(Reading time: 4 - 8 minutes)

திரையோடு தேடல் - கவிதாசன்

Movie

சுகந்திரத்துக்கு பின்னர் மிகப்பெரிய ஒன்று அனனவரையும் தொற்றிக்கொண்டது.... எல்லா இடங்களிலும் அது பிரதிபலிக்க நேர்ந்தது.... எது என்று நானா கூறவேண்டும்?????? 

ஆண்..., பெண்... என்ன தொடர்பு இவர்களுக்குள்.....??? அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், தோழர்கள், கனவன், மனைவி... இதை தாண்டிய ஒன்று தான் இன்று பெரும் செய்தியாக, கருவாக, பல கவிஞர்களுக்கு ஊக்குவிக்கும் சிந்தனையாக உள்ள ஒன்று.... நெருங்கிவிட்டேன் நான் இன்று சொல்ல விரும்புவதை....

காதல்: Love... The Feel between two Hearts especially felt amongst opposite sex... பொதுவான கருத்தாய் இதை நான் குறிப்பிடுகிறேன்....  

காணாமல் காதல் கொள்வது.., பேசாமல் காதலை உணர்த்துவது.., பின்னே சென்று உன்னை தான் பிடிக்கும் என்று உணரவைப்பது.., உன்னருகே என் இன்பம் என்று பாடுவது..... சாதி, மதம் என்று பல இடையூறுகளை சந்திப்பது.., என்று பல பரிமாணத்தில் பல சினிமா நாம் கண்டு இருக்கிறோம்......ஆனால் இன்று????????

Machan...., Love பண்ணா இப்படி ஒருத்திய Love பண்ணனும் டா......

Machan.... அவள correct பண்ண ஒரு idea குடுடா.....please .........

Dude.., What a Girl...!1!

Hey..., அந்த பையன பாருடி.., எவ்வளவு smart ஆ இருக்கான்.....

Hey..., He is looking handsome...!!! அவன love பண்ணலாமா???

இதில் சில, என் காதில் விழுந்தவை... சில திரையில் கண்டவை.....

பொழுதுபோக்கு: ஆதாவது, நம்மை மகிழ்ச்சியாய்..., ஓய்வாக இருக்கையில் பொழுதை கொண்டுசெல்ல இதற்கு பெரும் பங்குவுண்டு....

1930 s movies mostly focused on spreading the Idea of Independence.. 1960-1980 s had great emphasis on reformation of society which had the themes of relations, hurdles of people in their daily walks of life.. 1980 s movies were focused many social evils and unveiled the atrocities amongst them are unemployment, caste and religious faiths... இப்படி பட்டியலிட்டு சொல்வதன் முடிவு எதற்கு....???? 

இன்று?????

பல சிறந்த படங்கள் இன்று கண்முன்னே அங்கும் இங்கும் சில... Love, காதல் இதை கருவாய் கொண்டு உருவாகும் திரைப்படங்களை காண்கையில் உண்மை என்னவென்று உணராமல் திரைப்படங்கள் உருவாக்கபடுகிறது என்றே எனக்கு தோன்றுகிறது.... ஏதேனும் ஒரு படத்தை எடுத்து யோசித்து பாருங்கள்..... இதில் என்னத்தை கற்றுகொண்டோம் என்று..... Make a list out of it.... 

என்ன கிடைத்தது????

Hero, Heroine, villain and entertainer (popularly Comedian)..

MGR, SIVAJI, AMITABH BACHCHAN  இன்னும் பல... இவர்கள் நடிக்கையிலும் காதல் இருந்தது... ஆனால் அதோடு கதைக்கான பொருளும் இருந்தது.... இன்று???

Hero: கையில் Brandi/Whisky/Beer/Vodka/Scotch (whatever we know), வாயில் Cigarette இது ஒன்று...  24 hours பொண்ண correct பண்றதுதான் வேல... எப்படி பொண்ண உசார் பண்ணனும்..., எப்படி அவள என் பின்னாடி வரவைக்கிறேன் பாரு machi.... ஒரு பொண்ண Love பண்ண வைக்கறது எவ்லபெரிய விஷயம் தெரியுமா னு ஒரு நிமிஷம் வசனம்... 

எவ்ளோவோ இருக்கே.... இத ஏன் இவன் சொல்லுகிறான் என்று தோணலாம்.....

