(Reading time: 2 - 4 minutes)

கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக வாழ உதவும் நான்கு தத்துவங்கள்!

4 principles

முதல் தத்துவம்:

“யாரை நீங்கள் சந்திக்கிறீர்களோ, அவர் தான் சரியானவர்!”

 

ம் வாழ்வில் ஒருவரும் தற்செயலாக வருவதில்லை!

நம்மை சுற்றி இருப்பவர்கள், நாம் பேசும் நபர்கள், அனைவருமே நம் வாழ்வில் எதையோ பிரதிபலிப்பவர்கள்...

நமக்கு புதிதாக கற்பிக்கவோ, அல்லது தற்போதைய நிலைமையை மேம்படுத்தவோ, ஏதோ விதத்தில் உதவுக்கூடியவர்கள்.

 

இரண்டாவது தத்துவம்

“என்ன நடந்ததோ அது மட்டுமே நடந்திருக்க கூடியது!”

 

வாழ்வில் நாம் அனுபவித்த எதுவுமே வேறு விதமாக நடந்திருக்க வாய்ப்பில்லை!

“அதை மட்டும் நான் வேறுவிதமாக செய்திருந்தால், இது எல்லாம் வேறு விதமாக இருந்திருக்கும்” என்றெல்லாம் சொல்வதில் அர்த்தமே இல்லை!

என்ன நடந்ததோ அது மட்டுமே நடந்திருக்க கூடிய விஷயம்... நாம் வாழ்வில் பாடங்கள் கற்றுக் கொள்ளவும், முன்னோக்கி செல்லவும் நமக்காகவே நடந்த விஷயங்கள்...!

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையும் சரியானது தான்... ஏன், என்ன, எதற்கு என்று நமக்கு புரியாத விதத்தில் இருந்தாலும் கூட, சரியானது தான்!!

 

மூன்றாவது தத்துவம்:

புதிதாக எதையும் துவங்கும் எந்த ஒரு தருணமும், சரியான தருணம் தான்!

 

ம் வாழ்வில் அனைத்துமே சரியான நேரத்தில் தான் தொடங்குகின்றது!

சீக்கிரம் நடந்து விட்டது, தாமதமாகி விட்டது என்றெல்லாம் எதுவும் இல்லை!

நாம் வாழ்வில் அந்த புதிய விஷயத்திற்கு தயாராகி இருந்தால், அது தானாகவே நடக்க தாயாராகி விடும்!

 

நான்காவது தத்துவம்:

என்ன முடிந்ததோ, அது முடிந்து விட்டது!

 

ஆம், இது இவ்வளவு எளிதானது தான்!

நம் வாழ்க்கையில் ஏதோ ஒன்று முடிவடைந்தால், அது நம் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகிறது!

அதனால்தான், அந்த அனுபவத்தை பாடமாக கொண்டு, நடந்ததை மறந்து, வாழ்க்கையில் முன்னோக்கி செல்வதே சிறந்தது.

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.