(Reading time: 2 - 4 minutes)

Health Tip # 55 -உடல் எடையை குறைக்க உதவும் எட்டு வடிவ நடைப் பயிற்சி

8shape

டைப் பயிற்சி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு நல்ல உடற்பயிற்சி.

அதை மேம்படுத்தி 'எட்டு' வடிவ நடைப் பயிற்சியாக செய்தால் இன்னும் பல பல பலன்களை பெறலாம்.

இப்போது பல இடங்களில் பிரபலமாகி வரும் இந்த “8” வடிவ நடைப் பயிற்சி புதியது அல்ல. இதைப் பற்றி பல சித்தர்களும், யோகிகளும் கூட சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நடைப் பயிற்சியை சரியான முறையில் தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் செய்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

எட்டு வடிவில் நடப்பது எப்படி?

முதலில் ஒரு காற்றோட்டமான அறையில் அல்லது மொட்டை மாடியில் பத்து அடி நீளமான “8” ஒன்றை வரைந்துக் கொள்ளுங்கள்.

இது வடக்கு – தெற்கு திசையில் நடக்கும் வண்ணம் இருப்பது நல்லது.

இப்போது கவனமாக நீங்கள் வரைந்த அந்த எட்டு வடிவ கோட்டின் மேலே நடைப் பயிற்சி செய்யுங்கள்.

இதை காலையில் அல்லது மாலையில் செய்யலாம். காலியான வயிற்றுடன் செய்வது சிறந்தது.

இப்படி எட்டு வடிவில் நடக்கும் போது நண்பர்களுடன் கதை பேசிக் கொண்டோ, மொபைலில் பேசிக் கொண்டோ நடக்காமல், எட்டு வடிவில் நடப்பதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

முடிந்தால் காலில் சப்பல், ஷூ அணியாமல் இந்த நடைப் பயிற்சியை செய்யுங்கள்.

 

பலன்கள்:

சாதாரண நடைப் பயிற்சி போல் அல்லாமல் எட்டு வடிவில் நடக்கும் போது உடலில் ஏற்படும் திருப்பங்களால் இடுப்பு, வயிற்று சதைகள் போன்ற பல உறுப்புகளும் செயல்பாட்டில் வருகின்றன.

இப்படி உடலின் பல பகுதிகளும் பயிற்சியில் ஈடுப்படுவதால் உடல் எடை விரைவாக குறைய இந்த நடைப் பயிற்சி உதவுகிறது.

ட்டு வடிவில் நடக்கும் போது மூச்சுப் பயிற்சியும் செய்தால், நுரையீரலின் செயல்பாடு மேம்படும். சுவாசக் குழாய் தொடர்பான பிரச்னைகள் சீராகும்.

ட்டு வடிவில் கவனம் செலுத்தி நடப்பதால், மனம் ஒரு நிலையை அடையவும், மன அமைதியை பெறவும் இந்த பயிற்சி உதவுகிறது.

 

டல் எடையை குறைத்து, மன அமைதியை தந்து, நாம் ஆரோக்கியமாக வாழ உதவும் எட்டு வடிவ நடைப் பயிற்சியை தினமும் பதினைந்து நிமிடங்கள் செய்யுங்கள். பலன் பெறுங்கள்!

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.