(Reading time: 2 - 3 minutes)

Health Tip # 67 - உட்கார்ந்தே இருக்காதீங்க பாஸ்... எழுந்து நடங்க!

a-man-sitting-on-a-sofa-watching-tv

டிவி, லேப்டாப், மொபைல், டேப் என்று உட்கார்ந்த இடத்திலேயே இருந்து வேலை செய்வது அல்லது பொழுது போக்குவது நம் வாழ்வில் அங்கமாகி விட்டது.

இதனால் நம் ஆரோக்கியத்திற்கு கேடு என்று தெரிந்தாலும் நாம் நம் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்வதில்லை.

ஆனால் அப்படி உட்கார்ந்தே இருப்பது நம் ஆயுட்காலத்தை பல மடங்கு குறைத்து விடும் என்பது கசப்பான உண்மை.

 

திக நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு 64% இதய நோய்கள் உண்டாவதாகவும், 30% கேன்சர் வருவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.

 

உடல் அசைவு இல்ல்லாமல் பல மணி நேரம் அமர்ந்திருப்பதால் சர்க்கரை நோய், உடல் எடை அதிகமாகுதல் போன்ற தொல்லைகளும் வரும்.

 

ப்படி ஆரோக்கிய சீர்கேட்டின் உச்சபட்ச நிலைமை வரை விட்டு விடாமல் ஆரம்பத்திலேயே நம் பழக்க வழக்கங்களை மாற்றுவது நல்லது.

 

உட்கார்ந்திருக்கும் நிலையை விட்டு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து நடமாட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

 

உங்கள் வேலை தொடர்ந்து அமர்ந்து செய்வதாக இருந்தாலும், சின்ன சின்ன ப்ரேக் எடுத்து உங்கள் தசைகளுக்கு அசைவு கொடுக்க மறக்காதீர்கள்!

 

உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தான் பேணி பாதுகாக்க வேண்டும்!

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.