(Reading time: 10 - 19 minutes)

புழுவாய்..பறவையாய்..மிருகமாய்..மனிதனாய்... - தங்கமணி சுவாமினாதன்

narathar

துவாரகை.கண்ணனும் ருக்மணியும் ஊஞ்சலில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.வாசலில் நாராயண..நாராயண என்று குரல் கேட்கிறது.குரலுக்குடையவர் நாரதர் என்பது இருவருக்கும் புரிய அவரை வரவேற்க இருவரும் வெளியே வந்தார்கள்.

வணங்குகிறேன் கண்ணா....வணங்குகிறேன் ருக்மணி தேவி...கண்ணனையும் ருக்மணியையும் வணங்கினார்  நாரதர்.

வாருங்கள்..வாருங்கள்...முனி புங்கவரே..பிரம்மன்னின் புத்திரருக்கு எங்களின் வணக்கம்...நாரதரை வணங்குகிறார்கள் கண்ணனும் ருக்மணியும்.

மூவரும் உள்ளே வந்து சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

நாரதரே.. நீங்கள் வந்த காரணம் என்னவோ?உங்கள் வருகைக்கு ஏதும் காரணமில்லாமல் இருக்காதே.. என வினவினார் கண்ணன்.

கண்ணா..புருஷோத்தமா...கேசவா..ராதே கிருஷ்ணா..ஆரம்பித்தார் நாரதர்.

போதும்.. போதும்....என் அனைத்து நாமங்களையும் நீங்கள் அறிந்தவர் என்பதை அறிவேன்..விஷயத்துக்கு வாரும்.இன்று என்ன கலகத்தை உண்டாக்கப் போரீறோ?மனம் கவலை கொள்கிறது..சொல்லிவிட்டுச் சிரித்தார் கண்ணன்.

இல்லை கண்ணா..இல்லை இல்லை...நான் இன்று உன்னோடு வம்பு செய்ய வரவில்லை..எனக்கு ஒரு சந்தேகம்..அதைத் தெளிபடுத்திக் கொள்ளவே வந்திருக்கிறேன்...

சித்தார் கண்ணண்..ம்ம்ம்..உங்கள் சந்தேகத்தால் இன்று யார் படாதபாடு படப்போகிறார்களோ?....

கண்ணா.....

சரி சரி..வாருங்கள் வெளியே செல்லலாம் கொஞ்சம் நடந்து கொண்டே பேசுவோம்...

ண்ணனும் நாரதரும் வெளியே வந்து பெசிக்கொண்டே நடந்தார்கள்.வழியில் சின்னக் காட்டுப் பகுதி ஒன்று குறுக்கிட்டது.

நாரதரே உம்முடைய சந்தேகத்தைக் கேட்கவே இல்லையே..கேளும்...

அது வந்து அது வந்து....கண்ணா..கிருஷ்ணா..மாதவா..மது சூதனா..

நிறுத்தும் நிறுத்தும் நாரதரே..உங்கள் சந்தேகத்தைக் கேட்கிரீறா நான் திரும்பிப் போகட்டுமா?பொய்க்கோபம் காட்டினார் கண்ணன்.

சரி..சரி..கோபம் வேண்டாம்..கேட்கிறேன் கேட்கிறேன்...என் சந்தேகத்தை.. கண்ணா..ஒரு ஜீவன் இவ்வுலகில் ஜனித்ததும் கண்களைத் திறந்தவுடன் யார் முகத்தைப் பார்த்தால் சகல சௌபாக்கியமும் கிட்டும்?..

சிரித்தார் கண்ணன்.இப்படி ஒரு விசித்திரமான சந்தேகமா உங்களுக்கு.? நாரதரே...

என்ன கண்ணா..?

அதோ பாருங்கள்...கண்ணன் விரலை நீட்டி ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார்.

அவ்விடத்தை உற்று நோக்கிய நாரதர்..ஆம் கண்ணா அங்கே மண் புழு ஒன்று கிடக்கிறது.அதனருகில் இபோதுதான் ஜனித்திருக்குமோ என்று எண்ணு படியாக மிகச் சிறிய மண்புழுக் குஞ்சு ஒன்று தெரிகிறது.

ஆம் நாரதரே நீங்கள் நினைப்பது சரிதான்.அந்த புழுக்குஞ்சு ஜனித்து நிமிடத்திற்கும் குறைவான நேரமே ஆகிறது. உடனடியாக அக்குஞ்சின் அருகில் செல்லுங்கள்.அது முதன் முதலில் கண்களைத் திறந்து இவ்வுலகைப் பார்ப்பதற்கு முன் உங்கள் முகத்தைப் பார்க்க வேண்டும்.அப்படி முதலில் உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் ஒரு ஜீவன் உலகில் ஜனித்தவுடன் யார் முகத்தைப் பார்த்தால் சகல சௌபாக்கியத்தையும் அடையலாம் என்ற உங்களின் சந்தேகத்தை அதனிடனம் கேளுங்கள்.ம்..போங்கள்.சற்றும் தாமதிக்காதீர்கள்  செல்லுங்கள் என்றார் கண்ணன்.

என்ன கண்ணா புழுவிடம் போய்...புரியாமல் பார்த்தர் நாரதர்.

சொன்னதைக் கேளுங்கள் முனி புங்கவரே விரைவாய்ச் செல்லுங்கள்..

நீ..சொன்னால் சரி கண்ணா..புழுவின் குஞ்சினருகில் விரைவாகச் சென்றார் நாரதர்.நாரதர் குஞ்சின் அருகில் சென்று குனிந்து அதன் முகத்தைப் பார்ப்பதற்கும் அது கண்களைத் திறப்பதற்கும் சரியாக இருந்தது.அது இவரைப் பார்க்கவும் இவர் அதனைப் பார்க்கவும் சரியாக இருந்தது.

இதுதான் சரியான சமயமென்று கருதி..குஞ்சுப் புழுவே என் சந்தேகம் தீர்ப்பாயாக..புதிதாய் ஜனித்த ஜீவனொன்று கண்களத் திறந்து முதலில் யார் முகத்தைப் பார்த்தால் சகல சௌபாக்க்யத்தையும் அடைய முடியும்?தயவு செய்து என் சந்தேகத்தைத் தீர்ப்பாயாக என்றார்.அவர் கேட்டு முடிப்பதற்குள் அந்த புழுக்குஞ்சு சுருண்டு உயிரை விட்டது.பயந்து அதிர்ந்து போனார் நாரதர்.அடுத்த நொடி கண்ணா.. கண்ணா என்று கத்தியபடியே கண்ணனை நோக்கி ஓடிவந்தார் நாரதர்.

கண்ணா அந்த புழுக்குஞ்சு என் முகத்தைப் பார்த்தது. என் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னே அதன் உயிர் போய்விட்டது..என்ன பாபம் இது என்றார் வருத்தத்துடன்.

போகட்டும் விடுங்கள்..வருத்தம் வேண்டாம்.அதோ பாருங்கள் விரலை நீட்டி ஒரு மரத்தைக் காண்பிக்கிறார் கண்ணன்.

ஆம்..மரம்..அதில் என்ன இருக்கிறது கண்ணா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.