(Reading time: 4 - 7 minutes)

01. நலமறிய ஆவல்..!! - வசுமதி

Maida

ரண்டாம் உலக போர்..

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது.

அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கிடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறீங்களா...??

இப்போ ட்ரெண்ட்னு நாம் உட்கொள்ளும் பாஸ்ட் புட்டின் மூல பொருள் உருவானதும் இந்த போரின் மூலமாகத்தான்...

YES...மைதாவே தான்...

போரின் போது போர் வீரர்களுக்கு கோதுமையிலான உணவுகளே அதிகம் வழங்கப்பட்டது.. ஆகையால் அதற்கு பெருமளவில் கோதுமை தேவைப்பட்டது. ஆனால், கோதுமையை பெருமளவு உபயோக படுத்தியதால் அதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது…

அச்சமயம் போர் வீரர்களுக்கு மட்டும் அல்லாது உலக நாடுகள் அனைத்திலும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது .. இப்பற்றாற் குறையினால் கிட்ட தட்ட பத்து லட்சம் பேர் இறந்தனர்..

இதையடுத்து கோதுமைக்கு மாற்றுப் பொருளை கண்டறியும் முயற்சி தீவிரமானது. அதற்கான ரிசல்ட் தான் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மைதா மாவு..

சரி இப்போ மைதா எப்படி தயாரிக்கறாங்கனு பார்க்கலாம்..

முதலில் கோதுமையில் இருக்கும் கல், மண், குப்பைனு எல்லாத்தையும் சுத்தம் செய்யறாங்க.. கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன.. பின்பு அதன் மீது தண்ணீர் தெளித்து வைக்கிறார்கள்..

இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து பார்க்கும் பொழுது கோதுமை உருண்டு திரண்டு விடுகின்றது..இதனை நன்றாக காயவைத்து கொள்கின்றனர்..

அடுத்துதான் முக்கியமான வேலை ஆரம்பிக்கின்றது..காய வைத்த கோதுமையை ஒரு மெஷினில் கொட்டுகின்றனர்.. அது கோதுமையில் உள்ள மேல் தோலை மட்டும் அளவாக சுரண்டி எடுக்கின்றது.. இந்த மேல் தோலை தான் நாம் தான் நாம் "ரவை" என்று கூறுகின்றோம்..

அப்புறம் அது வேர் ஓர் மெஷினுக்குள் செல்கின்றது.. அந்த மெஷின்ல தான் அந்த கலவை மாவாக்க படுகின்றது..அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது.. இதுக்கு தான் "மைதா"னு பெயர்..

இந்த பென்சாயில் பெராக்சைடு'னா என்னனு கேட்கிறீர்களா..??

பென்சாயில் பெராக்சைடு ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது.

இது மைதாவில் உள்ள மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு காரணியாகிறது. மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.

இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகு மிருதுவாக மாறுகிறது.

சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன.

இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த வேதி பொருளை ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த வேதி பொருளை சேர்க்கப்படும் மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும்.

 இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன.

இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன.

 கோதுமை தீட்டப்படும் போதே 76 % வைட்டமின்களும், தாது பொருட்களும் அகற்றப்படுகின்றன. அத்துடன் 97 % நார்ச்சத்தும் களையப்படுகிறது. களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல.

கோதுமைங்கறது வட இந்தியாவில் விளையும் ஒரு வகை தனியமாகும்..நல்ல சத்து அதில் உள்ளடங்கி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை..ஆனால் கோதுமைக்கு நிகராய் தென் இந்தியாவில் ஒரு தானியம் உண்டு..

அது என்னனு தெரியுமா..???

நலமறிய ஆவல்...

Episode # 02

{kunena_discuss:1112}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.