(Reading time: 2 - 3 minutes)
Ever wonder how pizza got its name??
Ever wonder how pizza got its name??

பிட்சாவிற்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா??

பிட்சாவிற்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா??

   

பிட்சா இத்தாலிய வார்த்தை என்றாலும் அதன் பின்னணி மிக தெளிவாக இல்லை.

  

பிட்சா என்பது கிரேக்க வார்த்தையான பிட்டா என்பதிலிருந்து வந்தது என்று சிலர் நம்புகிறார்கள்.

  

மற்றவர்கள் இது லாங்கோபார்டிக் மொழியிலிருந்து வந்தது என்று கூறுகிறார்கள். லாங்கோபார்டிக் என்பது வடக்கு இத்தாலியில் முன்பு பேசப்பட்ட ஒரு பண்டைய ஜெர்மன் மொழியாகும். லாங்கோபார்டிக் மொழியில் பிஸ்ஸோ என்ற சொல்லுக்கு "கடி" என்றுப் பொருள்.

   

"பிட்சா" என்ற வார்த்தையின் முதல் பதிவு கி.பி 997 தேதியிட்ட லத்தீன் உரையில் இருக்கிறது. அதில் இத்தாலிய நகரமான கெய்ட்டாவின் பிஷப், கிறிஸ்துமஸ் தினம் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு அன்று "பன்னிரண்டு பிட்ஸாக்கள்" (duodecim pizze) பெறுவார் என்று சொல்லப் பட்டு இருக்கிறது.

  

ஆங்கில அகராதியாசிரியரான ஜான் ஃப்ளோரியோ, 1598 இத்தாலிய-ஆங்கில அகராதியில் பிட்சா என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறார். அதில் பிட்சா என்பதற்கு "ஒரு சிறிய கேக் அல்லது வேஃபர்" என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

  

1800 களின் முற்பகுதியில், பிட்சா என்ற வார்த்தை ஆங்கிலம் பேசுபவர்களால் பயன்படுத்த படத் தொடங்கியது.

  

அப்போது தொடங்கி இன்று வரை உலகின் பல மூலை முடுக்குகளிலும் பிட்சா ராஜ்ஜியம் செய்கிறது!

  

ஆனால் அந்த பெயர் எங்கே இருந்து வந்தது என்பதற்கான ஆதாரப்பூர்வ தகவல் இல்லை!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.