(Reading time: 4 - 8 minutes)

Inspire Me - ஓப்ரா வின்ஃப்ரே - குடிசையில் இருந்து கோபுரத்திற்கு

ன்று உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர் ஓப்ரா வின்ஃப்ரே.

குடிசையில் இருந்து கோபுரத்திற்கு என்ற சொற்றோடருக்கு ஏற்ப மிகவும் பின்தங்கிய ஏழை குடும்பத்தில் பிறந்த ஓப்ராவின் இன்றைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 19194 கோடி ரூபாய்!

  

மற்றவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒப்ராவே தன் கதையை உலகத்துடன் பல கோடி முறை பகிர்ந்துள்ளார்.

  

ஒப்ராவின் இள வயது வாழ்க்கை:

ரு மனிதனின் வாழ்வில் இருக்க கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் சிறு வயதிலேயே ஒப்ரா எதிர் கொண்டார் - வறுமை, வன்முறை, பாலியல் தாக்குதல் இன்னும் எத்தனையோ.

ஆனாலும் அதை எல்லாம் தாண்டி ஓப்ரா வெற்றி பெற்றார். அவருடைய இந்த வெற்றி உத்வேகத்தின் உண்மையான எடுத்துக்காட்டு!

 ஓப்ரா வின்ஃப்ரேவின் வாழ்க்கை நம் அனைவருக்குமே ஊக்கமளிக்கும் ஒன்று.

  

ஓப்ரா வின்ஃப்ரே 1954 இல் கிராமப்புற மிசிசிப்பியில் (அமெரிக்கா) பிறந்தார். அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய நேரம் அது. தன் சிறு வயதை அம்மா, பாட்டி,  அப்பா என்று மாற்றி மாற்றி ஒவ்வொருவருடனும் செலவிட்டார். 1960 களின் அமெரிக்காவில் ஒரு ஏழை, கறுப்பினப் பெண்ணாக இருப்பது மிகவும் கடினமான ஒன்று.

ஆனாலும், ஒப்ரா அனைத்து தடைகளையும் தகர்த்தெரிந்து வெற்றிப் பெற்றார்.

 

சிறு வயதிலிருந்தே, ஓப்ரா ஆளுமையின் மிகப்பெரிய வலிமையைக் கொண்டிருந்தார். மேடைகளில் ஏறி பேச ஓப்ரா சிறுவயது முதலே அவர் தயங்கியது கிடையாது.

இந்த ஆளுமைதான் அவர் தொலைக்காட்சி ஒளிபரப்பில் சேரவும் சிறந்து விளங்கவும் வழிவகுத்தது.

  

1971 ஆம் ஆண்டில், உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோதே, ஓப்ராவின் திறமை அவருக்கு ஒரு வானொலி நிலையத்தில் வேலைப் பெற்று தந்தது. அங்கே இருந்து சில வருடங்களில் டி.விக்கு மாறினார்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.