(Reading time: 3 - 5 minutes)

என் மனதின் ஆதங்கம் - தீபாஸ்

Anitha

ழ்மையில் பிறந்து வளரும் மாணவர்களுக்கு கல்வி ஒன்று மட்டுமே முன்னேற உதவும் படிக்கட்டு என்ற தத்துவத்தை கொண்டவர்கள் நாம் .

ஓர் இனம் முன்னேற வேண்டுமானால் கல்வி என்பது அவர்கள்  எல்லோருக்கும் தடையில்லாமல் குறிப்பாக காசுக்கு வாங்கும் நிலையில் கல்வி இல்லாமல் இருந்தால் மட்டும் தான் குடிசை கோபுரமாக சாத்தியம்  உண்டு .

இந்நிலையில் காசுக்கு கிடைக்கும் மத்திய அரசு பாடத்திட்டத்தை படித்தவர்கள் மட்டும் எழுதி தேர்சசி பெரும் வகையில் உள்ள நீட் தேர்வை நம் மாணவர்களிடம் திணித்துள்ளனர்

தமிழ் நாட்டில் மாநில பாடத்திட்டத்தில்  12ம் வகுப்பில் 2016 மார்ச்சில் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 8 33 682. ஆனால்   மத்திய அரசின்  பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களின்  எண்ணிக்கை வெறும்  13,625 மட்டுமே .2% குறைவான மாணவர்கள் மட்டுமே மத்திய  அரசின் பாடத்திட்டத்தில் கற்றுத் தேர்ந்தவர்கள் .மீதமுள்ள 98% மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டத்தின் படி படித்து தேர்ந்தவர்கள் .

நன் மாநில அரசு மாணவர்களை நீட் தேர்வுக்கு தகுதியானவர்கலாக ஆக்குவதற்குண்டான பாடத்திட்டத்தை அறிமுகபடுத்தவில்லை இந்நிலையில் நீட் தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு

மாநில அரசு தனது கல்விதிட்டத்தின் நிலைபாட்டை மத்திய அரசுக்கும் நீதி மன்றத்திற்கும் புத்தியில் ஏறுமாறு எடுத்துக்கூறம் கடமையில் இருந்து தவறியது இதனால் மருத்துவராகும் கனவு பொய்த்துப்போனது பெரும்பான்மை மாநில அரசு பாடத்திட்டத்தில்  பயிலும் மாணவர்களுக்கு.

அதன் விளைவு இன்று அனிதா என்ற மாணவியின் தற்கொலை. ,தற்கொலை என்பது கோழைத்தனம்  என்று தான் பொதுவாக நாம் கூறுவோம் ஆனால் அனிதாவை என்னால் கோழையாக என்ன முடியவில்லை. ஏனெனில், அவர் போர்குணம் உள்ள பெண்ணாக போராளியாகத்தான் நினைக்க முடிகிறது ஏனெனில் நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய துணிச்சல் உள்ள ஓர் போராளியாகத்தான் என்னால் நினைக்க முடிகிறது.

நீட் தேவையில்லை என்ற கருத்தை அங்கொன்றும் இங்கொன்றும் உரைத்துக்கொண்டு இருக்கும் பொழுது நாமும் ஆம் தேவையில்லை என்று கூட்டத்தோடு கோவிந்தா போட்டுவிட்டு பின் நம்மால் என்ன செய்யமுடியும் என்று ஒதுங்கி போய்விட்டதின் விளைவு தான் அனிதாவின் இழப்பு. இது தொடர்கதை ஆகிவிடுமோ என்ற அச்சமும் இனி படிப்பென்பதும் ஏழைகளின் கனவாக மாறிவிடுமோ என்ற பயமும் எனக்குள் உண்டாகின்றது

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கடந்த எட்டு ஆண்டுகளில் 29225  இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் இதில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 213 பேரும் தனியார் மருத்துவகல்லூரிகளின் 65 பேர் இது ௦0.95% மட்டுமே .இந்த நிலையில் நீட் எழுதச் சொன்னாள்?

  களையும் கனவுகள்

  கண்ணீர் சுவடுகள்

  இதுதானோ என்குடி

  இன்னல்கள் தீராதோ?

  எதிர்நீச்சல் போடவும்

  எனக்கருகதை இல்லையோ!

  விவசாயியும் சாகிறான்

  விழைந்த மாணவியும்  சாகிறாள்

  உலகை ஆண்ட இனம்

  உருக்குலைந்து போகிறதே...

  நீர்மேலாண்மையும் மறந்தோம்

  நீட் அரக்கனையும் விரட்டோம்

  எதிர்கால சந்ததிக்கு

  என்னகொடுக்கப் போகிறோம்?

  இனிமேலும் தூங்கினால்

  இல்லாமல் போய்விடுவோம். 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.