(Reading time: 3 - 5 minutes)

Wordle – லேட்டஸ்ட் வைரல் வொர்ட் கேமில் வெற்றி பெற ஈஸி டிப்ஸ்

2022 இப்போது தான் தொடங்கி இருக்கிறது. இந்த வருடத்தின் லேட்டஸ்ட்டாக வைரல் ஆகிக் கொண்டிருக்கும் ஆங்கில வார்த்தை விளையாட்டு wordle.

  

பொதுவாகவே வார்த்தை விளையாட்டுக்கள் மற்ற விளையாட்டுகளை விட நல்லது. இது போன்ற விளையாட்டுக்கள் நமக்கு பல புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்தும். கூடவே நம் மூளைக்கும் நல்ல எக்சர்சைசை கொடுக்கும்.

  

நீங்கள் இது வரை wordle விளையாடியது இல்லை என்றால், இது தான் அந்த விளையாட்டின் ஷார்ட் விளக்கம்.

  

ஒவ்வொரு நாளும் ஒரு புது புதிய ஐந்து எழுத்து வார்த்தையோடு விளையாட்டு தொடங்கும்.

  

ஒவ்வொருவருக்கும் அந்த வார்த்தையை யூகிக்க ஆறு முயற்சிகள் கொடுக்கப் படும்.

  

நீங்கள் கெஸ் செய்ய செய்ய, எழுத்துக்களின் நிறம் மாறும்.

  

கிரே கலர் – அந்த எழுத்து வார்த்தையில் இல்லை.

  

மஞ்சள் நிறம் - அந்த எழுத்து வார்த்தையில் இருக்கிறது. ஆனால் சரியான இடத்தில் இல்லை.

  

பச்சை நிறம் - அந்த எழுத்து வார்த்தையில் சரியான இடத்தில் இருக்கிறது.

  

Wordle விளையாட்டில் வெற்றிப் பெற உங்களுக்காக சில ஸ்பெஷல் டிப்ஸ் இங்கே:

  

இரண்டிற்கும் அதிகமாக vowels இருக்கும் வார்த்தைகளுடன் தொடங்குங்கள்.

  

உங்கள் முதல் வார்த்தையில் எவ்வளவு vowels (a,e,i,o,u) இருக்கிறதோ, அவ்வளவு உங்களுக்கு நல்லது!

  

Audio, Equal போன்ற வார்த்தைகள் இதற்கு உதாரணம்.

  

கண்டுப்பிடிக்க வேண்டிய வார்த்தையில் எத்தனை vowel எழுத்துக்கள் இருக்கின்றது என்று தெரிந்துக் கொண்டால் வார்த்தயை கண்டுப்பிடிப்பது எளிதாகும்.

  

அடுத்து பாப்புலர் எழுத்துக்கள் இருக்கும் வார்த்தைகளை முயற்சி செய்யுங்கள்.

  

S, T, R, N போன்ற அதிகமாக வார்த்தைகளில் பயன் படுத்தும் எழுத்துக்களை கொண்ட வார்த்தைகளை அடுத்து முயற்சித்துப் பாருங்கள்.

  

எவ்வளவுக்கு எவ்வளவு புது எழுத்துக்களை பயன்படுத்தி கெஸ் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு சரியான எழுத்துக்கள் என்ன என்று சீக்கிரமே கண்டுப்பிடிக்க உதவும்.

  

ஒரே எழுத்துக்கள் இரண்டு முறையும் வரலாம்.

  

நாம் கண்டுப்பிடிக்க நினைக்கும் வார்த்தையில் ஒரே எழுத்து பல முறை உள்ளதா என்பதை பற்றி Wordle எங்கேயும் தெரியப் படுத்தாது.

  

Wordle கீபோர்ட் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத எழுத்துக்களைக் காண்பிக்கும்.

  

அந்த எழுத்துக்கள் வைத்து அர்த்தமுள்ள வார்த்தையை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றால், ஏற்கனவே கண்டுப்பிடித்த எழுத்துக்களை மீண்டும் பயபடுத்திப் பாருங்கள்.

  

சும்மா ஃபார் ஃபன் விளையாடிப் பாருங்கள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.