(Reading time: 3 - 6 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 21 - உன் நேசமதே என் சுவாசமாய் – சித்ரா வெ [ பிந்து வி]

பகிர்ந்தவர் - பிந்து வினோத்

Un nesamathe en suvasamaai

ரு காலத்தில் பல பல விதமான கதைகளை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு கடந்த சில வருடங்களாக வாசிக்கும் பழக்கம் குறைந்து போயிருந்தது. இதை பற்றி என் பிரெண்ட் தேன்மொழியிடம் சொல்லி, இன்ட்ரஸ்டிங் ஆன கதை ஒன்றை சஜஸ்ட் செய்ய சொன்னேன். அவங்க ரெகமன்ட் செய்த கதை இந்த கதை. அப்போது தொடர்கதையாக சென்று கொண்டிருந்தது :-)

 

கதை சுருக்கம்: 

துஷ்யந்த் & செல்வா அண்ணன் – தம்பி.

துஷ்யந்தின் மனதில் அழுத்தமாக இடம் பிடித்திருக்கிறாள் கங்கா.

கழுத்தில் தாலியுடன் ஆனால் கணவன் அருகில் இல்லாமல் வாழும் கங்காவை பற்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள்.

கங்காவின் கடந்த காலத்தை பற்றி எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் அவள் நல்லவள் என்று மனதார நம்புகிறான் துஷ்யந்த். அவளையே திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள் கங்கா!

துஷ்யந்திற்காக அவனின் முழு விருப்பமில்லாமல் நிச்சயிக்கப் பட்டிருந்த மணப்பெண் நர்மதாவை சந்தர்ப்ப சூழ்நிலையால் மணமுடிக்கிறான் துஷ்யந்தின் தம்பி செல்வா.

செல்வாவும் நர்மதாவும் ஏற்கனவே பரிச்சயமானவர்கள். கல்லூரியில் படிக்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி இருக்கிறார்கள். ஆனால் தவறான புரிதலால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

இப்போதும் நர்மதா மீது கோபம் இருந்தாலும் அவளை மனைவியாக அடைந்ததில் சந்தோஷம் கொள்கிறான் செல்வா.

நர்மதாவும் செல்வா மீது கோபத்துடனே இருக்கிறாள்.

ங்காவிற்கு நல்ல தோழனாக இருக்கும் இளங்கோ, நர்மதாவின் தோழி யமுனாவை விரும்புகிறான்.

கங்காவும் யமுனாவும் அக்கா – தங்கை. ஆனால் இருவரும் பேசிக் கொள்ளாமல், பிரிந்தே வாழ்கிறார்கள்.

 

ங்கா யமுனா பிரிந்ததன் பின் இருக்கும் காரணம் என்ன?

நர்மதா – செல்வா தங்களின் வேறுபாடுகளை மறந்து ஒன்றாவார்களா?

கங்காவின் கடந்த காலத்தில் இருக்கும் மர்மம் என்ன?

அவளின் கணவன் யார்?

துஷ்யந்தின் காதல் நிறைவேறியதா?

என பல்வேறு முடிச்சுகளை கதை போக்கில், மெல்ல மெல்ல அவிழ்க்கிறார் சித்ரா.

 

தையில் வரும் கதாபாத்திரங்களை அழகாக வார்த்து எடுத்திருக்கிறார் சித்ரா.

கதையை படித்து முடிக்கும் போது கங்காவின் குடும்பத்தினர் மற்றும் துஷ்யந்தின் குடும்பத்தினர் என அனைவரும் நமக்கு மிகவும் பரிச்சயமானவர்களாக மாறி போய்விடுகிறார்கள்.

கதையின் நிகழ்வுகள் & காட்சிகள் வெகு இயல்பாக இருக்கின்றன!

இது தான் கதை, இப்படி தான் நடக்க போகிறது என்று நம்மை கெஸ் செய்ய விடாது, ஆங்காங்கே ட்விஸ்ட் , டர்ன் என கொடுத்து, சஸ்பென்ஸோடு கதையை கொண்டு சென்று இருப்பது கதையின் பெரிய பலம்.

 

தையின் மைனஸ் என்றால் கதை நீளத்தை மட்டும் தான் சொல்ல முடியும் என நினைக்கிறேன்.

 

மொத்தத்தில், வழக்கமாக நாம் வாசிக்கும் கதைகளில் இருந்து மாறுப்பட்ட, அழகான, சுவாரசியமான, ஜனரஞ்சகமான கதை :-)

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.