(Reading time: 3 - 6 minutes)

Health Tip #41 - முதுகு வலியும் பெண்களும் - விந்தியா

Back Pain

பெண்களுக்கு முதுகு வலி வர காரணங்கள் என்னென்ன?

1. முதல் காரணம் காலை உணவை சரியாக உண்ணாமல் இருப்பது.

2. டுத்ததாக வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தாலும் முதுகு வலி ஏற்படலாம்.

வைட்டமின் டி நிறைந்த சூரிய ஒளியில் சிறிது நேரமாவது இருந்தாலே இந்த் பற்றாக்குறையை தவிர்க்கலாம்.

3. ட்காரும் போது, படுக்கும் போது அல்லது வேலை பார்க்கும் போது சரியான நிலையில் (posture) இல்லாமல் இருந்தாலும் முதுகு வலி ஏற்படலாம்.

4. தே போல ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்திருப்பது, படுப்பது போன்றவையும் முதுகு வலி வர காரணமாக இருக்கலாம்.

5. டல் எடை அதிகமானால் முதுகுத் தண்டுக்கு சுமை அதிகமாகும். எனவே முதுகு வலி வர வாய்ப்பு இருக்கிறது.

6. ய்வில்லாமல் வேலை செய்வது, தவறான முறையில் கனமான பொருட்களை தூக்குவது போன்றவற்றாலும் முதுகு வலி ஏற்படலாம்.

7. தாய்மை காலம்:

ர்ப்பக் காலத்தில் தாயினுள் இன்னுமொரு உடல்/உயிர் வளர்வதால் இருவருக்கான கால்சிய சத்து தேவைப்படும்.

கால்சிய சத்து குறைப்பாடு ஏற்பட்டால், குழந்தையின் எலும்பு வளர்ச்சியும், தாயின் எலும்பு பலமும் குறையும். எனவே முதுகு வலி ஏற்படலாம்.

கர்ப்பமாக இருக்கும் போது நடை பயிற்சி செய்வது முதுகு தண்டிற்கு நல்ல பயிற்சியாகும்.

குழந்தை பிறந்த பின், ஒரே நிலையில் அவ்வப்போது அமர்ந்து பால் புகட்டுவதாலும் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

சாய்ந்து அமர்ந்து பால் புகட்டுவதாலும், கர்ப்பக் காலத்தில் உடற்பயிற்சி செய்வதாலும் இதை தவிர்க்கலாம்.

8. மாதவிடாய் நிற்கும் காலம்

பெண்களுக்கு menopause எனப்படும் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் போது ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் சுரக்காது. எனவே உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் உடலில் இருக்கும் கால்சிய சத்தும் சிறுநீர் வழியாக வெளியேறும்.

இதனால் தான் இந்த நேரத்தில் பெண்களுக்கு ஆஸ்டியோபோராசிஸ் (osteoporosis) ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது.

இந்த நேரத்தில் முதுகு வலி வரும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

9. தை தவிர கால்சிய சத்து குறைப்பாடு, எலும்பு பலகீனம் / தேய்மானம், விபத்து ஆகிய காரணங்களாலும் முதுகு வலி ஏற்படலாம்.

 

முதுகு வலி வராமல் தடுப்பது எப்படி?

1. உடல் நலனில் அக்கறை தேவை:

i)   உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

ii)  தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

iii) உடலை எப்பொழுதும் நிதானமாக இயக்குங்கள். வீட்டு வேலை செய்யும் போது நிதானமாக பொருட்களை தூக்கி அவசரமில்லாமல் வேலையை செய்யுங்கள். 

உதாரணமாக இயன்றவரையில் இழுப்பதற்கு (pull) பதிலாக தள்ளுவதற்கு (push) முயற்சி செய்யுங்கள். இது உங்களின் முதுகு எலும்பை பாதுகாக்க உதவும்.

 

2. உணவு:

காய்கறி, பால், பழம், தானியங்கள், நார்சத்து, புரத சத்து மற்றும் கால்சிய சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்து உண்ணுங்கள்.

 

3. இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துபவர்கள்:

i)  இயன்ற அளவில் குண்டு குழி இல்லாத சாலையில் செல்லுங்கள்.

ii)  சரியான நிலையில் (posture) அமர்ந்து வண்டியை ஒட்டுங்கள்.

iii) மிதமான தூரத்திற்கு மட்டுமே வண்டியை பயன்படுத்துங்கள்.

 

4. வேலை

i)  ஒரே இடத்தில் அமர்ந்து வெகு நேரம் வேலை பார்ப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அவ்வப்போது ஒரு சில நிமிடங்களாவது எழுந்து நடை பயிற்சி செய்யுங்கள்.

ii) அதிக நேரம் நின்றுக் கொண்டே வேலை பார்க்க வேண்டி இருந்தால் 20 சென்டிமீட்டர் உயரமான பலகை போன்ற ஏதோ ஒன்றை வைத்து, அதில் ஒரு காலை தூக்கி வைத்துக் கொண்டு வேலையை பாருங்கள். இதனால் முதுகுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் குறையும். மறக்காமல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி பலகையில் வையுங்கள்.

ம் உடல் நலனை நாம் தன் பேணி பாதுகாக்க வேண்டும். எனவே விழிப்புடன் செயல்பட்டு முதுகு வலி ‘வரும் முன்’ தவிர்க்க பாருங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.