(Reading time: 10 - 19 minutes)

நாரதரே அம்மரத்தில் ஒரு பொந்து தெரிகிறதல்லவா?அதில் ஒரு பறவை உள்ளது.அது இட்ட முட்டை ஒன்றிலிருந்து இன்னும் சில மிகக் குறைந்த நேரத்தில் குஞ்சு ஒன்று வெளி வரப்போகிறது.அக்குஞ்சு கண் திறப்பதற்குள் நீங்கள் அவ்விடம் சென்று அக்குஞ்சு கண் திறந்ததும் உங்களை பார்க்கும் படி செய்யுங்கள் உங்களின் சந்தேகத்தை அதனிடம் கேளுங்கள் அது உங்களுக்கு ஒருவேளை பதில் தரலாமென்றார் கண்ணன்.

அரை மனதுடன் அவ்விடம் சென்றார் நாரதர்.கண்ணன் சொன்னது போலவே பறவையின் முட்டை ஒன்றிலிருந்து குஞ்சு ஒன்று வெளிவந்தது.வந்த குஞ்சு நாரதரின் முகம் பார்த்தது.இவர் தன் கேள்வியை ஆரம்பிக்க முடிக்கும் முன்னரே அக்குஞ்சு பட்டென்று உயிரை விட்டது.அரக்கபரக்க கண்ணனிடம் ஓடி வந்தார் நாரதர்.கண்ணா..கண்ணா இதென்ன கொடுமை?நான் கேட்டதுமே குஞ்சு இறந்து விட்டதே..நான் என்ன செய்வேன்?புலம்ப ஆரம்பித்தார் நாரதர்.

புலம்ப வேண்டாம் பிரம்ம புத்திரரே..அது போகட்டும் விடுங்கள்..அதோ பாருங்கள் கொஞ்ச தூரத்தில் நின்றிருந்த பசு ஒன்றைக் காட்டினார் கண்ணன்.

என்ன கண்ணா...வேண்டாம் கண்ணா..

இல்லை..இல்லை நாரதரே..உமக்கான பதிலை என்னால் தரமுடியாது..அதோ அந்த பசு இன்னும் சில வினாடியில் கன்று ஒன்றை ஈனப் போகிறது..அக்கன்று உமக்கு ஒரு வேளை பதில் தரலாம்.எனவே அக்கன்று தாயின் வயிற்றிலிருந்து வெளிவரும் வினாடியில் அதனிடம் உங்கள் சந்தேகத்தைக் கேட்பீராக..

முடியாது கண்ணா..முடியாது..எனக்கு மிகவும் அச்சமாக உள்ளது..பசுவின் கன்றுக்கு ஏதும் நேர்ந்து விட்டால்..?

பயப்படாமல் செல்லுங்கள் நாரதரே...

கண்ணா...என்று குரல் எழுப்பிய படியே பசுவை நோக்கிச் சென்றார் நாரதர்.இவர் அதனருகில் செல்லவும் பசு கன்றை ஈனவும் சரியாய் இருக்கக் கன்றிடம் தன் கேள்வியைக் கேட்டார் நாரதர்.அக்கன்று கண்களைத் திரந்து இவர் முகத்தைப் பார்க்க அதன் மூச்சு அடங்கியது.கன்றும் இறந்தது கண்டு அஞ்சி அரண்டு கதறியபடியே ஒடிவந்தார் நாரதர்.

கண்ணா..என்ன பாபம்..என்ன பாபம்..பிறந்ததும் என் முகத்தை பார்த்த புழுக்குஞ்சு,பறவைக் குஞ்சு,பசுவின் கன்று மூன்றும் பட் பட்டென உயிரை விட்டு விட்டனவே..?ஏன் கண்ணா என்னை இத்தகைய பாவத்திற்கு ஆளாக்கினாய்?நான் என்ன செய்வேன்..என்ன செய்வேன் என தவித்துப் புலம்பினார் நாரதர்.

