Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
படித்ததில் பிடித்தது - இப்போ இல்லேன்னா எப்போ..?! - வசுமதி - 5.0 out of 5 based on 1 vote
Pin It

படித்ததில் பிடித்தது - இப்போ இல்லேன்னா எப்போ..?! - வசுமதி

ங்களுக்கு 25 வயசு ஆயிடுச்சா ? இந்த வயசுல சில விஷயங்களை செய்யாமல் மிஸ் பண்ணிட்டீங்கன்னா  அப்புறம் எதிர்காலத்துல இதை நாம செய்யவே இல்லையேன்னு வருத்தப்படுவீங்க. அதனால இதுதான் சரியான டைம். வாழ்க்கை ரொம்ப சின்னது, அடுத்த நொடி என்ன நடக்கப்போகுதுனு தெரியாம இருக்கறதுதான் சுவராஸ்யமே. அதுல இந்த 10 விஷயங்களை கண்டிப்பா செஞ்சிருக்கீங்களான்னு செக் பண்ணுங்க பார்ப்போம்...

வேலை    

ந்த காலத்துல பெண்களுக்கு வேலை ரொம்ப அவசியம். சில பேருக்கு வேலைக்கு போகணும்னு கட்டாயம் இருக்கும். ஆனா சில பேருக்கு அப்படி இல்ல. பணத்தேவைக்காக மட்டும்தான் வேலைக்கு போகணும்ங்கிற‌ கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடுத்து வேலைக்கு போங்க , சம்பளம் குறைவா இருந்தாலும் பரவாயில்லை. இது ஒரு புது அனுபவமா இருக்கும். உங்க திறமையை காட்ட அங்க இருக்குற வாய்ப்புகளை பயன்படுத்திக்கோங்க.

Ippo

சுதந்திரமாக முடிவு எடுங்கள்

து உங்க வாழ்க்கை. உங்களுக்கு என்ன தேவைனு உங்களவிட யாருக்குத் தெரியும்? படிப்போ வேலையோ, எதுவானாலும் உங்க மனசு என்ன சொல்லுதோ அதை ஃபாலோ பண்ணுங்க கேர்ள்ஸ் . அதேசமயம் சுதந்திரமான முடிவுனு சில முடிவுகள் எடுத்து பிரச்னைகளிலும் மாட்டிக்காதீங்க. முடிவெடுக்கறதுக்கு முன்னாடி இன்னொரு முறை யோசிங்க.

Ippo

நண்பர்கள்

ல்லோரிடமும் சகஜமாக பழகுங்கள். உங்களுக்கு 10 நண்பர்கள் இருக்கணும்னு அவசியம் இல்லை , ஒருத்தர் இருந்தாலும் உங்க சுக துக்கங்களை மனசார பகிர்ந்துகொள்கிற துணையாக இருக்க வேண்டும் . பெண்ணுக்கு, பெண் தோழிதான் இருக்கணும் அவசியம் இல்லை கேர்ள்ஸ். ஆண் நண்பர் கூட இருக்கலாம், கண்டிப்பா எல்லாருக்கும் ஶ்ரீதர் பட சித்தார்த் மாதிரி ஒரு நட்பு தேவை பாஸ். நட்புக்கில்லை எல்லை.

Ippo

பேங்க் அக்கவுன்ட் 

ரு பொண்ணுக்கு எப்பவுமே பக்க பலமா அம்மா அப்பா, சொந்தக்காரங்கனு நிறையப் பேர் இருப்பாங்க. ஆனாலும் உங்களுக்கு ஒரு பேங்க் அக்கவுன்ட் நிச்சயம் தேவை. அப்போதான் ஒரு தன்னம்பிக்கையும், பணத்தை பொறுப்பா செலவழிக்கிற, சேமிக்கிற பொறுப்பும் கிடைக்கும்.

Ippo

பயணம் 

25 வயசுல குறைஞ்சது 20 ஊருக்காவது போயிருக்கணும் பாஸ். கையில ஒரு புத்தகம், கூலர்ஸ் , ட்ராவல் கைடு , கேமிரானு ஒரு பேக்கில் போட்டுக்கிட்டு கிளம்பிடுங்க. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை இருக்கும். அதை தெரிஞ்சுக்கோங்க. அதை எஞ்சாய் பண்ணுங்க. எல்லாமே என்சைக்ளோபீடியாவில் இருக்காது. சில விஷயம் அனுபவத்தால் மட்டுமே கிடைக்கும். கல்யாணம், குழந்தைங்கன்னு ஆயிடுச்சுன்னா... அதுக்கு அப்புறம் எங்கயும் போக நேரமிருக்காது. அதுக்குள்ள உலகம் சுற்றும் வாலிபியா இருக்க பாருங்க.

Ippo

 கிச்சன் குயின்

ரு முறையாவது பிரியாணி சமைச்சிருக்கீங்களா ? சீனியர் ஸ்டார் ஹோட்டல் செஃப்  அளவுக்கு சமைக்க தெரியலைனாலும் பரவாயில்லை, நமக்கு தெரிஞ்சதை வெச்சு நாமும் கெத்து செஃப்னு காமிக்கணும். சமைக்க தெரியாம சமைச்சு அப்பாக்கோ இல்லை நண்பர்களுக்கோ கொடுத்து, அவங்க முகத்துல வர மரண பீதிய  பார்த்தாலும், கண் கலங்காம யூ-ட்யூப் பார்த்தாவது சமைச்சு அசத்தி சூப்பர் சாப்பாடுணு பேர் வாங்கி வச்சுக்கோங்க கேர்ள்ஸ்.

