(Reading time: 4 - 7 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 23 - ராதா மாதவம் – வித்யா சுப்ரமணியம் [சுமதி கு]

radhaMathavam

நான் இங்கு சொல்லப்போகும் புதினம் - வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய ‘ராதா மாதவம் ‘

ன்னிரண்டாம் வகுப்பிற்குப் பின் மாதவனின் அப்பாவுக்கு வரும் பணிமாற்றத்தால் ஹைதராபாத்திற்கு குடும்பத்துடன் செல்கிறார்கள். படித்து முடித்தபின் சென்னையில்வேலை வாங்கிக்கொண்டு சொந்த வீட்டிற்கே திரும்பி வருகிறான் மாதவன். மாதவனின் வீட்டில் குடியிருக்கும் குடும்பம் ஆதரவு தருகிறது .

ஜாதகம் மற்றும் ஜோசியத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்து அதை படித்து தன் மகன் (அம்பி ) மற்றும் மகளின் (ராதா) எதிர்காலத்தை கணிக்கிறார் கணபதி ஐயர். கணிப்பின்முடிவில் இரண்டு பெரிய அதிர்ச்சிகளை சந்திக்கிறார். அவரின் மகன் மற்றும் அவரின் மகளை மணக்கும் மணாளன் இருவருக்கும் சிறுவயதிலேயே மரணம் என்பதுதான் அந்தஅதிர்ச்சிகள். இதனால் இருவருக்கும் மணமுடிக்க மறுத்து ஏதேனும் காரணம் கூறித்தட்டிக்கழிக்கிறார். அவர் மகனின் பால்ய சிநேகிதன் மாதவனுக்கு இதில் நம்பிக்கையில்லை. அதோடு ராதாவை திருமணம் செய்ய விரும்புகிறான் .

அந்த குடும்பத்தில் ஜாதகப்பொருத்தம் பார்த்து நடந்த திருமணம் தோல்வியடைகிறது. இருந்தும் அவர்கள் தன் மகனின் தவறை உணர்ந்து அவனை விலக்கிவிட்டு மருமகள்(சாரு) மற்றும் பேரனுடன் வசிக்கிறார்கள். சாருவிற்கும் மாதவனுக்கும் இடையில் நட்பு மலர்கிறது.

அவளுடைய ஜாதகத்தை கணபதி ஐயரிடம் கொடுத்துக் கணிக்கச்சொல்கிறாள். அதன் கணிப்பும் நிஜத்தில் நடந்ததையும் சொல்லி கணபதி ஐயரிடம் ராதா-மாதவன்திருமணத்திற்காக பேசுகிறாள் சாரு. அம்பியின் ஜாதகத்தில் பெயரை மாற்றி சாருவின் ஜாதகத்தோடு பொருத்தம் பார்க்க சொல்கிறாள் . கணபதி ஐயரும் அம்பியென்றுதெரியாமல் நன்றாக பொருந்துவதாக சொல்லிவிட, சாரு அவரிடம் உண்மையைக் கூறுகிறாள்.

ஆனாலும் கணபதி ஐயர் பிடிவாதமாக அம்பி மற்றும் ராதா திருமணங்களுக்கு எதிர்க்கிறார். இதையெல்லாம் கேள்விப்படும் மாதவன் , அவருக்கு பத்து நாட்கள் கெடுவைக்கிறான். அதன்பின்னும் அவர் இறங்கி வரவில்லையென்றால் அவரை எதிர்த்து திருமணம் செய்யப்போவதாக மாதவன் அறிவிக்கிறான். அம்பியிடமும் சாருவிடமும்அவர்களின் திருமணத்திற்கு சம்மதத்தைப் பெறுகிறான்.

ஆனால் அதற்குள் மாதவனுக்கு நடக்கும் விபத்து எல்லோரையும் புரட்டிப்போடுகிறது. அதன்பின் அவர்கள் திருமணங்கள் நடைபெற்றதா? கணபதி ஐயர் என்ன செய்தார் ?

எதிர்பாராத ஆனாலும் கதாபாத்திரங்களின் பிடிவாதம் மற்றும் ஆழ்ந்த நம்பிக்கைக்கேற்ற முடிவு.

முடிவு:

கணபதி ஐயரின் ஒரு நம்பிக்கையான ‘அம்பி மற்றும் ராதா திருமணங்களின் தோல்வி’ ஐ தோற்கடிக்க , அவரது தீர்க்க ஆயுள் நம்பிக்கையைத் தகர்த்தெறிகிறார்.

சிறப்பம்சங்கள் :

நான்கு வேதங்களைப் பற்றிய விளக்கம் மிக அருமை.

கதாபாத்திரங்களின் படைப்பு மற்றும் பாசப்பிணைப்பு.

மாதவனின் முற்போக்கு சிந்தனை.

இயல்பான நடையில் அருமையான கதை.

கதைக்கேற்ற தீர்க்கமான முடிவு .

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.