(Reading time: 9 - 18 minutes)

பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 04 - கபீர் தாஸர் - பகுதி 02 - தங்கமணி சுவாமினாதன்

Kabir Das

விற்பதற்காகக் கொண்டுவந்திருந்த துணியை யாரும் வாங்காததால் மனக்கிலேசத்துடன் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்த கபீரின் கையிலிருந்து அந்தத் துணியை யாரோ ஒருவர் பிடுங்கிக்கொண்டு ஓட பதறிப்போய் அவரைத் துரத்திக்கொண்டு ஓடினார் கபீர்.துணியைக் கபீரின் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு ஓடியவர் சற்று நிதானித்து அங்கு நின்றுகொண்டிருந்த சிலரைப்பார்த்து பாருங்கள் இந்தத் துணியை..சாதாரணமான இந்தத் துணியை பீதாம்பரம் போல் எண்ணி அனியாய விலை சொல்கிறான் இவன்.இவன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று கபீரை இகழ்ந்தவாறே கையிலிருந்த துணியை இரண்டாகக் கிழித்தார் அந்த மனிதர்..

அதைக்கண்ட கபீருக்கு மிகவும் கோபமாகிவிட்டது.நீ எத்தனைத் துண்டாக இந்த பட்டுத்துணியைக் கிழித்தாலும் இது பீதாம்பரத்துக்குச் சமம்தான் என்று சொல்லியபடியே சட்டென அவரிடமிருந்து அந்த இரு கிழிந்த துண்டுகளையும் பிடுங்கிக்கொண்டு நடக்கலானார்.

அனால் அவரோ கபீரின் பின்னாலேயே ஓடிவந்தார்.நான் கிழித்த துணியை நானே விலைகொடுத்து வாங்கிக்கொள்கிறேன் கொடுத்துவிடு என்று சொல்லிய படியே கபீரிடம் மன்றாடினார்.கபீர் மறுத்து விட்டார்.அவரும் விடாமல் கெஞ்சினார்.கபீர் நடக்க நடக்க அவரும் கபீரின் பின்னாலேய நடந்துவந்தார்.அப்படி வரும்போது வஸ்திர  தானத்தின் மகிமையைப்பற்றியும்  துணியினைத் தன்னிடம் தந்தால் அத்துணியை பிருந்தாவனம் சென்று கண்ணனுக்கு அதை சாற்றுவேன் என்று சொல்ல கண்ணன் என்ற பெயரைக் கேட்டதும் கபீர் சட்டென அப்படியே நிறுவிட்டார்.கபீர் நின்றதும் அவரைப்பின் தொடர்ந்தவர் அப்பனே உம்மைப்பார்த்தால் மிகவும் தெய்வ நம்பிக்கை உள்ளவர்போல் தெரிகிறது.தெய்வத்தின் நாம உபாசனை மிகவும் சிறந்தது.அதுவும் ராமனின் நாமத்தை அல்லும் பகலும் உச்சரித்தால் பிரம்மஞானத்தை அடையலாம்.உமக்கு ராமனாம உபாசனை மிகவும் சிறந்தது என்று சொல்ல கபீர் அப்படியே மெய்மறந்து நின்றுவிட்டார்.

நான் ஞானத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரு குருவின் உபதேசம் வேண்டுமல்லவா?அவரை எங்கே சென்று தேடுவேன் என்றார் அவரிடமே..இறைவனே உனக்கு வழி காட்டுவான் என்றார் அவர்.

அவரிடம் இரண்டாய் கிழிக்கப்பட்ட துணியின் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு மீதமிருந்த ஒரு முழத் துண்டுடன் வீடு நோக்கி நடந்தார் கபீர்.