Ippo

சீக்ரெட் க்ரெஷ்

வாழ்க்கைல எல்லா பொண்ணுங்களுக்குமே, தனக்கு வரப்போற பையன் இது மாதிரிதான் இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த மாதிரி ஒரு பையன் இருந்தா, அவன் மேல க்ரஷ் இருக்கதான் செய்யும். விடிவி சிம்பு மாதிரி தைரியமான பையன்னு ஆரம்பிச்சு, இதயம் முரளி மாதிரி பையன் வரைக்கும் பொண்ணுங்கள டிஸ்டர்ப் பண்ணாத ஒரு சீக்ரெட் க்ரஷ் இருக்கும். அது உங்கள கிரியேட்டிவா யோசிக்க வைக்கும். இதுக்காக நீங்க தேடி அலைய வேணாம். உங்கள தேடி வருவதுதான் சீக்ரெட் க்ரெஷ்

Ippo

கல்யாணம்

ல்யாணம் ஒரு போரான விஷயமா இருக்க கூடாது. உங்களுக்கு பிடிச்ச மாதிரி. அப்பா, அம்மா யாரையும் கஷ்டப்படுத்தாத, அதேசமயம் உங்களோட எதிர்காலத்த மதிக்குற ஒரு பையனா இருந்தா, தைரியமா டிக் அடிங்க. அது அரேஞ் மேரேஜோ இல்ல லவ் மேரேஜோ. லெட்ஸ் டும் டும்.

Ippo

ராக் ஸ்டார்

நைட் சென்னைல ஒரு ஸ்கூட்டி ட்ரைவ், தியேட்டர்ல கேங்கா ஒரு படத்துல விசில் அடிச்சு படம், சேப்பாக்கத்துல ஒரு மேட்ச்... இதெல்லாம் மிஸ் பண்ணாதீங்க. சென்னை மட்டுமில்ல எந்த ஊர்ல இருந்தாலும் இப்படி ஹைப்பர் ஹாப்பி மோட்ல வாழ்ந்து பாருங்க. லைஃப் நல்லா இருக்கும்.   

Ippo

   

உரிமை

'நீ ஒரு பொண்ணு. இதுக்கு நீ சரிபட்டு வரமாட்ட. ஒரு பையன் இத செய்யட்டும்...' னு உங்க ஆபீஸோ, இல்ல வேற யாராவதோ சொன்னா, அவங்களுக்கு முன்னாடி உங்களால எதையும் செய்ய முடியும்ங்கிற ஆட்டிட்யூட்ட காமிங்க. பையனும், பொண்ணும் இங்க சரி சமம்னு ஃப்ரூப் பண்ணுங்க. உங்க உரிமைய யாருக்காகவும் விட்டு கொடுக்காதீங்க.

Ippo

'இப்போ இல்லேன்னா எப்போ..?!'

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் வசுமதி

 

 

Pin It

About the Author

Madhi Nila

Completed Stories
On-going Stories
  • NA
Add comment

Comments  
# RE: படித்ததில் பிடித்தது - இப்போ இல்லேன்னா எப்போ..?! - வசுமதிNaseema Arif 2017-06-09 19:11
Super Vasu mam.. :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - இப்போ இல்லேன்னா எப்போ..?! - வசுமதிTamilthendral 2017-06-07 06:15
Super share Vasumathi (y)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - இப்போ இல்லேன்னா எப்போ..?! - வசுமதிSubhasree 2017-06-05 21:58
Nice sharing (y) (y)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 14 Jan 2019 07:06
படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை

வீழ்வதாயினும், கௌரவத்தை இழக்காதே! வாழ்வதாயினும், மோசடி செய்யாதே!

வெற்றியின் பாதையில், தோல்விகளை கடந்தே ஆகவேண்டும்.

*************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...hu-merkolgal-ravai-7
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 12 Jan 2019 20:20
படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை

கெட்டுப்போன மனிதனை திருத்துவதைவிட, சிறந்த குழந்தைகளை உருவாக்குதல் சுலபம்.

நாம் நம்மிடம் இருப்பதை நினைத்து மகிழ்வதைவிட, இல்லாதவைகளை நினைத்தே வருந்துகிறோம்.

*********************

படிக்கத் தவறாதீர்கள்!

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...hu-merkolgal-ravai-6
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 08 Jan 2019 18:49
படித்ததில் பிடித்தது - அண்ணனின் அன்பு !! - சுமதி

ஆறு வயது சிறுவன் ஒருவன், தன் நான்கு வயது தங்கையை அழைத்துக் கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டிருந்தான்.

*****************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...annanin-anbu-sumathi
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 06 Jan 2019 22:11
படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை

நீ, உன் குழந்தைகளுக்கு என்ன செய்கிறாய் என்பது, முக்கியமல்ல; அவர்களாகவே செய்துகொள்ள நீ என்ன கற்றுக்கொடுக்கிறாய் என்பதே முக்கியம்! ஏனெனில், அதுவே அவர்களுக்கு வெற்றி தேடித்தரும்.

*******************
படிக்கத் தவறாதீர்கள்!!!!!

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...hu-merkolgal-ravai-5
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 05 Jan 2019 19:47
படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை

கடிகாரத்தை பார்க்காதீர்! அது செய்வதுபோல், செய்! இயங்கிக்கொண்டேயிரு!

***************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...hu-merkolgal-ravai-4

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top