(Reading time: 2 - 4 minutes)

Health Tip #25 - இதயத்திற்கு நலம் தரும் பாதாம், அக்ரூட் பருப்பு, பிஸ்தா, வேர்கடலை...

Nuts

முன்பெல்லாம், பாதாம் (Almond), அக்ரூட் பருப்பு (Walnuts), பிஸ்தா (Pistachios), வேர்கடலை (ground nut / peanut) போன்றவற்றில் கொழுப்பு அதிகம் என அதை உண்பதை தவிர்த்தார்கள்.

ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியில், ஒரு வாரத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட நாட்கள் பாதாம், அக்ரூட் பருப்பு, பிஸ்தா மற்றும் வேர்கடலை போன்றவற்றை உண்டவர்களுக்கு, அதை சாப்பிடாதவர்களை விட இதய நோய் குறைந்த அளவில் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைவு.

பாதாம், அக்ரூட் பருப்பு, பிஸ்தா, வேர்கடலை போன்றவற்றை உண்பவர்கள் அதை தவிர்ப்பவர்களை விட ஒல்லியாக இருப்பதாகவும் ஆராய்ச்சி நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பாதாம், அக்ரூட் பருப்பு, பிஸ்தா, வேர்கடலை போன்றவற்றில் வைட்டமின்கள், கனிமங்கள், இதயத்திற்கு ஆரோக்கியமான நிரம்பாத கொழுப்புகள் (monounsaturated fats) மற்றும் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகள் (saturated fats) இருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் 150 கிராம் அளவிற்கு இவற்றை உண்டால் இதய நோய் ஏற்படும் ஆபத்தை 50% குறைக்கலாம்.

பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் வேர்கடலையில் இதயத்திற்கு நலம் தரும் நார் சத்துக்கள் இருக்கின்றது.

இவற்றில் இருக்கும் வைட்டமின் ஈ, bad cholesterol எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

குறிப்பாக அக்ரூட் பருப்புகளில்  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (omega-3 fatty acids) அதிகமாக உள்ளன.

அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாமில், நிரம்பாத கொழுப்பு (monounsaturated fat) மற்றும் பல்நிறைவுறா கொழுப்பு (polyunsaturated fat) இருக்கிறது. குறிப்பாக அக்ரூட் பருப்புகளில் "நல்ல" கொழுப்புகள் நிறைய இருக்கிறது.

நீங்கள் வெண்ணெய் போன்ற நிறைவுற்ற கொழுப்பு (saturated fats) நிறைந்த பொருளுக்கு பதிலாக அக்ரூட் பருப்பு, பாதாம் போன்றவற்றை பயன்படுத்தினால், உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் "கெட்ட" எல்டிஎல் கொழுப்பை குறைத்து, உங்கள் உடலின் "நல்ல" ஹெச்டிஎல் கொழுப்பை உயர்த்தலாம்.

ப்பு சேர்க்க படாத பாதாம், அக்ரூட் பருப்பு, பிஸ்தா, வேர்கடலையை வாங்கி உண்பது நல்லது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.