(Reading time: 2 - 3 minutes)

படித்ததில் பிடித்தது - யோசிக்க வேண்டிய விஷயம் தானே! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி

Curious Dog

திருடன் ஒருவன் ஒரு வீட்டுக்கு திருடச் சென்றான். அங்கு காவலுக்கு ஒரு நாய் இருந்தது.

அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்தது... .

திருடனுக்கு, திருடச் செல்லலாமா... வேண்டாமா? உள்ளே போனவுடன் நாய் குரைத்தால் என்ன செய்வது.. இப்போதே குரைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.. .

யோசித்தவன் முடிவாக ஒரு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான். அதை கண்டவுடன் நாய் திருடனை பார்த்து சத்தம்போட்டு குரைத்து, கடிக்க பாய்ந்தது.. .

அப்போது திருடன் நாயிடம், ''ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ, இலவசமாக பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னை கடிக்க வருகிறாய்'' என்று கேட்டான்.. .

அதற்கு அந்த நாய் சொல்லியது, ''நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரிந்தவராக இருக்குமோ என்று நினைத்திருந்தேன்.. . எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை கொடுத்தாயோ, அப்போதே உறுதியாகி விட்டது நீ திருடன் தான் என்று''.. .

யோசிக்க வேண்டிய விஷயம் தானே.

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் ஜான்சி

 

{kunena_discuss:1107}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.