நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால்,
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.
நாம் படித்தவை - 05 - நான் நானாக – சிவசங்கரி

நாற்பதுகளில் இருக்கும் பாரதிக்கு அன்பான கணவனும், கல்லூரிக்கு செல்லும் பாசமான இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
பாரதி தன்னுடைய இளவயதில் பரத நாட்டியத்தின் மீது பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தாள்.
ஆனால், திருமணத்திற்கு பின் குடும்ப வேலைகள் மற்றும் பொறுப்புகளினால் அவளின் இளம் வயது கனவு அவளின் மனதினுள்ளேயே கரைந்து போய் விட்டிருந்தது.
இப்போது மகன்களும் வளர்ந்து வேறு ஊர்களில் படிக்க போய் விட, கணவனும் தன் வேலையில் செட்டிலாகி இருக்க, மீண்டும் தன் இள வயது கனவான பரதநாட்டியத்தை கற்றுக் கொள்ள விரும்புகிறாள்.
இது அவளின் கணவனிற்கு மட்டுமல்லாமல், மகன்களுக்கும் பிடிக்காமல் போகிறது.
மூவரும் பாரதியிடம் இந்த வயதில் ஏன் இந்த் அசை என நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசி அவளை தடுக்க பார்க்கிறார்கள்.
*************************** Spoiler ahead ***********************************
கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்
பாரதி பிடிவாதத்துடன் தன் முடிவில் நிலையாக நிற்க, அவளின் கணவன் கோபம் கொள்கிறான். கோபத்துடன் ஊருக்கு செல்பவனுக்கு, அவனின் தாயின் பேச்சு கண்களை திறக்கிறது. பெண் என்பவளுக்கும் ஆசை, கனவு என்று இருக்கலாம் என்பதை புரிந்துக் கொள்கிறான். மாறிவிட்ட தெளிவான மனதுடன் வீடு திரும்புகிறான்.*************************** End of Spoiler ***********************************
சிவசங்கரி 1990ல் எழுதிய கதை இன்றைய நடுத்தர வயது பெண்களுக்கும் கட்டாயம் பொறுந்தும்.
நடுத்தர வயது பெண்கள் என்றில்லாமல் சாதரணமாகவே திருமணத்திற்கு பின் எத்தனை பெண்களால் எளிதாக தங்களின் கனவுகளை தொடர முடிகிறது என்பது இன்றும் கேள்விகுறி தான்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள், பெரிய பெரிய கார்போரேட்களில் இளநிலை பணியாளர்கள் என அனைத்திலும் ஆண்களை விட முன்னிலை வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை, அதன் பின் மெல்ல, மெல்ல குறைந்து காணாமல் போய் விடுவதே இன்றும் இந்த நிலை நீடிக்கிறது என்பதை தானே சொல்கிறது.
“நான் நானாக” பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் படிக்க வேண்டிய நல்ல ஒரு குடும்ப கதை.
நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால்,
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
{kunena_discuss:703}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.