(Reading time: 7 - 13 minutes)

தன் வகைகளைப் பட்டியல் போட்டு அடக்க முடியாது. ஸ்பாஞ்ச், பட்டர், ஸ்ட்ராபெர்ரி, காபி, சாக்லேட், ரெய்ஸின், ப்ளம்... என நீள்கிற கேக்கின் வகைகளுக்கு முடிவே இல்லை. மேலும் மேலும் புதுப்புது வகைகளை ஒவ்வொரு நாளும் இறக்கிக்கொண்டே இருக்கிறார்கள் மேற்கத்திய நாடுகளில். இதன் ரசிகர்கள் அத்தனைக் கோடி பேர்!

சரி... நம்மோடு கலந்துவிட்ட இதைச் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியம்தானா?

இதன் நன்மை, தீமைகள் குறித்து விளக்குகிறார் டயட்டீஷியன் பத்மினி... 

நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி சுவைத்த சில விநாடிகளுக்குப் பரவசத்தைத் தரும் சக்தி கேக்குக்கு உண்டு. இதைச் சாப்பிடுவதால் நன்மைகளும் அவற்றுக்கு இணையான தீமைகளும் உள்ளன. 100 கிராம் ஃப்ரூட் கேக்கில் (ஒரு ஸ்லைஸ்) 324 கலோரிகள் உள்ளன. 13 கிராம் கொழுப்பு, சோடியம் 101 மி.கி., கார்போஹைட்ரேட் 62 கிராம், புரோட்டீன் 2.9 கிராம், கால்சியம் 29 மி.கி., பொட்டாசியம் 153 மி.கி., இவை தவிர சர்க்கரை 27 கிராம், குறைந்த அளவில் 3.7 கிராம் நார்ச்சத்து உள்ளன. 

முறையான ஊட்டச்சத்து நம் எல்லோருக்குமே அவசியம். அந்த ஊட்டச்சத்துதான் நம் உடலைச் சீராகப் பராமரிக்க உதவும். குழந்தைகளின் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சக்தி அளிக்கக்கூடியது.

 ஃப்ரூட் கேக்கில் சேர்க்கப்படும் அன்னாசி, கேரட், ஆப்பிள் ஆகியவற்றில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தைச் சீராக்கும். வாழைப்பழம் சேர்த்த கேக் என்றால், குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்யும். அவை, கெட்ட பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடி, நம் செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்யும்.

இதில் சேர்க்கப்படும் பால், முட்டை இரண்டுமே புரதச்சத்து நிறைந்தவை. இவை, நம் தசை மற்றும் எலும்புகள் பலம் பெற உதவும். அதோடு பாலில் இருக்கும் கால்சியம், பல்லுக்கும் எலும்புக்கும் உறுதி தரும். கேக்கில் சேர்க்கப்படும் பழங்கள், நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

இதில் சாக்லேட் கலந்திருந்தால், நம் உடலில் இருக்கும் எண்டார்பின் மற்றும் செரொட்டோனின் அளவை அது உயர்த்தும். இது நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்; பதற்றத்தைத் தணியச் செய்யும். 

நல்லவை இருந்தாலும், தீமைகளும் உள்ளன. இதில் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் கொழுப்பும் நம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

அதிகமாக அல்லது நீண்டகாலமாக கேக் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்து, சர்க்கரைநோய் வருவதற்குக்கூட காரணமாக அமைந்துவிடும்.

இதில் வெண்ணெய் அல்லது மார்கரின் (Margarine) சேர்க்கப்படுகிறது. இவை, ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் கூட்டுபவை.

கேக்குக்கு வண்ணம் சேர்ப்பதற்காகச் சேர்க்கப்படும் நிறங்கள், செரிமானம் தொடர்பான பிரச்னையை ஏற்படுத்திவிடும். சிலருக்கு அலர்ஜிகூட ஏற்படலாம். சில வகை கேக்குகள், சோர்வையும் உறக்கத்தையும் தரக்கூடியவை

பொதுவாக கேக், நம் பாரம்பர்ய உணவுப் பொருள் அல்ல. அதிக சர்க்கரை, வெண்ணெய், மாவுப் பொருட்கள் இவையெல்லாம் நம் நாட்டுச்சூழலுக்கு ஆரோக்கியமானவை கிடையாது. எப்போதாவது ருசி பார்ப்பதில் தவறில்லை. அதையும் அளவோடு சாப்பிடுவது சிறந்தது. மற்றபடி கேக்கிலிருந்து சற்று தள்ளியே இருப்பதுதான் உடல்நலத்துக்கு நல்லது.

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் வசுமதி

 

{kunena_discuss:1107}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.