(Reading time: 2 - 4 minutes)

பண்டிகைகளை அறிவோம் - ஆடி 1 - தேங்காய் சுடுதல் - கீர்த்தனா

Thengaai suduthal

ழிந்து கொண்டிருக்கும் நம் பண்டிகையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவே இந்த பதிவு.

 

ஆடி 1 - தேங்காய் சுடுதல்

சேலம்,நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகை இது. 

 

காரணம்:

1.மரபுவழிக் கதை:

ப்பண்டிகையை கொண்டாடப்படுவதற்கு மகாபாரதப்போர் காரணம் என்று சொல்வர் சிலர்.

அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ‘‘ஆடி-18’’ அன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைசெய்கிறார்கள்.

 

2.மற்றொரு காரணம்:

ஆடி மாத சீதோஷ்ண நிலை மாறும்போது நமக்கு எதிர்ப்பு சக்தி தேவை மேலும்,கண் நோய் (Madras eye) வரமால் இருக்க அலிஞ்சி குச்சியால் சுடும் போது அதிலிருக்கும் விஷம் குறைந்த வீரியத்தில் கலந்து சாப்பிடுவதால் அது நமக்கு கிடைக்கும் என்று கூறுபவர் சிலர்.

ன்ன காரணமா இருந்தா நமக்கென்ன நமக்குத் தேவை பண்டிகையும், சாப்பிடுவதற்கு உணவும் தானே smile

 

செய்முறை:

1.தேங்காயிலிருக்கும் மூன்று கண்ணில் ஏதாவது ஒரு கண்ணில் ஓட்டை போட்டு உள்ளிருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும்.

2. அவல்/அரிசி-ஊறவைத்தது, வெல்லம், பொட்டுக்கடலை, எள் அனைத்தையும் பூரணமாக உருட்டி தேங்காயினுள் வைக்க வேண்டும். பிடிக்குமென்றால் துருவிய தேங்காயை கூட அதனுடன் சேர்க்கலாம்.

3.ஓட்டையிருக்கும் கண்ணை ஒரு நீளமான குச்சியை வைத்து அடைக்க வேண்டும்.

4. கல் வைத்து அடுப்பு வைத்து தீ மூட்டி அந்த தேங்காயை சுட வேண்டும்.

5.பிறகு சுட்ட தேங்காயை கோவிலுக்கு எடுத்து சென்று படைத்து உண்போம்.

02. பண்டிகைகளை அறிவோம் - கொல்லங்கோடு தூக்கம் திருவிழா

ங்களுக்கு தெரிந்த இது போன்ற பண்டிகை / விழாக்களையும் கூட பகிரலாம் பிரென்ட்ஸ்.

நீங்கள் சொல்ல விரும்பும் விழாவை பற்றி எழுதி எங்களுக்கு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.