(Reading time: 3 - 5 minutes)

Health Tip # 54 - அதிகாலையில் எழுவதினால் ஏற்படும் நன்மைகள் - விந்தியா

Early riser

காலையில் நம்மை எழுப்பி விடும் அலாரத்தை சபிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்!

தூக்கத்தை விட்டு எழுவது என்பது நம்மில் பலருக்கும் ரொம்பவே கஷ்டமான ஒரு விஷயம்.

ஆனால் அதிகாலையில் எழுவதினால் பல பல நலன்கள் இருக்கின்றன என உடல் மற்றும் மன நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறும் சில நலன்களை பற்றி பார்ப்போம்.

1. அதிகாலையில் எழுவதனால் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்

து அவ்வப்போது நாம் கேட்கும் பல புரளிக் கதைகளில் ஒன்று என்று நினைக்காதீர்கள். இதன் பின் காரணம் உண்டு!

அதிகாலை வேளையில் மூளை நரம்பு இயக்கங்கள் சீராக செயல் படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

இதனால் தான் மாணவர்களை காலையில் எழுந்து படிக்குமாறு ஆசிரியர்களும் பெற்றோர்களும் சொல்வதும்!

 

2. உடற்பயிற்சி

காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் அதிக ஈடுபாடுடன் உடற்பயிற்சி செய்ய முடியும்.

அதி காலையில் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலன் தரும்.

மேலும் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்ற நொண்டி சமாதானத்தை விட்டு வெளி வர முடியும்.

 

3. பசி

திகாலை எழுந்தால், காலை வேளையில் நல்ல பசி தோன்றும். இது காலை உணவை தவிர்க்கும் பழக்கத்தை விட்டு வெளி வர உதவும்.

அப்படி காலை உணவை சரியாக உண்டால், சர்க்கரை வியாதி, உடல் குண்டாவது போன்றவற்றை அண்ட முடியாமல் செய்யலாம்.

 

4. காலை காற்று

காலையில் தூய்மையான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் வலுவடையும்.

எனவே ஆஸ்த்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

 

5. மனஅழுத்தம் குறையும்

திகாலையில் எழுவதால் என்னென்ன வேலைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி, எங்கே எப்போது செய்வது என்று திட்டமிடலாம்.

திட்டமிட்டு செயல் பட்டால் அப்புறம் என்ன stress?

எனவே மன அழுத்தம் தானாக குறையும்.

 

6. தூக்க 'சைக்கிள்' சீர் ஆகும்

ரவு வெகு நேரம் விழித்திருப்பது போல உடலுக்கு தீமையானது வேறில்லை.

சரியான நேரத்தில் தூங்கா விட்டால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற வியாதிகள் வந்து சேரும் வாய்ப்புகள் அதிகம்.

அதிகாலையில் எழுந்து பழகினால், இரவில் ஒன்பது, பத்து மணி அளவில் தானாக தூக்கம் கண்ணை சுற்றும்!

எனவே உங்களின் தூக்க 'சைக்கிள்' சீராகும். நீங்களும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

 


த்தனை நலன் இருக்கும் ஒரு விஷயத்தை தவிர்க்கலாமா??? சிந்தியுங்கள்!

அதி காலையில் எழும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளுங்கள்! நலமுடன் வாழுங்கள்!

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.