(Reading time: 3 - 5 minutes)

சினம் எனும் சீக்கு.... - தங்கமணி சுவாமினாதன்

Sinam

சினம் நவரஸ பாவங்களில் ஒன்று. ஆனாலும் சினம் எனப்படும் கோபத்தால் நன்மை ஏதாகிலும் விளைகிறதா என்று பார்த்தால் பலன் மிக மிகக்குறைவே. கோபத்தால் ஏற்படும் துன்ப விளைவுகளே மிக அதிகம். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகள் சில நிமிடங்களோ சில மணிநேரமோ, சில நாட்களோ மட்டுமே நீடித்து பின்னர் நீங்கினால் அதுவே அவர்களிடையே நெருக்கத்தை அதிகப்படுத்தி அவர்களின் உறவை வலுப்படுத்துகிறது. ஆனால் கணவன் மனைவி மீதோ மனைவி கணவன் மீதோ கொள்ளும் தீராக்கோபம் அவர்களிடையே மனக்கசப்பு, சண்டை, அடித்தல், வீட்டை விட்டுச் செல்லுதல் என்றாகி கடைசியில் விவாகரத்து வரை சென்று விடுகிறது. இரு குடும்பக்களுக்கிடையே உண்டாகும் கோபம் உறவைப் பாதிக்கிறது. கோபத்தால் வாய்த்தகராறு, கைகலப்பு, குத்து, வெட்டு, கொலை என்றாகி சிறை வரை கொண்டு செல்கிறது. கோபம் ஆரம்பத்தில் மனதில் கொஞ்சமாய் வந்து பின்னர் அந்த சினம் சாத்தானாய் உருவெடுத்து சாதி,மதப் பிரர்ச்சனைகளையும் உண்டாக்கி தன்னால் முடிந்த அளவு கேட்டினை விளைவிக்கிறது. சிலர் தனக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும் என்றும் தான் ஒரு முன் கோபி என்றும் கூறி அது தனக்குப் பெருமை சேர்க்கும் குணம் என்று.நினைப்பர். எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்பவரை யாரும் மதிக்க மாட்டார்கள். எப்போதாவது வரும் கோபத்திற்கு தான் மரியாதை உண்டு. அப்படியென்றால் கோபமே கூடாதா? அப்புறம் ஏன் அதை நவரஸங்களில் ஒன்றாக வைத்திருக்கிறாரகள் எனலாம். சுவைகளில் கசப்பும் தேவை போல் சினமும் தேவைதான். நிலத்தில் ஊர்ந்து செல்லும் மண்புழு தன்னை யாராவது மிதித்தால் கோபத்தில் தலையைத் தூக்கிப் பார்க்குமாம். அதற்கே அப்படி என்றால் மனிதகுலம் நமக்கு கொஞ்சமாவது கோபம் வேண்டாமா?

ஒரு அலுவலகம். அதன் மேலாளர் தன் கீழ் பணியாற்றுபவர்களிடம் மிக இணக்கமாகவே இருக்கிறார். எப்பொழுதும் அப்படியே இருந்தால் ஊழியர்களில் சிலபேர் தலையில் மிளகாய் அறைத்துவிடுவர். குறித்த காலத்திற்குள் பணிகள் நடைபெறா.அன்னிலையில் மேலாளர் அவர்களிடத்து தன் கோபத்தைக் கொஞ்சமாவது காட்டித்தான் ஆகவேண்டும்.ஆனால் கோபம்

பிறரின் உடலையோ(கோபத்தால் தாக்குவது),உள்ளத்தையோ காயப் படுத்தாது இருக்க வேண்டும்.

ஆத்திர(கோபம்)க் காரனுக்குப் புத்தி மட்டு என்பர்.ஒருவர் கோபப் படும் போது அவரின் முக தசைகள் இறுகுவதாகவும் ரத்த ஓட்டம் சீரற்றுப் போவதாகவும் மூளையின் செயல்திறன் பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.அதே சமயம் சிரிப்பு உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு "டானிக்" என்பர்.(வில்லன் சிரிப்பும்,பைத்தியச் சிரிப்பும் வேறு.)எல்லோரும் ஸ்ரீராமனைப் போல் கோபமே வராதவர்களாக இருக்க முடியாது.அவரைப்போல் அவதார புருஷரில்லை நாம்.சாதாரண மனிதப் பிறவி.கேடு ஒன்றையே விளைவிக்கும் கோபத்தை விட்டு நன்மை தரும் சிரிப்பைக் கைகொண்டு

மனிதனேயம் வளர்த்து இனி பூமியில் மகிழ்ச்சியை விளைவிப்போமே.போனால் போகிறது ரொம்ப

ரொம்ப கொஞ்சூண்டு மட்டுமே கோவப்படுவோம்..சரியா..?

நன்றி......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.