(Reading time: 2 - 3 minutes)

பொது - செல்லப் பிராணிகள் பிரியரா நீங்கள்? இந்திய நாய் வகைகளை வாங்கி வளருங்களேன்.

செல்லப் பிராணிகள் பிரியரா நீங்கள்? இந்திய நாய் வகைகளை வாங்கி வளருங்களேன்.

  

ராஜபாளையம் (Rajapalayam) நாய்

இது தமிழ்நாட்டின் ராஜபாளையத்தை சேர்ந்த நாய் வகை.

ராஜபாளையம் நாய்கள் தூய்மையான இந்திய வேட்டை நாய் இனமாகும்.

இந்த நாய்கள் தங்கள் மோப்ப சக்தியை நம்பி இருக்காமல், தன் பார்வையை பயன்படுத்தி, வேகத்தின் துணையோடு வேட்டையாடும் நாய் வகையை சேர்ந்தவை.

முன்பெல்லாம் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்கு இவை பயன்படுத்தப் பட்டது.

  

கன்னி (Kanni) நாய்

கன்னி நாய் இனமும் தமிழகத்தை சேர்ந்தது.

இதுவும் முன்பு வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டது.

கன்னி நாய்கள் அரிய தென்னிந்திய நாய் இனங்களில் ஒன்றாகும். இவற்றின் விசுவாசம் மிகவும் பிரபலம்.

கன்னி வகை நாய்கள் தன் வீடு மற்றும் எஜமானரை எப்போதும் பாதுகாப்பதை தங்களின் தலையாய கடமையாக எண்ணுபவை.

 

கோம்பாய் (Combai / Kombai)

கோம்பாய் அல்லது கொம்பை நாய் இனம் தென் இந்தியாவில் காணப்படுகிறது.

கோம்பாய் மிகவும் பழமையான, உயர் வகை நாய் இனமாகும்.

இவை ராஜபாளைய நாய்களை விட சக்திவாய்ந்த தாடைகளைக் கொண்டுள்ளது.

இவை வேட்டையாடவும், காவல் நாயாகவும் பயன்படுத்தப்படுகிறது.

 

சிப்பிபரை (Chippiparai) நாய்

பெரியார் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் காணப்படும் இந்திய வேட்டை நாய் இனத்தில் சிப்பிபரை ஒன்றாகும்.

முன்பெல்லாம் சிப்பிரை நாய் காட்டுப்பன்றி வேட்டையாட பயன்படுத்தப் பட்டது.

இது ஒரு புத்திசாலித்தனமான நாய் இனம் மற்றும் ஒரு அற்புதமான காவல் நாயும் கூட.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.