Newspaper ல News படிகிறவருக்கும் அதை கண்ணால் பார்பவருக்கும் நிகழ்கிற மனவோட்டம் மாறுபட்டவை... என் செவியில் விழுந்த வார்த்தை என்னை பெரிதும் பாதிக்காது... ஆனால் என் கண்ணில் விழுந்து மனதை தொட்ட வார்த்தை/சம்பவம் என்னில் ஆழமாக பதியும்... அதனால் தான் Media can create a mountain out of mole hill என்று அதனை நான் சொல்வேன்... இன்று ஒரு ஆணும் பெண்ணும் தோழர்களாக நெருங்கி பழகும் காலகட்டத்தில், நவினமையமான இந்த நூற்றாண்டில்..., எத்தனையோ பிரம்மாண்டமான SCIENTIFIC-FICTION போன்ற படங்கள் வந்து நம்மை தூண்ட வேண்டிய காலகட்டத்தில்.., இது போன்ற சில சினிமாக்கள்...இதனால் ஏற்படும் சமுதாய மாற்றத்தை, தாக்கத்தை அளவிட முடியாது.... ஆனால் காணலாம்... பள்ளி மாணவன் TASMAC இல்... சிறுவன் ஆசிரியரை கொன்ற சோகம்...இன்னும்......  

ஏன் என்று யோசிக்க தொடங்கினேன்.....   

Renaissance and Reformation: "The Earth is not Center.. Sun is at the Center of Solar System.." Copernicus- Heliocentric Theory.. For that he was hanged.. His theory was substantiated by Galileo later.. கருத்துகளை முன்வைத்து தவறுகளை சுட்டிக்காட்டி சமுதாய சீர்திருத்தம் நிகழ்ந்தது, மேற்கத்திய நாடுகளில்... நம் நாட்டில் சற்று தாமதமாக தொங்கியது Raja Ram Mohan Roy யால்... வெற்றி பெற்றதா என்று என்னை கேட்டால்......, நான் சொல்லும் பதில் "வெற்றி பெறும் என்றாவது ஒருநாள்"...  

இன்றைய இந்தியா தேவையான ஒன்றாக என்னுள் எழுந்த சிந்தனை: திரையில் கண்ணை கவரும் கன்னியாக காட்சியில் வைக்காமல் மனதை தூண்டும், வெற்றியை சுவைக்க முயற்சி செய்ய ஊக்குவிக்கும் மங்கையாய், அறிவியலில் பல சாதனை புரியும் ஆண், பெண், மற்றும் நம்மை ஒன்று திரட்டும் தேசபற்றுமிக்க சினிமாக்கள் வலம் வர வேண்டும்..... கற்பனை திறன் பெருக வேண்டும்...

காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா??? கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோனுமா?? காதலை பற்றி பல சரித்திரம் உள்ளது... ஆனால் இன்று திரையில் காணும் காதல் தவறான ஒரு சரித்திரத்தை படைக்க கூடாது.... ஆணும் பெண்ணும் இருவர்..., அவர்களில் மலரும் காதல் மட்டுமே அவர்களை ஒன்றாக இணைகிறது... காதல் என்பதே செயற்கையான மலரும் காதல் மலராக இருக்குமோ??? அல்லது முள்ளாக மாறுமோ??? மலராக செய்து பல மையில் தூரம் வாசம் வீச செய்வோம்....திரையில் காண்பதெல்லாம் சித்திரம் என்று நம்பி பல ஜீவன் உள்ளது... அவர்களுக்கு நற்செய்தியை படித்தால் நற்பயன் பயக்கும்.... இப்பிறப்பில் மனிதனாக பிறந்தோம். 

இறுதியாக என் பார்வையில் என் காதல் கவி மீது:

அருகினில் நிற்கிறாய் அன்பையே அள்ளி தருகிறாய்..

பெரிதாக என்ன செய்வேன்..? இதழ் மலர நகைக்க செய்வேன்.

ஆசைகளை வளர்க்க செய்தாய், பூக்களாய் பூக்க செய்தாய்

உன்னை நான் கையோடு கொள்ள, அள்ளி அள்ளி மகிழ 

என்றும் துணைவருவாய் என் எண்ணமே; எழுத்தே.....

திரையும் பல விந்தை புரியும் அதன் பயனை உணர வைக்கையில்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.