(Reading time: 5 - 9 minutes)

கதை எழுதலாம் வாங்க! - 02

Story Writing

ங்கள் கதை கருவை தேர்வு செய்தாகி விட்டது. அதற்கு ஏற்ற taglineம் தேர்வு செய்தாகி விட்டது.

இனி அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது,

முழு கதைக்கு வடிவம் கொடுப்பது!

ங்கள் கதையின் ஹீரோ, அவரை சுற்றி இருக்கும் கதாபாத்திரங்கள், ஹீரோயின், அவர்களை சுற்றி இருக்கும் கதாபாத்திரங்கள், வில்லன் இப்படி கதாபாத்திரங்களை ஒரு ஸ்கெட்ச் போடுங்கள்.

உங்களுக்கு மனதினுள் இதை செய்வது கடினமாக இருந்தால், ஒரு பேப்பரிலோ, இல்லை கம்ப்யூட்டரிலோ பட்டியலிட்டு வையுங்கள்.

டுத்ததாக முழு கதையையும் ஒரு மாதிரியாக அவுட்லைன் போட்டு வையுங்கள்.

இந்த ‘அவுட்லைன்’ என்பது சில முக்கிய காட்சிகளுக்கானது. உதாரணமாக காதல் கதை எழுத போகிறீர்கள் என்றால் கதாநாயகனும் கதாநாயகியும் எங்கே எப்படி சந்தித்துக் கொள்வார்கள், அவர்களுள் எப்படி காதல் மலரும், இவர்களின் அன்புக்கு வில்லன் யார் என உங்களையே தெளிவாக்கி கொள்ளுங்கள்.

இங்கேயே க்ளைமாக்ஸ் பற்றியும் நீங்கள் யோசித்து விடுவது நல்லது.

ப்போது கதை ரெடி, கதாபாத்திரங்களும் ரெடி, அடுத்து செய்ய வேண்டியது என்ன என்றால்,

காட்சிகளை வரிசை படுத்துவது.

தையை உங்களுக்கு பிடித்தது போல நேராக எடுத்து செல்லலாம். இல்லை பிளாஷ்பேக் மூலம் எடுத்து செல்லலாம், இல்லை வாசிப்பவரை கவரும் ஒரு காட்சியை கொடுத்து, அங்கே சில 'கொக்கி' கேள்விகளை வைத்து அதை சஸ்பென்சாக கதையோடு எடுத்து செல்லலாம்.

தற்கு சில உதாரணங்கள் சொல்கிறேன்.

chillzeeயில் வெளி வந்த “மனதிலே ஒரு பாட்டு” கதையில் நிகழ் காலமும், கடந்த காலமுமாக மாறி மாறி காட்சிகள் செல்லும்....! இது நம்மை கதையுடன் ஒன்றி போக செய்யும்.

அதே போல chillzeeயில் வெளிவந்த “நீ தானா” கதையில் முதல் காட்சியிலேயே விவாகரத்து என்று தொடங்கும். அங்கே நாம் சந்திக்கும் அந்த கணவன் கதாபாத்திரம் மனதில் இப்போதும் மனைவியின் மீது அன்பு இருப்பது நமக்கு தெரியும்.... பின் ஏன் இந்த விவாகரத்து என ஒரு ‘கொக்கி’ வைத்து நகரும் கதை ஆங்காங்கே மெல்ல மெல்ல கடந்த கால கதையை சொல்லும்....

இந்த ‘கொக்கி’ காட்சி அமைப்புக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு நம் chillzeeயில் வந்த மற்றொரு கதையான “கனியாதோ காதல் என்பது”. கதையின் ஆரம்பத்தில் கிராண்டாக ஒரு காட்சி வரும். அதில் வருபவர் தான் ஹீரோவா??? இவர் யார்? எப்படி வந்தார்? என பல கேள்விகளுடன் தொடங்கும் கதை, பின் அங்கிருந்து மாறி வேறு தளத்திற்கு செல்லும். ஆனாலும் படிக்கும் நம் மனதில் முதலில் வந்த அந்த கொக்கி காட்சியின் கேள்விகள் இருந்துக் கொண்டு ஆர்வத்தை தூண்டிக் கொண்டே இருக்கும்.

இது போல பல பல உதாரணங்கள் சொல்லலாம்.

நீங்கள் உங்கள் கதையில் காட்சிகளை எப்படி வரிசை படுத்த போகிறீர்கள் என்று யோசியுங்கள்.

