(Reading time: 2 - 4 minutes)

பொது - தன்னம்பிக்கை துணையோடு தூக்கி போடுங்கள் பயத்தையும், கூச்சத்தையும்

thannambikkai

என்னால் இதை எல்லாம் செய்ய முடியாது...

எனக்கு தைரியம் இல்லை...

நல்ல சான்ஸ் கிடைக்க காத்திருக்கேன்...

இப்படி ஏதாவது ஒரு சாக்கு போக்கை சொல்லி, உங்களுக்கு உயர்வு தரக் கூடிய ஏதேனும் விஷயத்தை தள்ளி போட்டுக் கொண்டிருக்கிறீர்களா???

இது சரி அல்ல! மீண்டும் யோசியுங்கள்!

 

தன்னம்பிக்கை

ந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற உங்களிடம் முதலில் இருக்க வேண்டியது தன்னம்பிக்கை தான்.

உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மலையென இருக்கும் காரியத்தையும் எளிதாக செய்து விட முடியும்.

அப்போது மேலே சொன்னது போன்ற சாக்கு போக்குகள் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ன்னம்பிக்கை மனிதனுள் மறைந்திருக்கும் திறமைகள் வரை வெளிக் கொணர்ந்து காட்டும் அபார சக்தி கொண்டது.

தன்னம்பிக்கையுடன் செயல்படும் குறைந்த திறமை உள்ளவர்கள் கூட அதீத திறமை பெற்றிருந்தும் தன் திறமையில் நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களை விட அதிகமாக சாதிக்க முடியும்!

 

தாழ்வு மனப்பான்மை

என்னால் இதை செய்ய முடியாது!

நான் இதை செய்தால் என்னை பற்றி தவறாக நினைப்பார்கள்.

நான் ஏதாவது தவறாக செய்து விட்டால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும்.

என்பவை எல்லாம் தனம்பிக்கையின்மையின் வெளிப்பாடுகள்.

இப்படி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது தாழ்வு மனப்பான்மையை தான் கொடுக்கும்.

 

தூக்கி போடுங்கள் பயத்தையும், கூச்சத்தையும்

உங்களுள் இருக்கும் திறமைகளை வெளிப் படுத்த விடாமல் தடுக்கும் பயம் மற்றும் கூச்ச சுபாவத்தை தூக்கி வீசுங்கள்.

உங்களை பற்றி சுய மதிப்பீடு செய்து உயர்வான எண்ணங்களை மனதில் பதியுங்கள்.

நல்ல எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை கொண்டு தாழ்வு மனப்பான்மையை உங்களுள் நுழைய விடாமல் செய்யுங்கள்.

 

மக்கு கிடைத்திருக்கும் ஒரே வாழ்வில் நம் திறமைகளை வெளியே கொண்டு வந்து சாதிக்காவிட்டால், வேறு எப்போது சாதிப்பது?

நிமிர்ந்து நில்லுங்கள்! உங்கள் திறமைகளை வெளியே கொண்டு வாருங்கள்.

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.