Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h5><b>All Short Stories are categorized for your ease of use!</b></h5>
All Short Stories are categorized for your ease of use!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 2 - 3 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
01. நிஜ வாழ்க்கை காதல் கதைகள் – அஜித் – ஷாலினி - 5.0 out of 5 based on 3 votes
Change font size:

நிஜ வாழ்க்கை காதல் கதைகள் – அஜித் – ஷாலினி

Ajith Shalini

ன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்று டூயட் பாடிய அஜித் – ஷாலினி ஜோடியை எல்லோருக்கும் நினைவு இருக்கும். நிழல் உலகில் மட்டுமல்லாமல் நிஜ உலகிலும் ஜோடியான இந்த நட்சத்திர தம்பதியினரின் காதல் கதை மிகவும் சுவாரசியமானது.

இவர்களின் கதை நாம் கதைகளில் படிப்பதை விட ரொமான்டிக் ஆனது என்றால் மிகையில்லை.

அஜித் – ஷாலினி:

ன்றைய தமிழ் திரையுலகில் ‘தல’ அஜித்திற்கு என்று தனி இடம் உண்டு. வாரிசுகள் நிறைந்திருக்கும் துறையில் திரைப்பட பின்ணனியே இல்லாமல் வந்து முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு சிலரில் அஜித்தும் ஒருவர்.

அஜித்தின் வெற்றிக்கு உருத்துணையாக இருப்பவர் அவரின் மனைவி ஷாலினி என்பதில் சந்தேகமில்லை.

அஜித் – விடாமுயற்சியால் வெற்றி

Ajith Shalini

ஜித்தின் திரைப்பட ஸ்டார் அந்தஸ்து அத்தனை எளிதாக வந்துவிடவில்லை. அவர் முதலில் நடித்த அமராவதி திரைப்படம் சுமாரான வெற்றியை தான் பெற்றது. ஆனாலும் அஜித் பிரபலமானார்.

புது வாய்புகள் தேடி வரும் நேரத்தில் அஜித்தின் பல நாள் கனவான பைக் ரேஸ் அவருக்கு வில்லனாக வந்து சேர்ந்தது. சென்னை சோழவரத்தில் இருக்கும் ரேஸ்ட்ராக்கில் பைக் ரேஸ் பயிற்சியில் ஈடுப்பட்ட போது ஏற்பட்ட விபத்து அவரை கிட்டத்தட்ட படுக்கையில் தள்ளியது.

அதன் பின் பல பல அறுவை சிகிச்சைகள் என அவர் குணமாக நாட்கள் ஆனது.

அந்த நேரத்தில் அவர் நடித்த பவித்ராவும் சுமாரான வெற்றி படமாகவே அமைந்தது.

ஆனால் அதன் பின் வந்த ஆசை மற்றும் காதல் கோட்டை அவரை வெற்றி பாதையில் அழைத்து சென்றன.

வெற்றி கதாநாயகனாக வலம் வர போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், அஜித் நடித்த கல்லூரி வாசல், காதல் மன்னன், உல்லாசம், தோரணம் என படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன.

கூடவே நடிகை ஹீராவுடன் காதல் என்ற பரபரப்பான கிசு கிசு வேறு....!

அனைத்தையும் எதிர் கொண்ட அஜித், மனம் தளராமல் தொடர்ந்து நடித்தார். அவரின் முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது.

உன்னை தேடி எனும் திரைப்படம் வெற்றி பெற, வாலி திரைப்படம் மெகா ஹிட் ஆனது.

இந்த நேரத்தில் தான் அஜித்தின் நண்பரும் இயக்குனருமான சரண் அஜித்தின் 25ம் படமாக அமர்க்களம் படத்தை இயக்க விரும்பினார்.

ஷாலினி - அதிர்ஷ்ட தேவதை:

Ajith Shalini

ஜித்தை போல அல்லாமல் ஷாலினி குழந்தை நட்சத்திரமாகவே மிகவும் பிரபலமானவர்.

பலநூறு போட்டோக்களின் நடுவே ஷாலினியை தேர்வு செய்து தன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார் இயக்குனர் ஃபாசில்.

குமாரியான பிறகு மிஸ் மெட்ராஸ் போட்டியில் கலந்துக் கொண்ட ஷாலினி மீண்டும் டைரக்டர் ஃபாசில் கண்களில் பட அவரை தன்னுடைய மலையாள படத்திற்கு கதாநாயாகி ஆக்கினார் ஃபாசில்.

அதே படம் தமிழில் விஜய், ஷாலினி நடிப்பில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்ய பட்டு மிக பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின் மலையாளத்தில் மட்டும் அல்லாமல் தமிழிலும் மிக பிஸியான ஹீரோயினாக மாறி போனார் ஷாலினி.

அஜித்தின் இருபத்தி ஐந்தாம் படத்தில் ஒரு பிரபல கதாநாயகி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் அந்த படத்தில் நடிக்க ஷாலினியை தேர்வு செய்தார் டைரக்டர் சரண்.

முதல் சந்திப்பு:

Ajith Shalini

னவரி 1999

அஜித் – ஷாலினி இடையேயான முதல் சந்திப்பு கதைகளில் வருவது போல ரொமான்டிக்கான ரோஜாக்கள் நிறைந்த தோட்டத்தில் நடக்கவில்லை, அமர்க்களம் திரைப்பட முதல் நாள் படப்பிடிப்பில் நடந்தது.