சிம்பிளாக செய்ய வேண்டும் என்றால் நேராக கதையின் போக்கிலேயே எழுத வேண்டியது தான்.

இல்லை வித்தியாசமாக முயற்சி செய்ய போகிறீர்கள் என்றால் இப்பொழுதே அதற்கும் ஒரு அவுட்லைன் தயார் செய்து கொள்ளுங்கள்.

நிஜமும், கடந்த காலமுமாக கதை செல்ல போகிறது என்றால் எப்படி மாற்றி மாற்றி சொல்ல போகிறீர்கள் என்று பட்டியலிட்டு வையுங்கள்.

அதே போல சஸ்பென்ஸுடன் கதையை கொண்டு செல்ல போகிறீர்கள் என்றாலும் எந்தெந்த காட்சியில் எந்த மாதிரியான சஸ்பென்ஸ் வைக்க போகிறீர்கள் என்று இப்பொழுதே யோசித்து நோட் செய்து வையுங்கள்.

ன் கதை நல்ல கதை ஆனாலும் பலர் படிப்பதில்லை என வருத்தப்படும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

ல்ல கரு இருந்தாலும் அதை வாசிப்பவர்களுக்கு பிடிக்கும் விதமாக சொல்வதும் மிக மிக அவசியம்.

வாசகர்களை உங்களின் கதையோட ஒன்ற வைத்தால் காதல் கதை என்று இல்லை எந்த விதமான கதையாக இருந்தாலும் வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் வாசிப்பார்கள்.

இதற்கும் நீங்கள் இங்கேயே கொஞ்சம் நேரம் செலவிடுவது நல்லது

அறிமுக காட்சி மற்றும் க்ளைமேக்ஸ் காட்சியின் முக்கியத்துவம்

ல்லூரி காலத்தில் நூலகம் செல்லும் பழக்கம் எனக்கு உண்டு. எனக்கு பிடித்த காதாசிரியர்களின் கதைகளுடன் ஒவ்வொரு முறையும் புதியவர் ஒருவர் கதையையும் தேர்வு செய்வேன்.

எப்படி தேர்வு செய்வேன் என்று நினைக்குறீர்கள்?

முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் படித்து பார்ப்பேன்!

இது என்னுடைய பழக்கம், மற்றவர்களுக்கு வேறு வழக்கம் இருக்கலாம். சிலர் முன்னுரை படிப்பார்கள். சிலர் ஆங்காங்கே புரட்டி பார்ப்பார்கள்.... இப்படி எத்தனையோ...!

ஆனால் பெரும்பாலானோர் பார்ப்பது இந்த முதல் காட்சியும், கடைசி காட்சியும் தான்.

அது மட்டுமல்லாமல் அறிமுக காட்சியே ஜீவனில்லாமல் போரடிப்பதாக, இல்லை வழக்கமான காட்சியாக இருந்தால் தொடர்ந்து படிக்க படிப்பவர்களின் ஆர்வம் குறைந்து போகிறது.

எனவே இந்த இரண்டு காட்சிகளை பற்றி ‘பக்கா’வாக திட்டமிடுவது மிகவும் அவசியம்.

அறிமுக காட்சிக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். chillzeeயில் வெளிவந்த எப்பா பேய் மாதிரி இருக்கா கதையின் முதல் காட்சியில் ஒரு பெண் ஒருவனிடம் "என்னடா மப்புல இருக்கீயா?" எனக் கேட்கும் அதிரடி காட்சியோடு துவங்கும். மேலே படிக்க படிக்க அவள் நாம் நினைத்தது போல இவனை கேட்கவில்லை வேறு ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று புரியும். 

இப்படி நீங்களும் உங்கள் கதையின் அறிமுகம் & க்ளைமேக்ஸ் காட்சிகளை திட்டமிட்டு வையுங்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நான் நாளை சொல்கிறேன்.

ங்களின் கருத்துக்கள் கேள்விகள் வரவேற்க்கபடுகின்றன!

ட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே இருக்கும் share துணை கொண்டு உங்கள் உறவினர், நட்புக்கள் அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். உங்களை போலவே அவர்களுக்கும் சில நல்ல விஷயங்கள் தெரியட்டுமே....! smile நாளை சந்திப்போம்!

கதை எழுதலாம் வாங்க - 01

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.