமாக காரணமாகி விடுகிறது,

weightஸ்ட்ரெஸ் எனும் மன அழுத்தம்:

டல் ஆரோக்கியம் பற்றி பேசும் போது மன அழுத்தத்தை பற்றி பேசாத கட்டுரையே இல்லை என்று சொல்லிவிடலாம்!

இன்றைய கால கட்டத்தில் நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த மன அழுத்தம் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறது.

மனஅழுத்தம் எப்படி உடல் எடை கூட காரணமாகிறது என்று கேட்கிறீர்களா? மன அழுத்தம் ஏற்படும் போது நம்மை அறியாமலே அதிக உணவு / குளிர் பானங்களை உட்கொள்ள தொடங்குகிறோம். அதிலும் முக்கியமாக நொறுக்கு தீனிகளை நம் மனம் நாடுகிறது.

அப்புறம் எடை கூடாமல் வேறு என்ன?

ஆரோக்கியமாக வாழ மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது மிகவும் அவசியம்.

எனவே யோகா, தியானம், உடற்பயிற்சி என உங்களையும் உங்கள் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டு மன அழுத்தத்தை ஓட ஓட விரட்டுங்கள்.

 

தூக்கமின்மை அல்லது சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது:

ரியாக தூங்காமல் இருந்தால் உடல் எடை கூடுவதோடு இளமையிலேயே diabetes எனும் நீரழிவு நோய் வரவும் காரணமாகிறது.

ஆனால் தூக்கத்திற்கும் உடல் எடைக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா?

நாம் தூங்கி ஓய்வெடுக்கும் நேரத்திலும் நம் உடலில் சில பல செயல்கள் நடைபெற தான் செய்கின்றது. உதாரணமாக, நம் உடல் அன்றைய நாளில் சேர்க்கப்பட்ட கொழுப்பு மற்றும் குளுகோசை எடுத்து உபயோகிக்க தொடங்கும். இதனால் நம் ரத்தத்தில் கார்டிசால், ஸ்டீராய்ட், வளர்ச்சி ஹார்மோன்கள் போன்றவை உற்பத்தி ஆக தொடங்கும். இந்த ஹார்மோன்கள் தேவையான அளவு சுரந்த உடன் ரத்தத்தில் இருக்கும் க்ளுகோஸ் அதாவது சர்க்கரையின் அளவு குறைந்து விடும்.

நாம் சரியாக தூங்காமல் இருந்தால் மேலே சொன்ன செயல்பாடுகள் நடப்பதில்லை.

எனவே உடலில் சர்ர்க்கரை (அதாவது க்ளுகோஸ்) உபோயோகிக்கபடாமல் இருக்கும். இதுவே உடல் எடையுடன் நீரழிவு நோயும் ஏற்பட காரணமாகிறது.

இனிமேல் மறக்காமல் நேரத்திற்கு தூங்கி பழகுங்கள்.

 

மாதவிடாய் நிற்கும் நேரம்

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் நேரத்தில் உடல் எடை சற்றே கூடும்.

ஆனால் இந்த எடை அதிகரிப்புக்கு ஹார்மோன்களை மட்டுமே முழுக்க முழுக்க காரணம் சொல்வதற்கில்லை.

வயது கூட கூட நம் உடலின் metabolism எனும் வளர்சிதை செய்யும் சக்தி குறைவடைகிறது, அதனால் முன்பை விட குறைவான கலோரிகள் மட்டுமே நம் உடல் பயன்படுத்தும்.

மற்றபடியும் குறைவான உடற்பயிற்சி செய்வது போன்ற வாழ்க்கை மாற்றங்களும் இது போன்ற நேரத்தில் உடல் எடை அதிகமாக காரணமாகிறது.

எனவே மாதவிடாய் நிற்கும் நேரத்திலும் பெண்கள் உடற்பயிற்சி செய்து தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது நல்லது.

 

தைராய்ட்

டலில் இருக்கும் தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்றாலும் உடல் எடை கூடும்.

போதுமான தைராய்டு ஹார்மோன் இல்லை என்றால், உடலின் வளர்சிதை (metabolism) வேகம் குறைகிறது. எனவே உடல் எடை அதிகமாகிறது.

தைராய்ட் பிரச்சனையை சரி செய்ய மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்

 

மருந்துகள்

மேலே சொன்னவற்றை தவிர நாம் பயன்படுத்தும் சில மருந்துகளும் உடல் எடை அதிகமாக காரணமாக இருக்கலாம்.

அன்டி டிப்ரசன்ட் எனும் உளச்சோர்வை (depression) போக்கும் மருந்துகள், diabetes எனும் நீரழிவு நோய் மருந்துகள், migraine எனும் ஒற்றை தலைவலிக்கான மருந்துகள், high blood pressure எனும் உயர் ரத்த அழுத்ததிற்கான மருந்துகள் கூட உடல் எடை அதிகமாக காரணமாக இருக்கலாம்.

ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் மருந்துகள் தான் உங்களின் எடை அதிகமாக காரணமென்றாலும், சட்டென அந்த மருந்துகளை நிறுத்தி விடாதீர்கள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்பே மருந்துகளை நிறுத்தவோ, மாற்றவோ வேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.