அந்த முதல் காட்சியில் அஜித் ஷாலினியை கத்தியை காட்டி மிரட்ட வேண்டி இருந்தது. எதிர்பாராத விதமாக அஜித் கையில் இருந்த கத்தி ஷாலினியின் கையில் பட்டு ரத்தம் கசிந்தது.

அஜித் கொஞ்சம் திடுக்கிட்டு தான் போனார் ஆனால் ஷாலினி அமைதியாக அந்த நிலைமையை கையாண்டார்.

ஷாலினியின் இந்த அமைதி + நிதானமான குணம் தான் அஜித்தை முதல் முதல் அவர் பக்கம் பார்க்க வைத்தது.

திரைப்படங்களில் ஏற்பட்டிருந்த ஏற்ற இரக்கங்கள்... ஹீராவுடனான கசப்பான உறவு.... உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் என அமைதியில்லாமல் இருந்த அஜித்திற்கு ஷாலினியின் அறிமுகம் வரவேற்க்கத்தக்க  மாற்றமாக இருந்தது... 

காதலை முதலில் சொன்னது யார்?

Ajith Shalini

ஜூன் 1999

ஷாலினி மீது தனக்கு இருக்கும் காதலை உணர்ந்துக் கொண்ட அஜித் நேரடியாக ஷாலினியிடமே தன் காதலை தெரிவித்தார்.

ஷாலினி அதிர்ச்சி அடைய எல்லாம் இல்லை!

அமர்க்களம் படப்பிடிப்பு நடந்த அந்த ஆறு மாதங்களில் அவரும் அஜித்தை பற்றி புரிந்துக் கொள்ள தொடங்கி இருந்தார்.

எனவே நல்ல பெண்ணாக தன் அப்பாவிடம் பேசுமாறு அஜித்திடம் சொன்னார்.

தயக்கம் இருந்த போதும், சரியென ஏற்றுக் கொண்டார் அஜித்.

இன்ப அதிர்ச்சி

Ajith Shalini

ஷாலினியின் பெற்றோரை சந்தித்து பேச சென்ற அஜித்திற்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ஷாலினியின் பெற்றோருக்கு அவர் வரும் முன்பே ஷாலினியின் வழியாக அவரின் காதல் பற்றி தெரிந்து இருந்தது.

இதுவே அஜித்திற்கு ஷாலினியின் மனதை அடி கோடிட்டு காட்டியது.

இரண்டு குடும்பத்தினரும் சம்மதிக்க, 24 ஏப்ரல் 2000 அன்று இருவரின் காதலும் கனிந்து திருமணம் நடந்தது.

திருமண வாழ்க்கை:

Ajith Shalini

திருமணமாகி பதினாறு ஆண்டுகள் சென்ற பின்பும் அஜித் – ஷாலினியின் காதல் அப்படியே இருப்பதாக தான் தோன்றுகிறது.

அஜித் – ஷாலினி போல வாழ வேண்டும் என்று புதிதாக திருமணமானவர்களை வாழ்த்தும் அளவிற்கு அன்னியோன்யமான தம்பதிகளாக இருக்கின்றனர் இருவரும்.

இவர்களுக்கு அனுஷ்கா என்ற எட்டு வயது மகளும், ஆத்விக் என்ற ஒரு வயது மகனும் இருக்கிறார்கள்.

ஜித் ஷாலினி கதையை கேட்டாலே இனிமையாக தான் இருக்கிறது.... இருவரும் இன்று போலவே என்றும் வாழ நாமும் வாழ்த்துவோம்...! 

நிஜ வாழ்க்கை காதல் கதைகள் பட்டியல்

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Vindhya

Add comment

Comments  
# # RE: 01. நிஜ வாழ்க்கை காதல் கதைகள் – அஜீத் - ஷாலினிMeera S 2016-07-04 11:36
Padikumpothe enna oru azhagana feel... :)
Lovely pair.. (y)
Reply | Reply with quote | Quote
# StoryNabi 2016-07-03 19:24
Cute lovely
Reply | Reply with quote | Quote
# RE: 01. நிஜ வாழ்க்கை காதல் கதைகள் – அஜித் – ஷாலினிDevi 2016-06-29 16:54
Nalla irukku.. (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: 01. நிஜ வாழ்க்கை காதல் கதைகள் – அஜித் – ஷாலினிAnusha Chillzee 2016-06-29 16:34
Good to read your writing Vindhya (kannula thanni varathathu than kurai)

Cheers

Ajith Shalini story is cute. Next pair yaaru?
Reply | Reply with quote | Quote
# lovelyKiruthika 2016-06-29 11:05
Nice pair and nice narration
Reply | Reply with quote | Quote
# RE: 01. நிஜ வாழ்க்கை காதல் கதைகள் – அஜித் – ஷாலினிChithra V 2016-06-29 10:01
(y) (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: 01. நிஜ வாழ்க்கை காதல் கதைகள் – அஜித் – ஷாலினிChillzee Team 2016-06-29 08:57
அஜீத்- ஷாலினியின் காதல் பயணம் தொடர வாழ்த்துக்கள் :GL:
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
11
MKK

SIP
-

NTES
12
NS

OTEN
IPN

PEPPV
13
SaSi

NAU
PM

YMVI
14
MNP

VKV
-

-
15
-

AEOM
-

MvM
16


TPEP




Mor

AN


Eve
18
MKK

TIUU
-

NTES
19
UNES

MOVPIP
IPN

PEPPV
20
SPK

MMU
PM

YMVI
21
SV

VKV
-

IEIK
22
KMO

Ame
-

MvM
23


TPEP



* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top