(Reading time: 4 - 7 minutes)

Health Tip #27 - கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் 5 நன்மைகள்!

Walking

பொதுவாக நம் பெரியவர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்களிடம் முடிந்த அளவு நடக்க சொல்வார்கள். மற்ற எத்தனையோ விஷயங்களை போல இதுவும் கூட மிக மிக ஆரோக்கியமானதாகும்.  இது அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் நடை பயிற்சி மற்ற உடல் பயிற்சிகளை போல கடினமாக இல்லாமல் சந்தோஷமாக செய்ய கூடிய ஒன்று என்பது கூடுதல் நன்மை!

அப்படி கர்ப்பக் காலத்தில் நடை பயறிசி செய்வதால் ஏற்படும் ஐந்து நன்மைகளை இங்கே காண்போம்!

கர்ப்பக் காலத்தில் நடை பயறிசி செய்வதால் ஏற்படும் ஐந்து நன்மைகள்

1. நார்மல் டெலிவரிக்கு வாய்ப்புகளை அதிகரிக்கிறது:

ர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வது உங்கள் இடுப்பு தசைகள் நெகிழவும், ஆரோக்கியமடையவும் உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் நடை பயிற்சி செய்யாத பெண்ணை விட, வேகமான, சுலபமான மற்றும் வலி குறைந்த டெலிவரிக்கு இது உதவுகிறது.

 

2. உடல் ஆரோக்கியம்:

டப்பது கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் உங்களை ஃபிட்டாக வைக்க உதவுகிறது.

இது உங்களின் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்புடன், தசைகளையும் வலுவடைய செய்கிறது.

 

3. ஆரோக்கியமான குழந்தை:

தினமும் நடப்பது உங்களின் எடையை மட்டுமல்லாமல் வயிற்றில் வளரும் உங்களின் குழந்தையின் எடையையும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.

வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை அதிகமாகாமல் இருப்பது நார்மல் டெலிவரிக்கு மிகவும் அவசியமாகும்.

 

4. மன அழுத்தம் குறைக்க உதவும்

கர்ப்பக் காலத்தில் மன அழுத்தம் ஏற்படுவது இயற்கை. இதற்கு ஹார்மோன்கள் முக்கிய காரணம் என்றாலும் கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் சந்தோஷம், பதட்டம், வருத்தம் என மன நிலை மாற்றங்கள் ஏற்படுவதும் இயற்கையே!

மற்ற உடற்பயிற்சிகளை போல நடப்பதும் endorphin எனும் இரசாயனத்தை நம் உடலில் உற்பத்தி செய்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

குறிப்பாக, மனநிலை சரியில்லாத நேரத்தில் நடப்பது மனதை சீராக்க உதவுகிறது.

 

5. கர்ப்பக் கால நீரிழிவு (Gestational diabetes) மற்றும் கர்ப்ப கால உயர் இரத்த அழுத்த (Pre-eclampsia) அபாயம் குறைக்கும்!

டப்பது உங்களின் எடையை நிலையான அளவில் பராமரிக்க உதவும்.

உடல் எடை சீராக பராமரிக்கப்படுவது Gestational diabetes  எனப்படும் கர்ப்பக் கால நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பை கணிசமாக குறைக்க உதவுகிறது.

Pre-eclampsia என்பது கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தமாகும். நடைபயிற்சி செய்வது எடையை பராமரிக்க மட்டுமல்லாமல் கொழுப்பையும்  குறைக்க உதவுவதால், ரத்த அழுத்தத்தையும் சமப்படுத்த உதவுகிறது.

 

நடை பயிற்சியை உங்களின் பிஸி வாழ்க்கையில் அங்கமாக்க சில டிப்ஸ்

டை பயிற்சியின் நன்மைகள் புரிகிறது ஆனால் எனக்கு நேரமில்லை என்கிறீர்களா? இதோ உங்களுக்கான சில வழிகள்:

1. இயன்ற அளவில் லிஃப்ட்டை தவிர்த்து படிகளை பயன்படுத்துங்கள்.

2. வேலையின் நடுவே சில நிமிட ப்ரேக் எடுத்து உங்கள் அலுவலகத்திலேயே நடக்க இருக்கும் இடத்தில நடை பயிற்சி செய்யுங்கள்.

3. பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்பவர் என்றால், உங்கள் நிறுத்தத்தில் இறங்காமல் அருகே இருக்கும் வேறு நிறுத்தத்தில் இறங்கி நடந்து வீட்டுக்கு சென்று பாருங்கள்.

4. பொறுமையாக நடந்து மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் மற்ற ஷாப்பிங் செய்யுங்கள்.

5. வார இறுதி நாட்களை நல்ல விதமாக திட்டமிட்டு உடல் ஆரோக்கியம் மேம்படும் விதத்தில் பயன் படுத்துங்கள்.

6. இரவு உணவிற்கு பின் உங்கள் கணவருடன் நிதான நடை பயிற்சி செய்யுங்கள்.

 

கர்ப்பக் காலத்தில் நடை பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

1. மிகவும் வேகமாக நடக்காதீர்கள்

2. கவனமாக, பொறுமையாக நடங்கள்

3. எதையும் அளவுக்கு அதிகமாக செய்வது நல்லதில்லை.... உங்களை மிகவும் சோர்வாக்காத அளவிலேயே நடை பயிற்சி செய்யுங்கள்.

4. நடக்கும் போது ஒரு தண்ணீர் பாட்டிலை கையேடு வைத்துக் கொள்ளுங்கள்.... அவ்வப்போது மறக்காமல் தண்ணீர் பருகவும் மறக்காதீர்கள்.

5. மிகவும் சூடாக இருக்கும் நேரத்திலோ, மழை பெய்து சாலைகள் வழுக்கும் நிலையில் இருக்கும் போதோ நடை பயிற்சி செய்யயாதீர்கள்.

6. இயன்றால் துணைக்கு ஒருவரை அழைத்துக் கொண்டு நடங்கள்.

 

தொடர்ந்து நடை பயிற்சி செய்யுங்கள்! உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உங்களின் குழந்தையையும் ஆரோக்கியமாக்குங்கள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.