(Reading time: 2 - 3 minutes)
The Belgian pilot who miraculously survived the plane crash 🎥.
The Belgian pilot who miraculously survived the plane crash 🎥.

விமான விபத்தில் அதிசயமாக உயிர் தப்பிய பெல்ஜிய விமானி 🎥.

   

   

பெல்ஜியத்தில் இருக்கும் ப்ரூஜஸ் நகரில் சமீபத்தில் நடுவானில் ஒரு விமான விபத்து ஏற்பட்டது.

  

தரையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் அந்த விமானம் வானில் இருந்து விழுவது படமாகி இருக்கிறது. விமானத்தில் பாராசூட் உயிர் பெற்று இருந்தது.

  

ப்ரூஜஸ் நகர் மக்கள் சிலர் வானத்தில் வெடிக்கும் சத்தம் கேட்டு மேலே பார்த்தார்கள். அப்போது விமானம் வானத்திலிருந்து கீழே விழுந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தார்கள்.

 

முதலில், விமானம் மெதுவாக வருவதுப் போல் இருந்தது. ஆனால் அது தரையை நெருங்கி, மரங்கள் மற்றும் விளக்கு கம்பங்களுக்கு மேல் மோதியப் போது வேகமாக கீழே விழுவது தெரிந்தது.

  

மிக உரத்த சத்தத்துடன், விமானம் சாலையின் ஓரத்தில் தன் மூக்கை இடித்து நின்றது. அதன் இடது இறக்கை அங்கிருந்த வேன் மற்றும் வேலியின் மேல் மோதியது.

  

இந்த விபத்தில் நம்பவே முடியாத அதிர்ஷ்டமாக விமானி உயிர் தப்பினார். அவருக்கு சிறிய காயங்கள் மட்டுமே உள்ளது.

 

தரையில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.