Health Tip # 64 - இதயத்திற்கு நலம் தரும் ஜாக்கிங்:
ஜாக்கிங் இதயத்திற்கு நலம் தரும் உடற்பயிற்சி நம்மில் பலரும் அறிந்ததே.
ஆனால் அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?
இதயத்திற்கு நலம் தரும் ஜாக்கிங்:
ஜாக்கிங் செய்யும் போது இதயம் சுருங்குவதால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.
இதய ரத்த குழாய்களும், ரத்த குழாய்களை சுற்றி இருக்கும் அமைப்புகளும் வலுவடைகின்றன.
ரத்த குழாய்களின் உட்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்கள் தடுக்கப்படுகின்றன.
உயர் ரத்த அழுத்த நிலையைக் குறைக்கவும் ஜாக்கிங் துணை புரிகிறது.
இதயத்தின் ‘ஆர்டேரி’களில் ஓடும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதால் ரத்தம் உரைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
அதே போல ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும் குறைத்து மாரடைப்பு அபாயத்தை தடுக்கிறது.
ஜாக்கிங்கின் நலனை பற்றி தெரிந்துக் கொண்டீர்கள்! உங்களுக்கு முட்டி வலி, கால் வலி போன்ற பிரச்சனைகள் இல்லை என்றால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு ஜாக்கிங் செய்ய தொடங்குங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்!
{kunena_discuss:1131}