Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
பொது - பாஸா ? பெயிலா? - ஜான்சி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

பொது - பாஸா ? பெயிலா? - ஜான்சி

passFail

வாழ்க்கை எனும் பாஸா பெயிலா விளையாட்டு.

ஆம் , வாழ்க்கை என்பது யாதெனில் என்று நிமொடத்திற்கொருதரம் உலகின் வெவ்வேறு மூலைகளில் வெவ்வேறு கருத்துக்கள், கவிதைகள், படைப்புக்கள் பல்வேறு சிந்தனைகள் வெளிப்படுகின்றன.

அது எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும், நாம் அதனை அதாவது வாழ்க்கையை இங்கே எதுவாக மாற்றி வைத்திருக்கிறோம் என்பதுதான் கேள்வியே!!

வாழ்க்கையை வெற்றியால் அல்லது தோல்வியால் நிர்மாணிக்க நமக்கு கற்றுக் கொடுத்தது யார்?

வெற்றி தோல்வி பற்றியே கவலையுற்று வாழ்வின் நாட்களை துன்பமாய் மாற்றியதும் யார்? விடை தெரியா கேள்வி அல்லவா?

ஒருவன்(ள்) தனித்து வாழ்ந்தால் அது தோல்வி, திருமணம் செய்து கொண்டால் அது வெற்றி.

திருமணம் நிலைத்து நின்றால் அது வெற்றி? முறிந்து விட்டால் அது தோல்வி?

திருமணத்தின் சில வருடங்களுக்குள் குழந்தை பிறந்தால் அது வெற்றி? இல்லாவிட்டால் அது தோல்வி?

பிறந்த குழந்தை நலமாய் இருந்தால் அது வெற்றி? ஊனம்/ மூன்றாம் பாலினம்/ நலக்குறைவு இருந்தால் அது தோல்வி?

நலமான குழந்தை மிக சிறந்த கல்வி நிறுவனத்தில் பயின்றால் அது வெற்றி அல்லது தோல்வி.

கல்வி கற்கும் குழந்தை தேர்வில் வெற்றி பெற்றால் அது வெற்றி இல்லை அக்குழந்தையின் வாழ்வு தோல்வி.

கல்வி நிறைவு பெற்ற பின்னும் வேலை உடனே கிடைத்தால் அது வெற்றி, கிடைக்காவிட்டாலோ தாமதமானாலோ அது தோல்வி.

வேலைக் கிடைத்த பின் வீடு ,வாகனம் வாங்கினால் அது வெற்றி இல்லையென்றால் அது தோல்வி.

இப்படி எல்லாவற்றிலும் ஒரு நிலைப்பாடு . அந்த பொத்தாம் பொதுவான நிலைப்பாட்டால் அதன் விதிமுறைப்படி தோல்வியுற்றவர்களை உலகம் மதிப்பதில்லை.

தோல்வி அடைந்தவன் ஒன்று அதை முறியடித்து வெற்றி வாகை சூடுகிறான்.அல்லது, அதனை ஏற்க முடியாமல் துன்பத்தில் உழன்று மனநோயாளி ஆகின்றான், அல்லது நேர்வழி கிட்டாமல் தீயவழி நாடுகிறான்.

வெற்றியோ, தோல்வியோ அனைத்தும் வாழ்வின் அங்கம் தான் எனும் தத்துவம் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமல்ல தோல்வி அடைந்தவர்களை பரிதாபமாக காண விழையும் வெற்றி அடைந்தவர்களுக்குமானதே.

நீ தோற்றுவிட்டாய் என பிறனை குறைச் சொல்லாமல், வார்த்தைகளால், செயல்களால் துன்புறுத்தாமல் அது அவர்களின் வாழ்க்கை அதை தோல்வி என நான் கருதுவானேன் என எண்ணலாம் அல்லவா?

 

தினம் ஒரு புன்னகை

தினம் ஒரு மலர்ச்சி

களைந்திட வேண்டாம் - நம்

முகமதில் மகிழ்ச்சி

வாடும் காலம் 

அறியாத போதும்

மலர்ந்து விரிந்த

மலர்கள் போலவே

புன்னகையோடு - நாம்

வாழ்ந்திடுவோம்.

குழந்தையின்மையால் பல்வேறு உடல், மன நல பிரச்சனைகள் சந்தித்த என் தோழிக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Jansi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: பொது - பாஸா ? பெயிலா? - ஜான்சிThenmozhi 2018-04-23 06:13
romba nalla katturai Jansi (y) Theliva solli irukkiinga (y)
Reply | Reply with quote | Quote
# RE: பொது - பாஸா ? பெயிலா? - ஜான்சிmadhumathi9 2018-04-23 05:17
:clap: arumaiya irunthathu anaivarukkum thevaiyaana ondru. (y)
Reply | Reply with quote | Quote
# RE: பொது - பாஸா ? பெயிலா? - ஜான்சிJansi 2018-04-21 14:15
Thank u frnds
Reply | Reply with quote | Quote
+1 # RE: பொது - பாஸா ? பெயிலா? - ஜான்சிAdharvJo 2018-04-20 20:45
well said Jansi ma'am :clap: :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: பொது - பாஸா ? பெயிலா? - ஜான்சிsasi 2018-04-20 20:36
அருமையான கருத்துக்கள் படிக்க படிக்க புரிதல் வருகிறது :GL: :hatsoff:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 12 Jan 2019 20:22
Tamil Jokes 2019 - அடப்பாவி :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/12785...81%E0%AE%B7%E0%AE%BE
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 11 Jan 2019 19:51
Tamil Jokes 2019 - நவீன பிச்சைக்காரன் :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/12778...81%E0%AE%B7%E0%AE%BE
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 11 Jan 2019 19:48
ஆன்மீகக் கட்டுரை - தனிநபர் சுதந்திரம் - ரவை

இந்தியா என்கிற பாரதம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.

அதாவது, அரசியல் ரீதியாக, பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலை பெற்று, மக்களாட்சிமுறையில் வாழ்கிறோம்.

***************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/lifestyle/spiritual-menu...%B5%E0%AF%88?start=1
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 10 Jan 2019 18:33
Tamil Jokes 2019 - அய்யய்யோ! :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/12771...81%E0%AE%B7%E0%AE%BE
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 09 Jan 2019 18:25
Tamil Jokes 2019 - செகன்ட் ஹீரோ :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/12763...81%E0%AE%B7%E0%AE%BE

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top