(Reading time: 5 - 9 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 22 - அமிழ்தினும் இனியவள் அவள் – ஜான்சி [ பிந்து வி]

பகிர்ந்தவர் - பிந்து வினோத்

Amizhthinum iniyaval aval

கதை சுருக்கம்: 

தாநாயகன் ரூபனுக்கு சிறு வயது முதலே தன் அத்தை மகளான அனிக்கா மீது தனி அன்பு, அக்கறை, பாசம் அனைத்தும் இருக்கிறது. அதுவே நாட்கள் செல்ல செல்ல, மெல்ல காதலாக மாறுகிறது.

அனிக்காவும், அவளின் சம வயதில் இருக்கும் ரூபனின் தம்பி ஜீவனும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், அண்ணனுக்கு தன் தோழி மீது இருக்கும் காதலை தெரிந்துக் கொள்கிறான் ஜீவன். தோழிக்காக அண்ணனை கடிந்தும் கொள்கிறான்.

அண்ணன் தம்பி இடையே நடக்கும் உரையாடலை எதிர்பாராமல் கேட்க நேரும் அனிக்கா, ரூபனுக்கு தன் மீது காதல் இருப்பதை புரிந்து குழம்பி போகிறாள்.

வருடங்கள் செல்ல ரூபன் படிப்பை முடித்து சொந்த நிறுவனம் ஒன்றை நிறுவுகிறான்.

அவனின் மனதில் அனிக்காவின் மீதான காதல் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.

அந்த காதலுக்கு குறுக்கே வந்து நிற்கிறான் விக்ரம் எனும் விக்ரமாதித்யன்.

சிறிய வயதில் நடந்த சண்டையை மனதில் வைத்து, ரூபனை பழி வாங்க அனிக்காவை திருமணம் செய்துக் கொள்ள முயற்சி செய்கிறான்.

அவனின் முயற்சியை ரூபன் முறியடித்தானா?

அனிக்கா ரூபனின் காதலை ஏற்றுக் கொள்வாளா?

ரூபனின் ஆசைக்கு பெரியவர்கள் சம்மதம் சொல்வார்களா?

என்ற கேள்விகளுக்கு கதையின் வழி பதில் சொல்கிறார் ஜான்சி.

 

பொதுவாக கதையை படிக்கும் போது முடிவை படித்து விட்டு படிக்கும் குட் கேர்ள் நான் :-) நான் ஒன்றை எதிர்பார்க்க கதை வேறு ஒரு பக்கம் சென்று விடக் கூடாதே, அதனால் என்னுடைய expectationசை சரியாக வைக்க நான் சிறு வயது முதலே பயன்படுத்தும் cheat sheet முறை இது.

ஜான்சியின் கதையை படிக்கத் தொடங்கிய போது எதிர்பார்ப்பு என்று மனதில் இருந்தது கதையில் ரொமான்ஸ் எப்படி வைக்க போகிறார்கள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் தான்.

நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்கும் கேட்கிறது, வெயிட் வெயிட் :-)

எனக்கு பொதுவாகவே gentle romance genre ரொம்பவும் பிடிக்கும். அதனால் தான் ரமணிச்சந்திரன் கதைகளின் தீவிர ரசிகை நான் :-)

செல்ப் டப்பா என்று நினைக்காதீர்கள், என்னுடைய romance genre கதைகளில் வரும் ரொமான்ஸ் செட்டிங் மற்றும் காட்சிகளுக்கு பெரும்பாலும் ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பேன் நான். (கதை பற்றியும் அப்பப்போ யோசிப்பேன் ;-) ) – modesty, humbleness எல்லாவற்றையும் மனதில் கொண்டு இந்த propogandaவை இங்கே நிறுத்தி விடுகிறேன் :p

நான் சொல்ல வருவது என்ன என்றால், எனக்கு நிறைய கதைகளில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் ஒன்று overdo ஆகி இருப்பதாக தோன்றும், இல்லை ரொம்பவும் underdone ஆக தோன்றும்.

இந்த கதையை ஜான்சி எழுதும் முன் அவர்கள் எழுதிய சிறுகதை ஒன்று என்னுடைய frequencyக்கு சரியாக மேட்ச் ஆகி இருந்தது! அதனால் வந்த எதிர்பார்ப்பு தான் இது.

இப்போது மைன்ட் வாய்ஸ் எல்லாம் க்ளியர் ஆகி இருக்கும் என்று நம்புகிறேன்!

வாங்க நாம் மீண்டும் கதையை பற்றி பேசுவோம்.

 

தையின் ஆரம்பம் கொஞ்சம் ஸ்லோ என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அந்த காட்சிகள் ரூபன் பற்றியும் அவனின் மனநிலை பற்றியும் தெரிந்துக் கொள்ள உதவுகின்றன. ரூபனுக்கு அனிக்கா மீது அன்பு மலர்ந்து, வளரும் காட்சிகள் வந்த பிறகு கதை வேகம் எடுக்கிறது.

 

கதையின் மிக பெரிய பலம் ஜான்சியின் situation காதல் கவிதைகள்!

கதை நடுவே situation பாடல் வரிகள் சேர்ப்பது என்பது பாப்புலர் ட்ரென்ட். இதை நான் உட்பட பலரும் இதை செய்தோம், செய்கிறோம், இனிமேலும் செய்வோம் ;-)

ஆனால் ஜான்சி தன் சொந்த திறைமையை வைத்தே தீட்டி இருக்கும் அந்த அழகு கவிதைகள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன.

நான் பெரிய அளவில் கவிதைகள் விரும்பி படிப்பவள் இல்லை ஆனாலும் எனக்கும் கூட அவர்களின் அந்த கவிதைகள் பிடித்திருந்தது.

 

கதையில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம் straight forwardness.

அண்ணன் தோழியை விரும்புவது தெரிந்த உடன் தன் நட்புக்காக பேசும் ஜீவனை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.

 

அப்புறம் கதையில் வரும் கதாபாத்திரங்கள் ரொம்பவும் natural ஆக இருப்பது கதையின் பெரிய ப்ளஸ்.

 

மைனஸ் என்று பெரிதாக இல்லை. இரண்டு சின்ன விஷயங்கள் மனதில் பட்டது.

இந்த முதல் விஷயம் என்னுடைய தனிப்பட்ட கருத்து. சொந்தத்தில் திருமணம் என்பது எனக்கு personally சிறு வயது முதலே greek / latin / alien language போல! கதையில் அனிக்கா யார் என்று தெரிந்தது முதலே இந்த ஒரு எண்ணம் என் mindல் இருந்தது. ஆனாலும் fiction என்று சொல்லி அதை ignore செய்து வைத்தேன்.

இன்னொன்று ஒரு சில இடங்களில் ரொம்ப அதிகமான டீடெயில்ஸ் தருகிறார்களோ என்ற ஒரு எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.

 

க மொத்தத்தில் படிக்க மிகவும் இனிமையான, சூப்பரான காதல் கதை. 

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.