அழுது புலம்பாதீர் நாரதரே..கடைசியாய் நான் ஒன்று சொல்கிறேன் கேளும்..

ஐயோ.. வேண்டாம் கண்ணா..போதும் போதும் நீ சொன்னவரை..நான் கிளம்புகிறேன்.....

அதென்ன சந்தேகத்திற்கான விடையைத் தெரிந்து கொள்ளாமல் கிளம்புகிறீர்?..சற்று பொறும் நாரதரே..

இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது கண்ணா..?

சிரித்தார் கண்ணன்..நாரதரே..காசி நாட்டு மன்னனுக்கு இன்னும் சிறிது நேரத்தில் ஆண் மகவு ஒன்று பிறக்கப் போகிறது.தவமாய்த் தவமிருந்து பலகாலம் கழித்துப் பிறக்கப்போகும் அக்குழந்தைக்காக காசி மன்னன் வெகு ஆவலாய்க் காத்திருக்கிறான்.நீர் அன்னாடு சென்று மன்னனுக்குப் பிறக்கப் போகும் அக்குழந்தையைக் கண்டு அது கண் திறக்கும் வேளையில் உங்கள் சந்தேகத்தைக் கேட்பீராயின் இம் முறை உங்களின் கேள்விக்கும் சந்தேகத்திற்கும் கட்டாயம் பதில் கிடைக்கும்.ம்ம்..கிளம்புங்கள் நாரதரே..என்றார் கண்ணன்.

கண்ணா.. வேண்டாம் வேண்டாம்..புழுக்குஞ்சு,பறவைக் குஞ்சு, பசுவின் கன்று மூன்றும் மரித்தது போதாதா? அவை ஐந்தறிவானவை என்பதால் என்னை ஒன்றும் செய்யவில்லை.நான் தப்பினேன்.ஆனால் காசி ராஜன்..? நான் அவன் மகவைப் பார்க்க அது என் முகத்தை பார்க்க பார்த்த நொடி அக்குழந்தை மரிக்க .. காசி ராஜன் என்னைச் சும்மா விடுவானா..?நினைத்தாலே என் உடல் நடுங்குகிறது..மனம் பதைக்கிறது.. உனக்கு ஏன் கண்ணா இந்த விஷப் பரிட்சை..?நான் நன்றாய் இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா?...

படபடப்பாய் நடுங்கியபடி பேசினார் நாரதர்.

நாரதரே..அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது..நானிருக்கிறேன்..கவலைப் படாதீர்..கொஞ்சமும் தாமதிக்காதீர்..விரைந்து காசிராஜன் அரண்மனை செல்வீர் என்றார் கண்ணன்.

கொஞ்சமு மனமில்லாமல் காசிராஜன் அரண்மனைக்குக் கிளம்பினார் நாரதர்.கண்ணனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்றார் கொஞ்ச தூரம் வரை.

காசி ராஜன் அரண்மனை.ராணி பிரசவ அறையில்.இன்னும் சற்று நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று மருத்துவச்சி சொல்ல மன்னன் ஆவலோடும் கவலையோடும் அமர்ந்திருக்கிறார்.

நாரதர் அவ்விடம் செல்ல மன்னன் நாரதரை மகிழ்ச்சியோடு வரவேற்றான்.சரியான நேரத்திற்கு வந்திருப்பதாகச் சொன்னான்.

பிரசவ அறையிலிருந்து குவா..குவா..என குழந்தை அழும் குரல் கேட்டது.ஆண் குழந்தை பிறந்திருப்பதாக மருத்துவச்சி சொல்ல..மன்னன் நாரதரிடம் முதலில் நாரதரே குழந்தையைப் பார்த்து ஆசி வழங்கவேண்டும் என வேண்டினார்.நாரதருக்கு ஒரே பயம்.கிலி மனதைக் கவ்வியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.