வரும் வழியில் பக்கிரி ஒருவர் கபீரை வழிமறித்து அந்த மீதமிருந்த ஒரு முழத் துண்டையும் கேட்க இனிமேலும் இதனை விற்க முடியாது... கேட்கும் இவருக்காவது யாசகமாகக் கொடுத்துவிடுவோம் என்று எண்ணியபடி அவரிடம் கொடுக்க முனைந்தார் கபீர்.முதலில் சந்தித்தவர் ராமனாமத்தை உச்சரிக்கும் படி கூறியது நினைவுக்கு வரவே ஜெய்சீதாராமா என்றபடியே அத்துணியை அந்த பக்கிரியின் கையில் வைத்தார் கபீர்.சட்டெனக் கையைப் பின்னுக்கிழுத்துக்கொண்டு கால்களை இரண்டடி பின்னே வைத்து நகர்ந்து கொண்டார் அந்த பக்கிரி.கபீரை கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.அடேய்..உன்னைப்பார்த்தால் முஸ்லீம் போல் தெரிகிறது.ஆனால் நீ இன்னொரு மதத்தின் இறைவனின் பெயரை அல்லவா உச்சரிக்கிறாய்?இஸ்லாத்துக்கு எதிராக அல்லவா நடந்து கொள்கிறாய்.உன்னிடமிருந்து யாசகம் பெறுவது மிகவும் இழிவான செயல்.உன்னை விடமாட்டேன்.நீ செய்த இக்கேவலமான் செயலை உன் பெற்றோரிடம் சொல்வேன்.உனக்கு தண்டனை வாங்கித்தருவேன் என்று கண்டபடி கபீரை ஏசிவிட்டு கபீரின் வீடு எதுவென விசாரித்துத் தெரிந்து கொண்டுஅவர் வீட்டிற்குச் சென்றவர் கபீரின் தாயிடம் கபீரைப் பற்றிக்கூற ஜிஜ்ஜாபீபீயும் வெகு கோபத்தோடு கம்பு ஒன்றினை எடுத்துக்கொண்டு கபீரை என்ன செய்கிறேன் பார் என்றபடி அவரைத் தேடி வந்தார்.தன்னைப் பற்றித் தன் தாயிடம் அந்த பக்கிரி சொல்லப்போவதாகச் சொல்லி தன் வீடு நோகிப்போனதும் பயத்தில் கபீர் அங்கிருந்த பாழடைந்த வீடு ஒன்றிற்குள் போய் ஒளிந்து கொண்டார்.அவர் உடல் பயத்தில் வெடவெடவென நடுங்கியது.பாவம் கபீர் மிகவும் சாதுப் பிள்ளை.

கபீர் அந்த வீட்டுக்குள் ஒளிந்திருப்பதை சிலர் அவர் தாயிடம் சுட்டிக்காட்ட வெகு கோபத்தோடு உள்ளே நுழைந்த கபீரின் தாய் கபீரின் முதுகில் கையிலிருந்ந கம்பால் பளீர் என்று வெகமாய் ஒரு அடி வைத்தார்.

வலிதாங்காமல் ஹரே ராமா..ஹரே ராமா..சீதாராமா..என்று உரக்கக் கத்தினார் கபீர்.அதே சயமயம் ஜிஜ்ஜாபீபீயின் முதுகிலும் அந்த அடிவிழுந்தது.ஐயோ என்று அலறினார் ஜிஜ்ஜாபீபீ.ஒன்றும் புரியவில்லை அவருக்கு.அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.கபீரின் முன் இறைவன் தோன்றி அவரை அணைத்துக்கொண்டார் மேலும் அடி விழாமல்கபீரை மறைத்துக்கொண்டார்.அப்போது இறைவன் ஸ்ரீமன்  நாராயணனாகவும், ஸ்ரீராமனாகவும் ,பாண்டுரங்கனாகவும் மாறிமாறி காட்சி அளித்தார்.ஒவ்வொரு நிலையிலும் அவர் முதுகில் ஜிஜ்ஜாபீபீ கபீரின் முதுகில் அடித்த அடியின் தழும்பு தெரிந்தது.புரிந்து போனது ஜிஜ்ஜாபீபீக்கு.

இறைவா கபீரை அடிப்பதாக நினைத்தேன் அந்த அடியை நீயல்லவா தாங்கியிருக்கிறாய்?என் மகனின் பொருட்டு அவனை ஆட்கொள்ள வந்த நீ இந்த சாதாரண பென்ணுக்குமல்லவா காட்சி கொடுத்தாய் என்று தொழுது அழுதுகதறினாள்.

இறைவன் ஜிஜ்ஜாபீபீயிடம்..கபீர் பக்தர்களுள் மிகவும் சிறந்தவன்.அவன் என்னால் இவ்வுலகிற்கு அனுப்பப் பட்டவன்.பக்திமார்கத்தைப் பரப்பவே அவனை இங்கு அனுப்பியுள்ளேன்.நீயும் உன் கணவனும் அவனைத் தவறாகக் கருத வேண்டாம்.அவனுக்கான குருவை அவன் தேடிக்கொள்வான் என்று சொல்லி மறைந்தார் இறைவன்.பாழந்த வீட்டிற்குள் நடந்த இன்னிகழ்ச்சி வெளியில் வேறு யாருக்கும் தெரியாது.கபீரின் மனம் தனக்கான குருவைத் தேட ஆரம்பித்தது.

  கபீரின் காலத்தில் ராமானந்தர் என்ற பிகப் பெரிய மகான் ஒருவர் இருந்தார்.தனது போதனைகளால் மக்களை நல்வழிப் படுத்துவதே அவரது குறிக்கோளாக இருந்தது.அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட கபீருக்கு ராமானந்தரை சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது.ஆனால் அவரால் சந்திக்கவே முடியவில்லை.ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.